search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First Saturday festival celebration in honor of Puratasi month"

    • மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அருகே அக்ராவரம் கிராமத்தில் அமைந்துள்ள மலை குன்றில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு முதலாம் சனிக்கிழமை விழா நேற்று நடைபெற்றது.

    கொடியேற்ற த்துடன் விழா தொடங்கியது அதன் பிறகு ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    மேலும் புரட்டாசி மாதம் முதலாம் சனிக்கிழமை நேற்று துவங்கி வருகிற அக்டோபர் மாதம் 15-ம் தேதி வரை தொடர்ந்து 5 சனிக்கிழமை வரை ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது.

    நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அக்ரஹாரம் கிராமம் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    ×