search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja smuggling"

    • புளியங்குடி ஊருக்கு மேற்கே தம்பிரான்குளம் பகுதியில் 10 பேர் கும்பல் கஞ்சாவை விற்பனைக்காக பொட்டலம் போட்டு கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 4 பேர் தப்பி ஓடி விட்ட நிலையில் 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புளியங்குடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புளியங்குடி ஊருக்கு மேற்கே தம்பிரான்குளம் பகுதியில் 10 பேர் கும்பல் கஞ்சாவை விற்பனைக்காக பொட்டலம் போட்டு கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம், காவலர்கள் முகமது கனி, சக்தி, முருகேசன், பால்ராஜ், தர்மராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 10 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அப்போது அதில் 4 பேர் தப்பி ஓடி விட்ட நிலையில் 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாசு தேவநல்லூர் உள்ளார் பகுதியை சேர்ந்த காசிதுரை(வயது 22), புளியங்குடி அருகே சுண்டங்காட்டை சேர்ந்த மருது பாண்டி(24), கிருபாகரன்(28), விக்னேஷ்(20), ராஜேஷ்(22), திருப்பதி(48) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 2 அரிவாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மருது பாண்டியின் சகோதரர் இளங்கோவன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் போலீசார் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது.
    • கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி பஸ் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் திருத்தணியை அடுத்த சிவாடா காலனியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், தாழவேடு காலனியைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரிந்தது.

    கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஆந்திராவில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை ஆகியவை கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவே அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த மதன்குமார் (30) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி மதுரையில் விற்று வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எஸ்.எஸ்.காலனி போலீசார் கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த செக்கானூரணியை சேர்ந்த குபேந்திரன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் விளாச்சேரி மெயின் ரோடு முனியாண்டி புரம் சந்திப்பில் கஞ்சா விற்ற மகாவிஷ்ணு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • தேவகோட்டையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் காவல்துறையினர் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தேவகோட்டை நகரில் இளைஞர்களிடையே கஞ்சா புழக்கத்தில் உள்ளது.

    இதனை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் மற்றும் போலீசார் வாகன சோதனையை ஈடுபட்டனர்.

    அப்போது பழைய சருகணி ரோடு இம்ரான் நகரை சேர்ந்த சலீம் மகன் முகமது இஸ்மாயில் (வயது 20), பழைய சருகணி ரோடு சேக் அப்துல்லா மகன் முகமது யூசுப் (23) ஆகிய இருவரும் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி கடத்தி வந்தார்கள்? என்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.
    • உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.

    மதுரை:

    மதுரைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியாண்டி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    மதுரை ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு இன்று அதிகாலை வந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது அதில் 43 கிலோ கஞ்சா, குட்கா மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் ஆகியவை கடத்திச் செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓடைத்தெரு, வள்ளுவர் நகரை சேர்ந்த காதர் பாட்ஷா (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • வானூர் அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் கஞ்சா, புகயிலைப் பொருட்கள் மற்றும் மது கடத்தல் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட செயல்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையி லான போலீசார் நேற்று புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் 4 வழிச்சாலையில் கொண்டா மூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.

    அப்போது அந்த வழி யாக 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த னர். உடனே போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்த னர். அந்த சோதனையில் அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த அதே பகுதி யை சேர்ந்த தினேஷ் (வயது 24), ரூபன் ராஜ் (23), வாஞ்சிநாதன் (25) உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகூரில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    நாகூர்:

    நாகூர் பாலத்தடி அருகில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும் வகையில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இதில் 1 கிலோ கஞ்சா இருந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் வேந்தன் (வயது 30) என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேந்தனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பத்திரகாளி மற்றும் போலீசார் அங்குள்ள பைபாஸ் சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர்.

    அவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை வேறு பாதையில் திருப்பி தப்ப முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். விசாரணையில் அவர் சீதக்காதிநகரை சேர்ந்த முகமது யூசுப்(21) என்பதும், அவர் ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது யூசுப்பை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தப்பட்ட 8¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.
    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, மேலூர், செக்கானூரணி, கருப்பாயூரணி, சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் மதுரை நகர் ஆகிய பகுதிகளில் சமூக விரோதிகளால் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    இந்த நிலையில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் இன்று காலை பஸ் நிலையப்பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    அப்போது 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது.

    உடனே போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்ததில், அவர் உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த சிவா என தெரியவந்தது.

    இவர் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து உசிலம்பட்டியில் உள்ள சிலரிடம் கொடுக்க இருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு போலீசார் நடத்திய வாகன சோதனையில் கஞ்சா கடத்திய வாலிபர் கைதானார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு போலீசார் நேற்று இரவு சென்னைதிருப்பதி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் வாகன சோதனை சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் போலீசாரைக் கண்டதும் ஓடத் தொடங்கினார்.

    போலீசார் அவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவரிடம் கால் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவரது பெயர் பிரேம்நாத் (23) குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம், கஞ்சா மற்றும் போதைபொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மண்டம் அருகே உள்ள சீனியப்பா கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் அடுத்து ராமேசுவரம் டி.எஸ்.பி. (பயிற்சி) கோபாலகிருஷ்ணன், உச்சிப் புளி சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், தனிப் பிரிவு தலைமை காவலர்கள் வரதராஜன், ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சீனியப்பா கடற்கரையில் ஒரு படகு அருகே மூட்டை ஒன்று கேட்பாராற்று கிடந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்தபோது. அதில் 152 பாக்கெட்டுகள் கொண்ட 304 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக சுந்தர மடையானை சேர்ந்த முருகன் (வயது 45), ராமேசுவரம் நடராஜபுரத்தை சேர்ந்த ஜெயகணேஷ் (35), கீழக்கரை பஞ்சந்தாங்கியை சேர்ந்த கிட்டிஸ்வரன் என்ற முத்து (37) ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும்.

    இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக கச்சத்தீவு அருகே 4 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் இன்று கைது செய்தனர். #TNfishermenheld #LankanNavy #ganjasmuggling
    கொழும்பு:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள கடலோர குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகை கச்சத்தீவு அருகே இன்று இலங்கை கடற்படையினர் இன்று வழிமறித்தனர்.

    அவர்களை கண்டவுடன் படகில் இருந்தவர்கள் சில பொட்டலங்களை கடலில் தூக்கி வீசியதாகவும், அதை மீட்டு சோதனை நடத்தியபோது பொட்டலங்களுக்குள் 40 கிலோ கஞ்சா இருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்ததாக தெரியவந்துள்ளது. #TNfishermenheld #LankanNavy #ganjasmuggling
    ×