search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Assembly"

    • மதுரை எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து விளக்கினர்
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மண்டி தெருவில் நடைபெற்றது.

    நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் ஜனார்த்தனம், ரவிச்சந்திரன், அருணகிரி, பூக்கடை கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், சேவூர் எஸ். ராமச்சந்திரன் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, கழகப் பேச்சாளர் சிட்கோ சீனு ஆகியோர்கள் கலந்து கொண்டு அண்ணாவின் அரசியல் வாழ்வு, அரசியல் பண்பாடு, நாகரிகம், தற்போதைய ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி பேசினர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அரங்கநா தன், மகேந்திரன், குணசீலன், துரை, மற்றும்தணிகாசலம், சுரேஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்று பெறும்.
    • கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வல்லம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி வல்லம் பேரறிஞர் அண்ணா சீரணி கலையரங்கில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது.

    தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை தெற்கு ஒன்றியம், மற்றும் வல்லம் பேரூர் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணைத் தலைவரு மான அருளானந்த சாமி வரவேற்றார்.தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்.

    டி.கே.ஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம் .ராமச்சந்திரன் து.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்று பெறும் என பேசினார்.

    இதில் மாநில நிர்வாகிகள் இறைவன், எல்.ஜி அண்ணா,தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி சிங்.இரா.அன்பழகன்,சுந்தர்ராஜ், துணை செயலாளர் கோவிந்த ராஜ், ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் வல்லம் நகர செயலாளர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார்.

    • தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம் நடந்தது.
    • முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரஜப்தீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் ஜனநாயக பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்டத்தலைவர் இப்ராகிம் சாபிர் தலைமை தாங்கினார். பொருளாளர் கரீம்ஹக்சாகிப், துணைத்தலைவர் யாசர்அரபாத், துணை செயலாளர்கள் மீரான், உஸ்மான், சித்தீக் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயலர் அன்சாரி, மாநில பொதுச்செயலர் அப்துல் கரீம் பேசினர்.

    தீர்மானங்களை மாவட்ட செயலாளர் தினாஜ்கான் வாசித்தார். இதில் மணிப்பூர் கலவரத்தில் பாதித்தோருக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பொது சிவில் சட்ட முன்னெடுப்பை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரஜப்தீன் நன்றி கூறினார்.

    • 35-வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு நடந்தது
    • தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில், வாலாஜாவில் பா.ம.க. கட்சி 35-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜானகிராமன், தலைவர் நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க . மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் முகைதீன், தலைமை நிலைய பேச்சாளர் தினபுரட்சி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    கூட்டத்தில் பா.ம.க. மாநில ,மாவட்ட ,நகர, ஒன்றிய கிளைகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பாரத் நன்றி கூறினார்.

    • த.மா.கா. சார்பில் இன்று மாலை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு திண்டல் அடுத்த வேளாளர் மருத்துவமனை வளாகத்தில் பிரம்மாண்ட முறையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    பொதுக்கூட்டத்திற்காக வேளாளர் மருத்துவமனை வளாகத்தில் பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. த.மா.கா. கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

    பொதுக்கூட்டத்தையொட்டி இளைஞர் அணி சார்பில் காமராஜர் ஜோதி விருதுநகரில் இருந்தும், மாணவரணி சார்பில் மூப்பனார் ஜோதி தஞ்சையில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. அதனை ஜி.கே.வாசன் எம்.பி. பெற்றுக்கொள்கிறார்.

    • சமத்துவ மக்கள் கட்சி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது.
    • கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை

    சமத்துவ மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர்கள் புறா மோகன் (மத்தி), பாலமேடு கார்த்திக் (வடக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நாளை (28-ந்தேதி) மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் விளக்க வுரையாற்றுகிறார். மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசுகிறார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கதிரேசன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சு, சிவாஜி பூமிநாதன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகிக்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத் குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    முதன்மை துணை பொதுச்செயலாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட நிர்வாகிகள் விளக்கவுரையாற்றுகின்றனர். முடிவில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரவி நன்றி கூறுகிறார்.

    மதுரையில் நடைபெற உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்ள வருகை தரும் நிறுவ னத்தலைவர் சரத்குமாருக்கு கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கார், வேன் மூலம் திரளான தொண்டர்கள் வருகை தர உள்ளனர்.

    இதையொட்டி கூட்ட ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. எனவே சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் திற்கு தலைமைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • முருகப்பெருமாள், சிவராமன், சோலை முருகன், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பில் ஏனாதி பூங்குளம் பகுதியில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் தலைமை தாங்கினார். கடலாடி ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் பத்மநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் பானுமதி ராமமூர்த்தி, செய்யது அலி பாத்திமா, நிர்வாகிகள் போகத்துரை, சிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வ.து.ந.ஆனந்த் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி மாரிநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பழனிவேல் பாண்டியன், மாணவர் அணி லட்சுமணன், நிர்வாகிகள் மணிமாறன், முருகப்பெருமாள், சிவராமன், சோலை முருகன், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • பேச்சாளர் வில்வ சக்திநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் பேசினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டையில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கிழவராஜன், துணைச் செயலாளர் தங்கப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி நாகமணி முன்னிலை வகித்தனர். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது நம்பி, பேச்சாளர் வில்வ சக்திநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் பேசினர். வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், துணை செயலாளர் அன்னமயில், நீதிராஜன், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி,பொருளாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட பிரதிநிதி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாயல்குடியில் தி.மு.க. சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய துணைச்செயலாளர்கள் லிங்கராஜ், ராணி ராஜ், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தில் சாயல்குடி தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்ப ரகு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜாராம், செல்லபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சி தலைவர்கள் மங்களசாமி, ஜெயலட்சுமி வடமலை, முனியசாமி, சாயல்குடி நகர் இளைஞரணி செயலாளர் விக்னேஷ்ராம், ஒன்றிய அவைத்தலைவர் தங்கபாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் லிங்கராஜ், ராணி ராஜ், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சி 16 கால் மண்டபம் பகுதியில் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 16 கால் மண்டபம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ஆறுமுகம், ஜெயராமன், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். பகுதி துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கவுன்சிலர்கள் சிவசக்தி ரமேஷ், கருப்பசாமி, வக்கீல் ஸ்ரீதர், தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் தி.மு.க. கிளைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தை அடுத்த அச்சுந்தன் வயல் கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நாகலிங்கம் தலைமையில் தமிழக அரசின் சாதனை 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஈஸ்வரி கருப்பையா, கருப்பையா, பரமேசுவரன் அனீஸ் பாத்திமா, பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவரும், கிளைச் செயலாளருமான லிங்கம் சசிகலா வரவேற்றார். முன்னாள் மதுரை மாநகராட்சி மேயர்- தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குழந்தைவேலு சிறப்புரையாற்றினார்.

    இதில் தி.மு.க. கிளைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. நிர்வாகி மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசியில் அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகாசி பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. தி.மு.க. 6-வது பகுதி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி பிரிவு இணைச்செயலாளரும், திருமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சபையர் ஞானசேகரன், காளிராஜன், சேவுகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகி மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×