search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud"

    • சேலத்தில் சீலநாயக் கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர் மற்றும் திருச்சி, கரூர், நாமக்–கல் மாவட்–டம் என பல மாவட்டங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வந்தது.
    • நாமக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்–பட்ட கிளை அலு–வ–ல–கங்–கள் மூலம் பணம் வசூல் செய்–யப்–பட்டு உள்–ளது. ஆனால் வாக்–கு–றுதி அளித்–த–படி நகை–களை வழங்–கா–மல் கடை–யின் உரி–மை–யா–ளர் தலை–ம–றை–வாகி விட்–டார். மேலும் கடை–களும் பூட்–டப்–பட்டு உள்ளன.

    நாமக்–கல்:

    சேலத்தை தலை–மை–யி–ட–மாக கொண்டு எஸ்.விஎஸ் நகைக்–கடை செயல்–பட்டு வந்–தது. இந்த கடை–க–ளின் சார்–பில் வாடிக்–கை–யா–ளர் சேவை மையங்–களை ஆங்–காங்கே தொடங்கி பொது–மக்–க–ளி–டம் இருந்து தீபாவளி சீட்டு, நகை சேமிப்பு திட்டம் , கூடுதல் வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பணம் வசூ–லித்து வந்–த–னர்.

    சேலத்தில் சீலநாயக் கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர் மற்றும் திருச்சி, கரூர், நாமக்–கல் மாவட்–டம் என பல மாவட்டங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ள தாக புகார் எழுந்துள்ளது. அதன் உரிமையாளர் சபரி சங்கர் உள்பட நிர்வாகிகள் கடையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து உரிமையாளர் சபரி சங்கர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்தில் கிளைகள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டிலும் செயல்பட்டு வந்தது. இந்த கடைகள் தற்போது பூட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்–பட்ட கிளை அலு–வ–ல–கங்–கள் மூலம் பணம் வசூல் செய்–யப்–பட்டு உள்–ளது. ஆனால் வாக்–கு–றுதி அளித்–த–படி நகை–களை வழங்–கா–மல் கடை–யின் உரி–மை–யா–ளர் தலை–ம–றை–வாகி விட்–டார். மேலும் கடை–களும் பூட்–டப்–பட்டு உள்ளன.

    இத–னால் அதிர்ச்சி அடைந்த முத–லீட்–டா–ளர்–கள், நாமக்–கல் மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–தில் புகார் அளித்–த–னர். பின்–னர் அவர்–கள் கூறுகையில், எஸ்.வி.எஸ். நகை கடை உரிமையாளர், வாடிக்–கை–யா–ளர் சேவை மையம் மூலம் நூற்–றுக்–க–ணக்–கான நபர்–க–ளி–டம் இருந்து சுமார் ரூ.50 லட்–சத்–துக்கு மேல் பணத்தை பல்–வேறு கவர்ச்–சி–க–ர–மான திட்–டங்–கள் மூலம் வசூல் செய்–து–விட்டு, பணம் மற்–றும் நகை–களை திருப்பி தரா–மல், மோசடி செய்து விட்டு, கடை–யை–யும் பூட்–டி–விட்டு தலை–ம–றை–வாகி விட்–டார். எனவே போலீ–சார் உரிய நட–வ–டிக்கை எடுத்து எங்–க–ளின் பணத்தை மீட்டு தர வேண்–டும் என்–ற–னர்.

    டிப்டாப் ஆசாமியின் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் உள்ளவரிடம் விசாரித்துள்ளார்.

    கடலூர்

    பண்ருட்டி அடுத்த விலங்கல் பட்டை சேர்ந்தவர் பற்குணன் (வயது 40), ஆட்டோ டிரைவர்,இவரது போனுக்கு நேற்று ஒரு போன் வந்தது. போனில் பேசிய நபர் பண்ருட்டி யூனியன் அலுவலகத்தில் அரசு டிரைவர் வேலைக்கு உனக்குஆர்டர் வந்துள்ளது.இந்த வேலையில் சேர 3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். நாளைக்கு காலை 10 மணிக்கு யூனியன் அலுவலகத்திற்கு பணத்துடன் வரவும் என்று கூறியுள் ளார் .

