search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandhi statue"

    ஊட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மரியாதை செலுத்தினார்.
    ஊட்டி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து காதி அங்காடியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கதர் ஆடைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மக்கள் ஆரம்ப காலத்தில் கதர் ஆடைகள், போர்வைகள், துணிகளை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். தற்போதும் கிராமப்பகுதிகளில் கதர் ஆடைகள் பயன்பாடு இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டிற்கு ரூ.72 லட்சம் மதிப்பிற்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது. கதர், பட்டு, பாலியஸ்டர் துணி ரகங்களுக்கு 30 சதவீதம், வெப்ப ஆடையாக பயன்படுத்தப்படும் உல்லன் துணிகளுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலக பகுதிகளில் தற்காலிகமாக கதர் ஆடைகளை விற்பனை செய்ய விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கதர் ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் கிராம கதர் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களை மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், காதி அங்காடி உதவி மேலாளர் கனகலதா, மத நல்லிணக்க அமைதிக்குழு தலைவர் கிருஷ்ணன், செயலாளர் முகமது அலி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
    கேரளாவில் காந்தி சிலையை அடித்து நொறுக்கி தப்பி ஓட முயன்ற பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொச்சி கச்சேரிபடியில் காந்தி சதுக்கம் உள்ளது. இந்த சதுக்கத்தில் காந்தி அமைதி பவுண்டே‌ஷன் சார்பில் காந்தி சிலை நிறுவப்பட்டது. இந்த பவுண்டே‌ஷனில் நீதிபதிகள், வக்கீல்கள், டாக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொறுப்பாளர்களாக உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை காந்தி சிலை அருகே வந்த ஒரு வாலிபர் காந்தி சிலையை அடித்து நொறுக்கினார். இது குறித்து பவுண்டே‌ஷன் பொறுப்பாளர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    இது குறித்து கொச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதனை வைத்து வாலிபரை தேடிய போது அவர் அதே பகுதியில் மறைந்திருந்தார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த தீபசென்ரல் (வயது 32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தியது ஏன் என்று தீபசென்ரலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மூன்றுநாள் பயணமாக சிங்கப்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 2-ம் தேதி அங்கு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்கிறார். #PMModi #MahatmaGandhi
    சிங்கப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் பயணமாக சிங்கப்பூர் நாட்டுக்கு செல்கிறார். இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதிக்கு செல்லும் மோடி, அங்குள்ள நம் நாட்டவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்தியாவில் உள்ள கைவினை கலைஞர்கள் குறுகிய காலம் சிங்கப்பூருக்கு சென்று தங்களது தொழில் திறமையை அங்குள்ளவர்களுக்கு பயிற்றுவிக்கும் வகையில் புதிய கலைக்கூடத்தை திறந்து வைக்கும் அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார்.

    சவுத் பிரிட்ஜ் ரோடு பகுதியில் உள்ள நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யும் பிரதமர் மோடி, மெரினா பே பகுதியில் உள்ள பிரபல கிளிஃபர் பையர் உணவகத்தின் அருகே ஜூன் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்கிறார். #PMModi #MahatmaGandhi
    ×