search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganapati"

    பொருளாதார நிலையில் ஏற்படும் மந்தநிலை, கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் ஏற்படும் துயரம் போன்ற கஷ்டங்களை நீக்க பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.

    நாம் வணங்கும் விநாயகர்கள் பெரும்பாலும் ஒற்றை தலையுடன் தான் பார்த்து இருப்போம். ஆனால் சில ஆலயங்களில் ஐந்து முகத்துடன் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். ஒரு முகத்துடன் உள்ளபோதே எல்லா வினைகளையும் களைபவர் ஐந்து முகத்துடன் இருக்கும்போது பல மடங்கு அருள்மழை பொழிவார். ஐந்து முக விநாயகருக்கு ஹேரம்ப விநாயகர் என்று பெயர்.

    ஹேரம்ப கணபதி என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஐந்து முகங்களை கொண்ட விநாயகர் திருவுருவம் நமது நாட்டை விட அண்டை நாடான நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தாந்திரிய வழிபாட்டுக்கு ஏற்ற திருவுருவமாக ஹேரம்ப கணபதி விளங்குகிறார்.

    ஹேரம்ப என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அர்த்தம் “உதவியற்றவர்களை பாதுகாப்பவர்” என்று பொருள். முத்தல புராணம், பிரம்ம வை வர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் மற்றும் கணேச புராணத்தில் ஹேரம்ப கணபதி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. பசுமை கலந்த கருமை நிறத்துடன் ஐந்து முகத்துடன் காணப்படுவார். அபயம், விரதம், பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் என பத்து கரங்களில் தாங்கி சிம்ம வாகனத்தில் அமர்ந்து இருப்பதே இவர் திருவுருவம். ஆயினும் இவ்வுருவ அமைப்பு ஆலயங்கள் தோறும் சற்று மாறுபடுகின்றன.

    பொருளாதார நிலையில் ஏற்படும் மந்தநிலை, கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் ஏற்படும் துயரம் போன்ற கஷ்டங்களை நீக்க பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.

    மேலும் ஏகாதசி திதியில் விவசாயம், வேளாண்மை, காவல்துறை, விஞ்ஞானம், பொறியியல், வரி துறைகளில் வேலைபுரிவோர் வணங்கிட சகல நன்மையும் பெறுவர். ஹேரம்ப விநாயகர் எனும் பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது.

    சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம். ஒரே வரிசையில் ஐந்து தலையுடன் உள்ளார்.

    நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில் பஞ்சமுக விநாயகரை வழிபடலாம். மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு செய்யலாம். நான்கு திசையில் தலையும், அதற்கு மேல் ஒரு தலையுமாக காட்சி தருகிறார்.

    விருதுநகர் புளிச்சகுளம் பகுதியில் ஐந்து முகங்களுடன் பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். சேலம் கந்தாஸ்ரமத்தில் 16 அடி உயரத்தில் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் அருள்புரிகிறார். திருவானைகாவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சுவாமியின் பின்புறத்தின் ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் அருள்புரிகிறார். கோவிந்தவாடி கயிலநாதர் கோவில் தூணில் 10 கரத்துடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.
    ‘ஓம்’காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழ்பவர் விநாயகர். விநாயகரை பற்றிய சில அரிய வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    ஐங்கரன்

    பரம்பொருளான ஈஸ்வரன் செய்யும் தொழில்கள் ‘பஞ்சகிருத்யங்கள்’ எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர்.

    அதனால் ‘ஐங்கரன்’ என்று பெயர் பெற்றார். நான்கு கால்களைக் கொண்ட பிராணிகள் முன்னங்கால்களையே, தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார்.

    இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

    நர்த்தன விநாயகர்

    விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி சமேத கயிலாயநாதர் கோவிலில் காணலாம். இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    எனவே இவரை ‘நர்த்தன விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னிதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி ஆலயத்தில் மூஞ்சூறு மீது விநாயகர் நடனமாடும் தோற்றம் என்பதால், அவரது சன்னிதிக்கு முன்பாக எலி வாகனம் இல்லை.

    நவக்கிரக நாயகன்

    ‘ஓம்’காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழ்பவர் விநாயகர். இவரது உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன. விநாயகரின் நெற்றியில் சூரியன் அருள்கிறார்.

    அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும், தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும். 
    இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

    ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம்
    ஹ்ரீம் க்லீம் க்லௌம்
    கம் கணபதயே
    வர வரத ஐம் ப்ளூம்
    சர்வ வித்யாம்
    தேஹி ஸ்வாஹா
    ×