    போனில் பேசிய நபர் கூறியவாறு ஆட்டோ டிரைவர் பற்க்குணன் ரூ 50 ஆயிரம் பணத்துடன் பண்ருட்டி யூனியன் ஆபீசுக்கு நேற்று காலை வந்தார்.சிறிது நேரத்தில் போனில் பேசிய அந்த டிப் டாப் ஆசாமி பஸ்சிலிருந்து இறங்கி வந்துள்ளார். அவருக்காகயூனியன் அலுவலகம் வாசலிலே காத்திருந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் டிப்டாப் ஆசாமிடம் முதல் தவணையாக ரூ50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட டிப் டாப் ஆசாமி இங்கேயே இரு. உனக்கு ஆர்டர் எடுத்துக் கொண்டு ஜெயசீலன் என்பவர் வருவார் எனக்கூறி அங்கிருந்து பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் பற்க்குணன் வேலைக்கான ஆர்டர் வரும் என்று நம்பி அங்கேயே காத்திருந்திருந்தார். நேரமாக, நேரமாக டிப்டாப் சாமி சொன்னது போலயாரும்வரவில்லை நாம் ஏமாந்து விட்டோம் என நினைத்து டிப்டாப் ஆசாமிக்கு போன் செய்துள்ளார்.

    டிப்டாப் ஆசாமியின் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் உள்ளவரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த பற்குணன் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹரியை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் மூலமாக அதிக அளவில் பணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ் (30). இவர் பட்டப்படிப்பு முடித்து தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.டெலிகிராம் மூலமாக ஹரியை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் மூலமாக அதிக அளவில் பணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.

    முதலில் தயங்கிய ஹரி, மீண்டும் வற்புறுத்தவே ரூ.5,49,720 பணத்தை கட்டியுள்ளார். பணம் கட்டியது குறித்து தொடர்ந்து கேட்டதால் டெலிகிராமில் மேலும் ரூ.12 லட்சம் கட்டினால் மட்டுமே உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    பணம் கட்டவில்லை என்றால் முதலில் கட்டிய பணமும் திருப்பி கிடைக்காது என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி பிரகாஷ் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
    • தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர், ரஹீம், நசீம்.

    இவர்களிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த அவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தஸ்தகீர் பணம் வாங்கி மோசடி செய்ததாக தலைவாசல் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மேலும் அவர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதும், நாகப்பட்டினம் சிறையில் தஸ்தகீர் அடைக்கப்பட்டு ள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், தஸ்தகீரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    • வட்டியும், அசல் தொகையையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறார்.
    • புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுகுமார்(வயது53). சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

    இவர் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ரகுநாத். ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார்.

    எனக்கு நட்பு ரீதியாக அவரது பழக்கம் கிடைத்தது. கடந்த 2016-ம் ஆண்டு அவர் தனது தொழிலை விரிவு படுத்த வேண்டும். அதற்கு வங்கி கடனை அடைக்க வேண்டும் என பணம் கேட்டார்.

    இதனை நம்பிய நான் அவரிடம் ரூ.53 லட்சம் கொடுத்தேன். ஆனால் அதற்கு அவர் சில மாதங்கள் வரை வட்டி கொடுத்தார்.

    அதன்பின்பு வட்டியும், அசல் தொகையையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தனது வீட்டை விற்று கடனை அடைத்து விடுவதாக தெரிவித்தார்.

    ஆனால் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுக்கவில்லை. மேலும் ரகுநாத் வீட்டை விற்க அவரது மனைவி சுசித்ராவிடம் பவர் பத்திரம் எழுதி கொடுத்து விட்டு வெளிநாடு செல்ல திட்டமிடுவதாக தெரிகிறது.

    எனவே ரூ.53 லட்சம் மோசடி செய்த ரகுநாத் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ரகுநாத், அவரது மனைவி சுசித்ரா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூரில்வெளிமாநிலத்தை சேர்ந்தவரிடம் 12 லட்சம் மோசடி
    • மோசடி நிறுவனத்தின் ரூ.78 லட்சம் முடக்கம்

    செந்துறை,  

    அரியலூர் மாவட்டம், ஜெஜெ நகரில் வசிப்பவர் முகமது தன்வீர் (வயது 35). இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து, அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்ட போது, அந்த நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூபாய் 12,47,000/-பணத்தை செலுத்தி ஏமாந்து விட்டார் . இத குறித்து தன்வீர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இணைய வழி கொள்ளை யர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.78,54,056/-முடக்கம் செய்தனர் . வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் வாணி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் கள் மணிகண்டன், சிவனேசன் சுரேஷ்பாபு, சுரேஷ், ரஞ்சித் குமார் வசந்தி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    அப்போது தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், முஸ்லிம் தெருவில் பதுங்கி இருந்த மாலிக் (35). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஆல்பா 3ஐ இன்போ டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அதில் போதிய லாபம் கிடைக்கா ததால், ஆன்லைனில் டெலிகிராம் மூலம் அறிமுக மான மகாராஷ்டிராவை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சில நபர்களை வேலைக்கு சேர்த்ததாகவும், அந்த நபர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் புதிய சிம் கார்டுகளை துவங்கி மோசடி பண பரிவர்த்தனை களுக்கு பயன்படுத்தியதாக தெரியவந்தது.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாலிக் இடமிருந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்-04, சிம்கார்டுகள்-15, ஏடிஎம் கார்டுகள்-08, காசோலை புத்தகம் - 01, இருசக்கர வாகனம்-01 மற்றும் ரொக்கம் ரூ.2,50,000 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது தலைமையாக செயல்பட்டுள்ள மும்பை குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.

