search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flower"

    • நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.
    • தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை பகுதிக்கு தேவையான பூக்கள் நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.முகூர்த்த சீசனின் போது தேவை அதிகரித்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்கள் பாதிக்கின்றனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சில சீசன்களை இலக்கு வைத்து புங்கமுத்தூர், பாப்பனூத்து உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

    சில இடங்களில் மல்லி, அரளி போன்ற சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இருப்பினும், இச்சாகுபடியில் போதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. தேவையான விதை, நாற்றுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. எனவே பெரும்பாலானவர்கள் பூ சாகுபடியில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: -

    பூ சாகுபடியில் ஈடுபட ஆர்வம் இருந்தாலும் போதிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை, ராமநாதபுரம், நிலக்கோட்டை பகுதியில் இருந்து வாங்கி வருகிறோம். கோழிக்கொண்டை சாகுபடியில் நோய்த்தாக்குதலால் மகசூல் பாதிக்கிறது.எனவே உள்ளூர் தேவைக்கு தேவையான பூக்களை உற்பத்தி செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில் பூக்கள் கிடைக்கும் என்றனர். 

    • கரூர் மாவட்ட விவசாயிகள் பூ சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் உள்பட பல்வேறு ஒன்றியங்களில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கோழிக்கொண்டை, செண்டு மல்லி, விரிச்சிப் பூ, ரோஜா ஆகிய பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பூக்களை பறித்து கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தற்போது கோவில் திருவிழா நடந்து வருவதாலும், தொடர்ந்து திருமண முகூர்த்தம் இருப்பதாலும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தீவிரமாக சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
    • மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னத் துரை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி உள்ளிட்ட 4 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் (மா, கொய்யா, எலுமிச்சை), காய்கறி நாற்றுகள் (தக்காளி, மிளகாய், கத்தரி), விதைகள் (வெண்டை, வெங்காயம்), மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    மேலும் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு இயற்கை உரமும், வாழை மற்றும் பல்லாண்டு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறிகள் ஊடுபயிராக சாகுபடி செய்திட விதைகள் மற்றும் உயிர் உரங்களும் மானி யத்தில் வழங்கப்பட உள்ளது.

    வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்திட ஒரு மெட்ரிக் டன் கொள்ளளவுக்கு ரூ.3 ஆயிரத்து 500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். மேலும் மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் உள்ள விவசாயி அல்லாதவர்கள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினரை அணுகி பயன் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது.
    • இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மல்லிகை பூ செடிகளை பட்டம் மாறுவதற்காக விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எருமைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது. இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டி விடப்பட்டது. தற்போது செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது.கடந்த மாதம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ கூட வரவில்லை. இதனால் நேற்று வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவை ரூ.2000-க்கு ஏலம் எடுத்து சென்றனர். இனிவரும் நாட்களிலும் இந்த விலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 
    • பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் செட்டிச்சாவடி, கன்னங்குறிச்சி, வீராணம்,

    வலசையூர், ஓமலூர், தீவட்டிப்பட்டி, காடை யாம்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாமந்தி பூக்கள் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடைக்கு செய்யப்படும் பூக்கள் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக

    ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் சாமந்தி பூக்களை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

    • கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது
    • இறந்த தாய், தந்தை, உறவினர், நண்பர்களின் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மாதா கோவில் தெரு கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறித்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

    புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை செலாஸ்டின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் அருகிலிருந்த கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது. 

    • பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.
    • பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா ஆனங்கூர், பாகம்பாளையம், பெரியமருதூர், சின்ன மருதூர், தண்ணீர் பந்தல், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், மல்லிகை, சம்பங்கி, செவந்தி, அரளி, முல்லை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூ வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வரு கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று உதிரிப்பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், பச்சை முல்லை 400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று மல்லிகை கிலோ ரூ.1000-க்கும், சம்பங்கி கிலோ ரூ150-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது.
    • மேலும் செண்டு மல்லி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக பூக்கள் தேவை அதிகரித்து விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் வரும் 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.மேலும் கோவில்களில் தொடர்ந்து திருவிழா மற்றும் முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் பூக்களின் தேவை மேலும் அதிக ரித்துள்ளது.

