search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gautam adani"

    • மோடி அதானி பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை.
    • அதானி பங்கு சந்தையின் பெரிய எருது.

    மும்பை :

    இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில் காதலர் தினத்தை 'பசு தழுவுதல் தினம்' ஆக கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்து இருந்தது. நேர்மறை சக்தியை பரப்பவும், மகிழ்ச்சிக்காவும் இந்த முயற்சியை முன்எடுத்து இருப்பதாக விலங்குகள் நலவாரியம் தெரிவித்தது.

    இதற்கு சில பா.ஜனதா தலைவர்களும் ஆதரவு அளித்தனர். அதே நேரத்தில் விலங்குகள் நல வாரியத்தின் முன்எடுப்பை கேலி செய்தும் சமூகவலைதளத்தில் மீம்ஸ்கள் பரவின.

    இந்தநிலையில் விலங்குகள் நல வாரிய முடிவுடன், தொழில் அதிபர் கவுதம் அதானி விவகாரத்தை ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே சிவசேனா விமர்சித்து உள்ளது.

    இதுதொடர்பாக அந்த கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் கூறியிருப்பதாவது:-

    அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் அதானி மோசடி பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. அதானி மோசடி பற்றி மக்கள் பிரதமரிடம் இருந்து விளக்கத்தை கேட்டனர். ஆனால் மோடி அரசு மீண்டும் மக்களை அமைதியாக்க மதத்தை ஒரு டோஸ் கொடுத்து உள்ளது.

    மோடி அதானி பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை. ஆனால் அவர்களின் அரசு பசு மாடு பற்றி பேசுகிறது. அதானி பங்கு சந்தையின் பெரிய எருது. ஆனால் மோடிக்கு அவர் புனிதமான பசு. பிரதமர் அதனை தழுவிக் கொண்டுள்ளார். அதன் பிடியை தளர்த்த அவர் தயாராகயில்லை. பல மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அவர்கள் ராமர் கோவில், பசு மாடுகளை கூறி ஓட்டு கேட்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொழில் அதிபர் கவுதம் அதானி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    • அதானி ஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை.
    • அம்பானி ஜி மீதும் தனிப்பட்ட முறையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும்போது இந்த பிரச்சினையை எழுப்பிய அவர், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளையும் அடுக்கினார்.

    இந்த நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்தார்.

    ஆனால் பிரதமரின் இந்த உரையில், தனது கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெறவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

    அதானி விவகாரத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    பிரதமர் அதிர்ச்சியில் இருந்தார், பதில் இல்லை. நான் எந்த சிக்கலான கேள்வியும் கேட்கவில்லை. அவர் (அதானி) உங்களுடன் எத்தனை முறை சென்றிருக்கிறார் என்றுதான் கேட்டேன். அவர் உங்களை எத்தனை முறை சந்தித்தார் என்பன போன்ற எளிய கேள்விகளைத்தான் முன்வைத்தேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை

    அதேநேரம் அவர் ஆற்றிய உரை எனக்கு திருப்தி அளிக்கவில்லை, ஆனால் உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அதாவது அதானி விவகாரத்தில் விசாரணை குறித்து எந்த பதிலும் இல்லை.

    பிரதமர் மோடிக்கு, அதானி நண்பர் இல்லை என்றால், அவர் விசாரணைக்கு ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு துறையில் போலி நிறுவனங்கள், பினாமி பணம் கைமாறியது குறித்து விசாரணை இல்லை. இது குறித்து பிரதமர் மோடி எதுவும் கூறவில்லை.

    இதன் மூலம் பிரதமர் மோடி, அதானியை பாதுகாத்து வருவது உறுதியாகி இருக்கிறது.

    இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு பிரச்சினை ஆகும். எனவே இந்த பிரச்சினையில் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருக்க வேண்டும்.

    இது ஒரு மிகப்பெரிய ஊழல். ஆனால் மோசடி என்று கூட பிரதமர் மோடி சொல்லவில்லை. அவர் நிச்சயமாக அதானியை பாதுகாக்க முயற்சிக்கிறார். அதை நான் புரிந்து கொண்டேன். அதன் பின்னால் காரணங்களும் உள்ளன.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இதற்கிடையே மக்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அதானி, அம்பானி ஆகியோர் மீது காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நாடு வளர வேண்டும், அதிக தொழிலதிபர்கள் உருவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதானி ஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அதைப்போல அம்பானி ஜி மீதும் தனிப்பட்ட முறையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்பதை வெளிப்படையாக கூறிக்கொள்கிறேன்' என்று கூறினார்.

