search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fried Recipes"

    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் பன்னீர் பக்கோடா. இன்று இந்த பன்னீர் பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 2 கப்
    கடலை மாவு - 2 கப்
    சாட் மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - தேவைக்கு
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க சிக்கன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    முட்டை - 1
    கறிமசாலா துள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

    மிக்சியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் விழுதை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.

    பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கறிமசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

    பின்னர் இவற்றுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். அரைத்த சிக்கன் விழுதுடன் எல்லாவற்றையும் சேர்த்த பிறகு ஒன்றாக கலந்து வடை மாவு பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை வடை போல தட்டி எண்ணெயில் போட்டு வேக விடவும். நன்கு பொன்னிறமானதும் எடுத்து விடவும்.

    சூடான சிக்கன் வடை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஸ்வீட் கார்ன், சீஸ் சேர்த்து நக்கட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்
    மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 1
    பிரெட் தூள் - கால் கப்
    சீஸ் துருவல் - கால் கப்
    மைதா மாவு - கால் கப்
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.

    பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.

    அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் ரெடி. சாஸ் உடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேளராவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். இன்று சூப்பரான இந்த வாழை இலை மீன் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன்  - அரை கிலோ
    சின்ன வெங்காயம்  - 10
    மிளகாய் பொடி  - ஒரு ஸ்பூன்
    கரம்மசாலா பொடி   - 2 ஸ்பூன்
    பூண்டு   - 4
    இஞ்சி - சிறிது
    புதினா, கொத்தமல்லி இலை - சிறிது
    கறிவேப்பிலை  - 2 ஆர்க்கு
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்   - 2 ஸ்பூன்



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

    வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழைஇலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான வாழை இலை மீன் வறுவல் ரெடி.

    குறிப்பு - மீனை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சோத்து கலந்து 5 நிமிடம் தோசை கல்லில் போட்டு வறுத்து அதன் பின்னர் மசாலா சேர்த்து செய்யலாம். மீனை தோசை கல்லில் போட்டு வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்தும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்கள். வயதானவர்கள் இவ்வாறு செய்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஹனி சில்லி பொட்டேடோ. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 250 கிராம்,
    உப்பு - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் - 2 கப்,
    அரிசி மாவு - 5½ டீஸ்பூன்,
    மைதா, எண்ணெய் - தலா 5 டீஸ்பூன்,
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
    வெள்ளை எள் - 3½ டீஸ்பூன்,
    நறுக்கிய பூண்டு - 3 பல்,
    பச்சைமிளகாய் - 3,
    வெங்காயம் - 1/2,
    குடைமிளகாய் - 1/4,
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
    ரெட் சில்லி சாஸ், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
    டொமேட்டோ கெட்சப், தேன் - தலா 2 டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன் தண்ணீர்,
    ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளமாக நறுக்கிய கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    குடைமிளகாய், ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.

    இந்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, மைதா தலா 1 டீஸ்பூன் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.

    மற்றொரு கிண்ணத்தில் மீதியுள்ள அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து தண்ணீர்  ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    இந்த மாவில் உருளைக்கிழங்கை முக்கியெடுத்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    வெறும் கடாயில் 2½ டீஸ்பூன் எள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சைமிளகாய், எள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, சோயாசாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், டொமேட்டோ கெட்சப், தண்ணீர்  ஊற்றி கொதித்ததும், கரைத்த கார்ன்ஃப்ளார் கலவை ஊற்றி கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன், வறுத்த உருளைக்கிழங்கு, தேன் சேர்த்து கிளறி கடைசியாக வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    சூப்பரான ஹனி சில்லி பொட்டேடோ ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பிரெட் க்ரம்ஸ் - 3½ டீஸ்பூன்,   
    கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    செடார் சீஸ் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

    ஸ்மைலி செய்ய...

    ஸ்பூன் - 1,
    ஸ்ட்ரா - 1,
    ரவுண்ட் கட்டர்- 1.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    பிசைந்த மாவில் பெரிய உருண்டையாக எடுத்து அதை நன்றாக உருட்டி கொள்ளவும்.

    பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் மாவை வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தடியாக தேய்க்க வேண்டும்.