    ஈரோடு பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு தினமும் அந்தியூர், சத்தியமங்கலம் ,சேலம், திண்டுக்கல், ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்து பூக்கள் வரத் ஆகி வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் ரூ.500- க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ விலை இந்த வாரம் மழை காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை பூக்களின் விலை மேலும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 2000-க்கு மேல் விற்பனையானது. மேலும் ஓணம் பண்டிகை வருவதால் இன்னும் வரும் நாட்களில் இதன் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    இதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

    முல்லை - 400, ஜாதிப்பூ - 300, ரோஜா பூ - 200, சம்மங்கி - 145, செவ்வந்தி பூ - 160, பட்டுப் பூ - 50.

    இதே போல் சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று காலை மல்லிகைப்பூ கிலோ ரூ.2400-க்கு விற்பனையானது. இங்கு இருந்து ஓணம் பண்டிகை க்காக அதிகளவு கேரளாவுக்கு மல்லிகைப்பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் செண்டு மல்லி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.
    • காலையிலேயே சந்தைக்கு வந்த பொதுமக்கள் தேவையான பூக்களை வாங்கி சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காய்கறி மற்றும் பூ உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்வது வழக்கம். சந்தையில் மற்ற நாட்களை விட முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் காட்டன் மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருந்தது. காலையிலேயே சந்தைக்கு வந்த பொதுமக்கள் வீடுகளில் சாமி கும்பிடுவதற்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விலை சற்று உயர்ந்திருந்தது.

    அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கும், முல்லை ரூ.600, சம்பங்கி ரூ.250, செவ்வந்தி ரூ.160, ஜாதிப்பூ 480 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • கருணாநிதி படத்துக்கு தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குலாம்முகைதீன், சாயல்குடி விவசாய சங்க தலைவர் ராஜாராம், மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், சாயல்குடி நகர இளைஞர் அணி அமைப்பாளர் விக்னேஷ் ராம் முன்னிலை வகித்தனர்.

    கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், நகர துணைச் செயலாளர் சுப்ரமணியன், ஊராட்சித் தலைவர்கள் டி. வேப்பங்குளம் முருகன், இதம் பாடல் மங்களசாமி, ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, நிர்வாகிகள் சண்முகராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேரூர் தி.மு.க.

    சாயல்குடி பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ் தலைமை தாங்கினார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அருள் பால்ராஜ், பேரூராட்சி துணைச் சேர்மன்மணிமேகலை பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் குமரையா, ஆபிதா அனிபா அண்ணா, தி.மு.க. அவைத்தலைவர் உதயசூரியன், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யது, நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிக்கோலஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவி ஸ்ரீமதி மறைவுக்கு அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்பினர் சார்பில் மலரஞ்சலி செலுத்தினர்.
    • மற்றும் அனைவரும் மலரஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    குமாரபாளையம்:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மறைவுக்கு அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்பினர் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.

    ஸ்ரீமதியின் உருவப்ப டத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அனைவரும் மலரஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிகழ்விற்கு பொதுநல கூட்டமைப்பின் செயலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தி.மு.க. நகர செயலாளர் செல்வம், ரவி, அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்ரமணி, ரவி, பாஸ்கரன், காங்கிரஸ் சிவராஜ், தங்கராஜ், கோகுல்நாத், சிவகுமார், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலாளர் நாராயணசாமி, ம.தி.மு.க. விஸ்வநாதன், சி.பி.ஐ, சி.பி.எம்., விடியல் ஆரம்பம் பிரகாஷ், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், சேவற்கொடியோர் பேரவை பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
    • மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.

    இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.

    ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

    இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:

    மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.

    ×