    • உண்மை வெளிவர வேண்டும்.
    • கோடிக்கணக்கான ருபாய் ஊழல் வெளிவர வேண்டும்.

    புதுடெல்லி :

    அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி புகார் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

    அந்த அமளி காரணமாக பாராளுமன்றம் முடங்கி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் பல ஆண்டுகளாக மத்திய அரசு பற்றியும், தொழில் அதிபர்களுடனான அதன் நெருக்கம் பற்றியும் பேசி வருகிறேன். அதானி விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஆனால், மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை. அதைக்கண்டு பயப்படுகிறது.

    பிரதமர் மோடி அந்த விவாதம் நடப்பதை தவிர்க்க தன்னால் இயன்றதை எல்லாம் செய்வார். அதற்கு காரணம் இருக்கிறது. அது உங்களுக்கே தெரியும்.

    ஆனால் உண்மை வெளிவர வேண்டும். கோடிக்கணக்கான ருபாய் ஊழல் வெளிவர வேண்டும். அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.
    • கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    நியூயார்க்:

    அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.

    கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்த அதானியை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24-ந் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
    • ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி அந்த இடத்தை இழந்தார்.

    புதுடெல்லி:

    ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24-ந் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 மோடி டாலர்களை (சுமார் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலர்களுடன் (சுமார் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-வது இடத்தில் உள்ளார்.

    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலர்கள் (சுமார் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி அந்த இடத்தை இழந்தார். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

    • அவர் 4-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார்.
    • ஆசியா, இந்தியாவின் ‘நம்பர் 1’ பணக்காரராக நீடிக்கிறார்.

    புதுடெல்லி :

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இந்தியாவின் 'நம்பர் 1' பணக்காரர், தொழில் அதிபர்.

    கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்ததால், உலகப் பணக்காரர்களில் 2-வது இடத்தைப் பிடித்து பிரமிப்பூட்டினார் கவுதம் அதானி. பின்னர் அவர் 3-வது இடத்துக்கு இறங்கினாலும், நீண்ட காலம் அதில் நீடித்திருந்தார்.

    இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இக்குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

    அவை 3-வது நாளாக திங்கட்கிழமையும் சரிவுடன் வணிகமானதால் அவரது சொத்து மதிப்பு 84.4 பில்லியன் டாலர்களாக குறைந்தது.

    இதனால், புளூம்பெர்க் நிறுவன பட்டியல்படி உலகின் 'டாப்-10' பணக்காரர்கள் வரிசையில் இருந்து அதானி வெளியேற்றப்பட்டார். அவர் 4-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார்.

    ஆனால் தற்போதும் அதானி, ஆசியா, இந்தியாவின் 'நம்பர் 1' பணக்காரராக நீடிக்கிறார். இருந்தபோதும் அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி தொடர்ந்தால், அவர் ஆசிய அளவில் முதலிடத்தை இழக்கக்கூடும்.

    இந்திய அளவில் அதானிக்கு 2-வது இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி உள்ளார்.

    இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 4 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்துக்கு கவுதம் அதானி சரிவு.
    • அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை.

    மும்பை:

    பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியதன் எதிரொலியாக, அந்தக் குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தன. மேலும், வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கியிருந்த முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதனை குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினர். இதன் காரணமாக, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டே நாட்களில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சிடைந்தது.

    இதன் மூலம், கவுதம் அதானியின் சொத்து மதிப்பிலும் ரூ.4.17 லட்சம் கோடி குறைந்ததால், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த அவர். தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னதாக, அந்த ஆய்வறிக்கை குறித்து அதானி குழுமத்தின் சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் எச்சரித்திருந்தது.

    இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், தங்களது அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை. 2 ஆண்டு கால தீவிர ஆய்வுக்குப் பிறகே அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது அதனை சட்டரீதியில் எதிர்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம் என்று சவால்விட்டது.

    தற்போது நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். பங்குச் சந்தையின் இரண்டே வர்த்தக நாள்களில் அதானி குழுமம் ரூ.4.17 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது தொழில்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த செப்டம்பர் மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் போசஸ் அவரை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறினார்.
    • கடந்த 2 வாரங்களாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்ததால் மீண்டும் கவுதம் அதானி 3-வது இடத்துக்கு வந்து உள்ளார்.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் அதிபராக திகழ்ந்து வருகிறார். இதனால் அவர் உலக பணக்கார பட்டியலில் இடம் பெற்று படிப்படியாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்தார். பின்னர் 4-வது இடத்துக்கு சென்றார்.