    • டிப்-டாப் ஆசாமிகள் பெண்களிடம் தாங்கள் மகளிர் சுயஉதவி க்குழுவிற்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும், இதுவரை பலருக்கு கடனுதவி வாங்கி தந்துள்ளதாகவும் கூறினர்.
    • பல பெண்கள் ரூ.2400 பணம் கட்டி ஏமாற்றம் அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள பெரியகோம்பை பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டிப்டாப் ஆசாமிகள் சிலர் காரில் வந்து இறங்கினர். அவர்கள் அங்குள்ள பெண்களிடம் தாங்கள் மகளிர் சுயஉதவி க்குழுவிற்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும், இதுவரை பலருக்கு கடனுதவி வாங்கி தந்துள்ளதாகவும் கூறினர்.

    முன்பணமாக ரூ.2400 கட்டினால், ரூ.1 லட்சம் பணம் கிடைக்கும். அதனை சிறுசிறு தொகைகளாக வங்கியில் செலுத்தலாம் என கூறியுள்ளனர். மேலும் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாக த்தில் தங்கள் அலுவலகம் உள்ளது எனக்கூறி உள்ளனர். டேப்லெட்டில் கூகுள் மேப் வரைபடத்தை காட்டி தங்களது கிளை அலுவலகம் பல இடங்களில் உள்ளதாக அந்த கிராம மக்களை நம்ப வைத்தனர். அதனை நம்பி அந்த கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் ரூ.2400 பணம் கட்டினர்.

    சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர். 2 நாட்களில் பணம் கிடைக்கும் என்று நம்பியிருந்த பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஆசாமிகள் சொன்ன விலாசத்திற்கு வந்து பார்த்த போது அங்கு அப்படி ஒரு அலுவலகமே இல்லையென தெரியவந்தது.

    இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்டாப் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    இதேபோல கடந்த சில நாட்களாக கிராமப்புறங்க ளில் தாங்கள் ஆதரவ ற்றோருக்கு உதவிகள் செய்து வருவதாகக் கூறி உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு சில கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணம் மட்டுமின்றி அரிசி, பருப்பு, துணிகள் ஆகியவற்றையும் பெற்றுக் கொண்டு ஆதரவற்றோர் மையத்திற்கு உதவி செய்வதாக கூறி வருகின்றனர். எனவே இதுபோன்ற மோசடி கும்பலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என போலீசார் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.

    • 30 சதவீதம் பணம் கட்டினால் அதிகளவில் பணம் கிடைக்கும் என ஏமாற்றி கைவரிசை
    • கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை கணபதி பகுதியை சேர்ந்த தர்மராஜ் (வயது 33) என்பவர் கோவை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து உள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தனியார் கம்பனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு டெலிகிராம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 30 சதவீதம் பணம் கட்டினால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    எனவே நான் வீட்டில் இருந்த நகை, வீடு கட்ட வைத்திருந்த பணம் உள்பட ரூ.18.75 லட்சத்தை முதலீடு செய்து உள்ளேன். ஆனால் எனக்கு கூடுதல் பணம் கிடைக்கவில்லை. முதலீடு செய்த தொகையும் வரவில்லை.

    எனவே நான் அந்த குறுஞ்செய்தி குறித்து விசாரித்து பார்த்தேன். அப்போது அது போலியான நிறுவனம் என்பது தெரியவந்தது. குறைந்த பணத்தை முதலீடு செய்தால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று கூறி ஆன்லைன் மூலம் ஏமாற்றி மோசடி செய்து உள்ளனர். எனவே போலீசார் இதுகுறித்து விசாரித்து நான் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.
    • சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று பட்ட பகலில் முகமூடி அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் வந்தார்.

    அவரிடம் முகமூடியை கழட்டி விட்டு உள்ளே செல்லுங்கள் என அங்கிருந்த காவலாளி தெரிவித்தார். அப்போது மர்ம நபர் தன்னுடைய முகத்தில் கொடூரமான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அதனை மறைப்பதற்காக தான் முகமூடி அணிந்துள்ளேன். மேலும் எனக்கு குடும்ப கஷ்டம் உள்ளது. அதனால் நகை அடகு வைக்க வந்துள்ளேன் என கூறினார். இதனை நம்பிய காவலாளி அவரை வங்கிக்குள் அனுமதித்தார்.

