search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishing ban"

    • தடை காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • மீன்பிடி தடை காரணமாக அனைத்து விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 240 விசைப்படகுகள் உள்ளன.

    தூத்துக்குடி:

    இந்தியாவில் கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலங்களில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும்.

    இந்த காலங்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டு படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடைகாலம் பொருந்தாது. வழக்கம் போல் அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

    தடை காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரியதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

    மீன்பிடி தடை காரணமாக அனைத்து விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 240 விசைப்படகுகள் உள்ளன.

    தடை காலத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள விசைப்படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் பணியிலும், தேசம் அடைந்த மீன்வலைகளை மீண்டும் பின்னும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் 61 நாட்கள் தடைகாலம் நாளையுடன் முடிவடைகிறது. நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டு செல்ல இருக்கின்றனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான டீசல், ஜஸ் உள்ளிட்ட பொருட்களை படகுகளில் ஏற்ற தயாராகி வருகின்றனர்.

    • கடந்த 61 நாட்களாக காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைவாகவே காணப்பட்டது.
    • நாளை நள்ளிரவு செல்லும் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் நாளையுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், 800-க்கும் மேற்பட்ட பைபர்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    அவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவதால் நாளை நள்ளிரவு முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து வருவது வழக்கம். இதனால் மீனவர்கள் தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    கடந்த 61 நாட்களாக காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை அதிகமாக இருந்தது.

    நாளை நள்ளிரவு செல்லும் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள். எனவே அடுத்த வாரம் முதல் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்றும் மீன் விலையும் குறையும் என்று அசைவ பிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக் காயல், மணப்பாடு, பெரிய தாழை உள்பட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு கள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    மீனவர்கள் நாளை நள்ளிரவு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். அதன்படி தொண்டி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்வ தற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடலில் கிழக்கு, மேற்கு கடற்கரை பகுதியில் தலா 60 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
    • நாளை நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடலில் கிழக்கு, மேற்கு கடற்கரை பகுதியில் தலா 60 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழக பகுதிகளான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர் உள்பட கடலோரப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இதன் காரணமாக கடலுக்கு செல்லவில்லை.

    தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. 60 நாட்கள் தடை காலம் விதிக்கப்பட்டதால் மீனவர்கள் பலர் மாற்று வேலைக்கு சென்றனர்.

    சிலர் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க சென்று வந்தனர். இந்த தடை காலங்களில் மீனவர்கள் தங்களது படகுகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளை சரி செய்யவும், வர்ணம் பூசவும், வலைகளை பராமரிக்கவும், விசைப்படகு எஞ்சின்களை பழுது நீக்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நாளை (14-ந் தேதி) நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். நேற்று முதல் மீனவர்கள் தங்களது படகுகளை தயார் நிலையில் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மீன்பிடிக்கச் செல்ல தேவையான வலை, மீன்பிடி சாதனங்களை படகுகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்தில் மீனவர்கள் நாளை நள்ளிரவு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். அதன்படி தொண்டி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான டீசல், ஐஸ், குடிநீர், உணவு பொருட்கள் ஆகியவற்றை படகுகளில் ஏற்றி வருகின்றனர்.

    இதுகுறித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த 2 மாதமாக மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டதால் கடலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது அரசு கொடுக்கும் உதவித்தொகையும் போதிய அளவில் இல்லை. 2 மாதம் வருமானத்திற்காக மாற்று வேலைக்கு சென்று வந்தோம்.

    இந்த நிலையில் தடை காலம் முடிந்து நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது. கடலுக்கு செல்ல ஆர்வமாக உள்ளோம். ஆனாலும் வழக்கம்போல் இலங்கை கடற்படை எங்களை மீன்பிடிக்க செய்யவிடாமல் விரட்டியடிக்கும் என்ற அச்சமும் உள்ளது என தெரிவித்தனர்.

    நாளை மறுநாள் தடை காலம் முடிய உள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் ஆயத்த பணியில் ஈடுபட்டு வந்தனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரம் துறைமுக கடற்கரை திடீரென 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது.

    இதனால் விசைப்படகுகள் தரை முட்டி நின்றது. கரையில் இருந்து படகுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல சிறிய வல்லத்தை மீனவர்கள் பயன்படுத்துவார்கள். இன்று காலை மீனவர்கள் விசைப் படகுகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் போது கடல் உள்வாங்கியதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

    இதனால் மீனவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். சில மணி நேரத்திற்கு பின் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின் மீனவர்கள் விசைப்படகில் தேவையான பொருட்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ஆழ்கடலுக்குள் சென்ற படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பின. வரக்கூடிய நாட்களில் மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது. #FishingBan #FishingBanPeriod
    சென்னை:

    கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் (திங்கட் கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மீன்பிடி தடைகாலம் 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். அந்தவகையில் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவுடன் தடைகாலம் முடிகிறது.

    தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் அமலில் இருக்கிறது.

    இந்த பகுதிகளில் 150 முதல் 240 வரையிலான குதிரை திறன் கொண்ட சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பார்கள். தடைகாலமான இந்த நேரத்தில் இந்த 15 ஆயிரம் விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

    அந்த வகையில் ஆழ்கடலுக்குள் சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரை திரும்பி இருக்கின்றன. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையோரங்களில் அருகருகே நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றன.

    மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் 60 நாட்களுக்கு மீனவர்கள் வேலை இழக்கிறார்கள். இந்த காலகட்டங்களில் கரையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் படகுகளை, அதன் உரிமையாளர்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.



    கரை திரும்பிய விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று பிடித்து வந்திருந்த மீன்களை கொண்டு, இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும், அதன்பிறகு மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 படகுகள் நிறுத்துவதற்கான வார்ப்பு தான் இருக்கிறது. ஆனால் சுமார் 2 ஆயிரம் படகுகள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு நிறுத்தப்பட்டு இருப்பதால் உராய்வு ஏற்படும் என்றும், தற்போது கோடைகாலமாக இருப்பதால் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், எனவே தடைகாலம் முடியும் வரை தீயணைப்பு வாகனம் ஒன்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகத்தில் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்தார்.  #FishingBan #FishingBanPeriod

    ×