    கடந்த செப்டம்பர் மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் போசஸ் அவரை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறினார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்ததால் மீண்டும் கவுதம் அதானி 3-வது இடத்துக்கு வந்து உள்ளார்.

    அவரது சொத்து மதிப்பு 10 லட்சத்து 87 ஆயிரம் கோடியாகும். போர்ப்ஸ் உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்கும், 2-வது இடத்தில் எல்.வி.எம்.எல் நிர்வாக இயக்குனர் பெர்னார்ட் அர்னால்டு ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி பெரும் பணக்காரர்களில் எச்.சி.எல். நிறுவனர் சிவ நாடார் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
    • கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் ரூ.1600 கோடி சேர்த்திருக்கிறார்.

    புதுடெல்லி :

    நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த்-ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

    அதன்படி, ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியை முந்தி, அதானி குழும தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ஆகும். சமீபத்தில் குறுகிய காலத்துக்கு உலக அளவில் 2-வது பெரும் பணக்காரராக விளங்கிய அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் 2 மடங்குக்கும் அதிகமாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் தினமும் அவரது கணக்கில் ரூ.1600 கோடி சேர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டில் அதானியைவிட ரூ.2 லட்சம் கோடி அதிகம் பெற்று முகேஷ் அம்பானி முன்னணியில் இருந்தார். தற்போது அவரை முந்தியிருக்கும் கவுதம் அதானி, ரூ.3 லட்சம் கோடி அதிகமாக பெற்றிருக்கிறார். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், உலகிலேயே பெரிய தடுப்புமருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் சைரஸ் பூனாவாலா 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 400 கோடி ஆகும்.

    மொத்தம் ஆயிரத்து 103 பேர் அடங்கிய இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு 149 பேர் புதிதாக இணைந்திருக்கிறார்கள்.

    இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 185 பேர் இடம்பிடித்திருக்கிறார்கள்.

    டெல்லி பெரும் பணக்காரர்களில், ரூ.1.86 லட்சம் கோடியுடன் எச்.சி.எல். நிறுவனர் சிவ நாடார் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

    தலைநகர பெரும் பணக்காரர்களில் 12 பேர் பெண்கள்.

    இந்த பட்டியல் குறித்து ஹுரன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை ஆய்வாளருமான அனாஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில், 'உக்ரைன் போர், பணவீக்கம் போன்ற நெருக்கடிகளையும் தாண்டி, நடப்பு ஆண்டில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்கள் அனைவரின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடி ஆகும்' என்றார்.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • கவுதம் அதானி முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து பேசினார்.

    மும்பை:

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் என இரண்டு பிரிவாக கட்சி உடைந்துள்ளது.

    இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடந்துள்ளது. இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

    மாநில அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வரும் சூழ்நிலையில் அதானி - உத்தவ் தாக்கரே சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அர்னால்ட் தற்போது மொத்த சொத்து மதிப்பு 153.5 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

    உலகளவில் பணக்காரர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில், அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    முதல் தலைமுறை தொழில்முனைவோரான அதானி, உள்கட்டமைப்பு, சுரங்கம், எரிசக்தி மற்றும் பிற துறைகளை உள்ளடக்கிய ஏழு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய அதானி குழுமத்திற்கு தலைமை தாங்குகிறார்.

    இந்நிலையில், கௌதம் அதானி, 154.7 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். எலோன் மஸ்க் 273.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.

    கடந்த மாதம் வெளியிடப்பட்ட உலக பணக்காரர் பட்டியலிலும் அதானி, அர்னால்ட்டை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் ஜெஃப் பெசோஸ்க்கு அடுத்தபடியாக இருந்தார்.

    அர்னால்டின் தற்போது மொத்த சொத்து மதிப்பு 153.5 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அது இன்று 4.9 பில்லியன் டாலர் அல்லது 3.08 சதவீதம் சரிந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் 49.7 பில்லியன் டாலரில் இருந்து 2.3 பில்லியன் டாலர் சரிந்து நான்காவது இடத்தில் உள்ளார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

    • அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • முகேஷ் அம்பானிக்கு 11வது இடம் கிடைத்துள்ளது.

    இந்திய தொழில் அதிபரான கவுதம் அதானி, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசை பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது தற்போதைய சொத்து 137.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. அதானி குழுமம் துறைமுகங்கள், தளவாடங்கள், சுரங்கம், எரிவாயு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் உள்பட பல்வேறு துறைகள் தொடர்பான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது.

    உலக பணக்காரர்கள் தரவரிசையில் அமெரிக்கா தொழில் அதிபர் எலோன் மஸ்க் 251 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 153 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார். 91.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×