    இதை தொடர்ந்து மர்ம நபர் கேஷியரிடம் சென்றார். நகை அடகு வைக்க வேண்டும் என கூறினார்.

    அப்போது கேஷியர் காத்திருக்கும் படி வலியுறுத்தினார். மர்ம நபர் அங்கு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவரது மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.

    அப்போது காத்திருந்த முகமூடி நபர் திடீரென தனது பையில் இருந்த பெரிய கத்தியை எடுத்து கேஷியரின் கழுத்தில் வைத்தார். பணம் முழுவதையும் தர வேண்டும் இல்லாவிட்டால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டினார்.

    இதனைக் கண்டு வங்கிக்கு வந்திருந்த பொதுமக்கள் ஊழியர்கள் காவலாளி அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

    ஒரு கையில் கத்தியை பிடித்தபடி மற்றொரு கையில் கேஷியர் முன்பு இருந்த பணத்தை தனது பையில் அள்ளிப் போட்டுக் கொண்டார். பின்னர் கத்தியை வெட்டுவது போல ஏந்திக்கொண்டு வங்கிக்கு வெளியே சென்றார். அங்கிருந்து அவரது வாகனம் மூலம் கில்லாடி திருடன் தப்பி சென்று விட்டார்.

    இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த நபர் கத்தியை காட்டி பணத்தை கொள்ளை அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இதன் மூலம் திருடனை தேடி வருகின்றனர். வங்கியில் பட்டப் பகலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

    • இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது.
    • புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    ஒட்டாவா:

    அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் பலர் விண்ணப்பிக்கிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் ஏஜென்சிகள் மூலம் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களிடம் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

    இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்தது. இந்த மோசடியில் பாதிகப்பட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்நிலையில் மாணவர் விசாவில் வருபவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும். இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.

    இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு தெரிவித்தது.

    • அதிக வட்டி தருவதாக ஏமாற்றி முதியவரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது58). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வாழவந்தான் (35), அவரது மனைவி பவித்ரா (25), உறவினர் திருப்பதி (22).

    இவர்கள் மூவரும் தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் கதிரவனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆனால் கதிரவன் விருப்ப மின்றி இருந்துள்ளார்.

    பழக்கத்தின் அடிப்ப டையில் பலமுறை வற்பு றுத்தியதால் 5 தவணைகளில் ரூ.11 1/2 லட்சத்தை அந்த நிதி நிறுவனத்தில் கதிரவன் முதலீடு செய்தார்.3 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கிடைத்தது. அதன்பின்னர் வட்டி வரவில்லை.

    இதையடுத்து சந்தேக மடைந்த கதிரவன் அந்த நிறுவனம் குறித்து விசா ரித்தார். அதில் குறிப்பிட்ட முகவரியில் நிறுவனம் செயல்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திருப்பி தருமாறு வாழவந்தானிடம் கதிரவன் வலியுறுத்தினார்.

    அப்போது பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கதிரவன் வழக்கு தொடர்ந்தார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் வாழவந்தான் உள்பட 3 பேர் மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் பெரியசாமி என்பவரிடம் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.
    • யாருக்கும் பவர் பத்திரம் செய்து கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது

    திருச்சி

    திருச்சி அமராவதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 67). ரியல் எஸ்டேட் புரோக்கர்.இவர் பெரியசாமி என்பவரிடம் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதை அடுத்து அவர் திருச்சி கே.சாத்தனூர் கவி பாரதி நகரில் உள்ள பர்மா அகதிக்கு சொந்தமான ஒரு இடத்தை காண்பித்துள்ளார்.

    அந்த இடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 1200 சதுர அடி இடம் ஆகும். இந்த நிலத்தை சங்கர் என்பவருக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.பின்னர் பாபுராஜிடம் ரூ.15 லட்சம் வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை அவரது பெயருக்கு போலியான ஆவணங்கள் மூலம் கே.சாத்தனூர் சப்ரி-ஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். பின்னர் விசாரித்த போது அந்த நிலம் பர்மா அகதியான காளி என்பவரது பெயரில் தான் இருக்கிறது.

    யாருக்கும் பவர் பத்திரம் செய்து கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் பாபுராஜ் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து திருச்சி கே.கே. நகர் கே. சாத்தனூர் கவி பாரதி நகரை சேர்ந்த சங்கர் (வயது 56 )என்பவரை கைது செய்தார் மேலும் இது தொடர்பாக மதியழகன், புவனேஸ்வரி பெரியசாமி, தியாகராஜன் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×