    பின்னர் ரவுண்ட் கட்டர் கொண்டு வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும்.

    அடுத்து வாய்க்கு ஸ்பூனால் வரைய வேண்டும்.

    இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்க வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும்.

    சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி ரெடி.

    குறிப்பு: ஸ்மைலிகளை சிப்லாக் பேக் அல்லது பாக்ஸில் போட்டு மூடி ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து அதிக சூடான எண்ணெயில்  பொரித்தெடுத்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த இரண்டையும் சேர்த்து கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்கு வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
    உருளைக்கிழங்கு - ஒன்று
    குடைமிளகாய் (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
    வேகவைத்து, மசித்த கேரட், பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
    வெங்காயம் - 1
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    பிரெட் தூள், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாதத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும் (அரைக்க வேண்டாம்; கையால் மசித்தால் போதும்).

    கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பிறகு, அதில் வேகவைத்த சாதம், மசித்த உருளைக்கிழங்கு, காய்கறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் வதக்கவும்.

    அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கையால் நன்றாகப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்யவும்.

    லேசாக பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுத்து, லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான சூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் ரைஸ் கட்லெட் ரெடி.

    ஒரு கைப்பிடி சாதம்கூட சாப்பிடாத குழந்தைகளை ஒரு கப் சாதம் சாப்பிட வைக்க இது எளிய முறை. சாதம், காய்கறிகள் எல்லாம் இதனுள்ளேயே இருப்பதால் தேவையான சத்தும் கிடைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காரசாரமான மொறு மொறுப்பான இத்துக்கடாவை தேனீருடன் உண்ண நாவிற்கு இனிமையாக இருக்கும். இன்று இந்த சுவையான கோதுமை துக்கடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 400 கிராம்
    மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
    வெள்ளைப் பூண்டு - 5
    க‌ல் உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


     
    செய்முறை

    வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

    கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிது எண்ணெய் தடவி அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
     
    பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும். சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது. பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும். அவ்வப்போது சதுரத்துண்டுகளை போட்டு கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் அடங்கியதும் எடுத்து விடவும்.

    சுவையான கோதுமை துக்கடா தயார்.

    இது ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வாழைக்காய் மிளகு வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    கடுகு - 1 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 5
    மிளகு - 3 டீஸ்பூன்



    செய்முறை :

    வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.

    வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

    வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!!!
     
    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
     
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நூடுல்ஸ் - 200 கிராம்
    மைதா மாவு - 200 கிராம்
    வெங்காயம் - 2
    கேரட் துருவல் - கால் கப்
    உருளைக்கிழங்கு - 2
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    முட்டைக்கோஸ் துருவல் - கால் கப்
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:


    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மைதா மாவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைக்கோஸ், கேரட், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, இறக்க வேண்டும்.

    அதனுடன் உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    பிசைந்து வைத்த மாவை பூரி போல் உருட்டி சமோசா வடிவல் மடித்து அதன் நடுவில் நூடுல்ஸ் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஓட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சமோசக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான நூடுல்ஸ் சமோசா ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான காப்பி அல்லது டீயுடன் சாப்பிட மெது பக்கோடா அருமையாக இருக்கும். இன்று இந்த மெது பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கடலைமாவு - 100 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    பூண்டுப்பல் - 6
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    சுடுவதற்கு எண்ணைய் - 200 கிராம் 



    செய்முறை  :

    வெங்காயத்தை மெலிதாக வெட்டி வைக்கவும்.

    கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும். க

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணையை போட்டு கையால் நன்றாக பிசைந்து வைக்கவும்.

    பிறகு உப்பு, சோடா உப்பு, நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இவற்றுடன் ஒரு கை தண்ணீர் தெளித்து பிசையவும்.

    தண்ணீர் தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவுக்கலவையை கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.  

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மாவுக் கலவையை சிறிதாக எடுத்து உருட்டாமல் கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.   

    மீதமுள்ள மாவுக் கலவையையும் இதே போல் சுட்டு எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மெது பக்கோடா ரெடி.  

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×