search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "financial assistance"

    • மாற்றுதிறனாளி கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் களமிறங்கும் வீரருக்கு அமைச்சர் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது.
    • தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கீழசெல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு(29). இவர் சிறுவயது முதல் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலியில் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் கொண்டு தமிழக அளவில் விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். வருகிற 26-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா சார்பில் வினோத்பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது. வறுமையில் வாடும் வினோத்பாபுவுக்கு லண்டன் செல்ல முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் உதவி கேட்டார்.

    உடனடியாக அவர், முதுகுளத்தூர் சட்ட மன்ற அலுவலகம் மூலம் வினோத்பாபுவின் ஊருக்கு சென்று நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்பாபுவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதியுதவியை தி.மு.க. கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் வழங்கி விளையாட்டில் வெற்றி பெற வாழ்த்தினார். அப்போது முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் வழங்கினார்
    • மக்கள் 40 பேர் மினி பஸ்சில் சென்றபோது பஸ் விபத்துக்குள்ளானது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சி காரபிள்ளு கிராம மக்கள் 40 பேர் மினி பஸ்சில் சென்றபோது பஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரபிள்ளுவை சேர்ந்த பாஞ்சாலி என்பவர் உயிர் இழந்தார். பலர் பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சிவினோத் காரபிள்ளு கிராமத்திற்கு நேரில்சென்று விபத்தில் பலியான பாஞ்சாலி குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் கடநாடுகுமார், முன்னால் ஒன்றிய செயலாளர் குண்டன், பாசறை மாவட்ட தலைவர் சுரேஷ், ஒன்றிய துணைத் தலைவர் கணேசன் ஆகிேயார் உடன் இருந்தனர்.

    • விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கபட்டது
    • அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம் 31-ந் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    கரூர்:

    தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009ஆம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம் 31-ந் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அரவக்குறிச்சியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், 2009ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் சார்பாக விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 24 லட்சத்து 30 ஆயிரத்து 943 ரூபாயை வழங்கினர். நிதி திரட்டி நன்கொடை வழங்கிய நிகழ்ச்சி சக காவலர்கள் மற்றும் கரூர் வட்டார பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.


    • மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
    • அலமேலுவின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே அருமடல் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அலமேலு (வயது 37). இவர் கடந்த 3-ந்தேதி மாலை வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. அலமேலு மழைக்காக அருகே உள்ள புளியமரத்தடியில் ஒதுங்கி நின்றார். திடீரென்று மின்னல் தாக்கி அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இதைத்தொடர்ந்து அலமேலுவின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கற்பகம் வழங்கினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் பாரதிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.




    • கல்வி பயிலும் வகையில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
    • நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    காங்கயம், காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவா் சி.அருள்ஜோதி. குடும்பத்தைவிட்டு தந்தை பிரிந்து சென்ற நிலையில் உடல் நலிவுற்ற தாயுடன் வசித்து வருகிறாா். வறுமை காரணமாக இவரால் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், மாணவி தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

    காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சாந்தி அமலோா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். 

    • புத்தாண்டை முன்னிட்டு ராஜா எம்.எல்.ஏ., கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிர்வாகிகள் 2 பேருக்கு நிதி உதவி வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் நகர தி.மு.க. மூத்த முன்னோடியும், தற்போது உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நகர செயலாளருமான பரமபால்பாண்டியன், மற்றும் முன்னாள் வார்டு செயலாளர் ஆறுமுகம் ஆகியோரது வீடுகளுக்கு நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, நிதி உதவி அளித்தார்.

    இதில் நகர செயலாளர் பிரகாஷ், நகரத் துணை செயலாளர் மாரியப்பன், மாணவரணி கார்த்தி, வார்டு செயலாளர்கள் வீரச்சாமி, சிவா மற்றும் வெங்கடேஷ், ஜான்சன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • பள்ளி வளாகத்தில் இருந்த வகுப்பறை கட்டடம் பழுதடைந்து இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
    • அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவியை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவக்குமார் வழங்கினார்.

    பல்லடம் : 

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி கிழக்கு செயல்படுகிறது. இங்கு மாணவர்கள் 149 பேர் மாணவிகள் 135 பேர் உள்பட 284 பேர் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த வகுப்பறை கட்டடம் பழுதடைந்து இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.

    இதற்கிடையே அகற்றப்பட்ட கட்டடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டடம் கட்ட பெற்றோர்கள் மற்றும் பச்சாபாளையம் பொதுமக்கள், நகர்மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் பொதுமக்களின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் பள்ளி வகுப்பறைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனை ஏற்று அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவியை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவக்குமார், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமாரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் பாமிதா கயாஸ், ராஜசேகரன்,பாலகிருஷ்ணன், மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெகதீசன்,கவுஸ்பாஷா, பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம், உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
    • கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு நடைபெற்ற தேநீர் விருந்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு கொடி நாள் நிதி வசூல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நாளில் தேசத்தின் குடிமக்களாகிய நாம் அனைவரும் முப்படை வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் வாழ்விற்கு உதவும் வகையில் நிதியினை வாரி வழங்கும் நாள்.

    அடுத்த கொடிநாள் வரை முழு ஆண்டும் கொடிநாள் நலநிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறாக வசூலிக்கப்படும் தொகை முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பலவேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக கொடிநாள் நிதி வசூல் புரிவதில் தமிழ்நாடு முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இது படைவீரர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் காட்டும் மதிப்பும் மரியாதையையும் அளவிடுகிறது.

    மேலும், கடந்த ஓராண்டில் முன்னாள் படைவீரர் , சார்ந்தோர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.

    இவ்விழாவில் ரூ.5,27,100 மதிப்பிலான, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    2021 கொடி நாள் ஆண்டில் அரசு இலக்கு ரூ.68,44,000. அதில் ரூ.1,59,53,500 வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 233.10 சதவீதம் ஆகும். கொடிநாள் 2022ஆம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இலக்கு ரூ.72,29,000 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வசூல் தொகையினை விட இந்த ஆண்டு கூடுதலாக வசூல் செய்திட மாவட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்வதுடன், பொது மக்கள் அதிக அளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இளம்பெண்ணும் அவரது உறவினர்களும் சிவகளை குளத்தில் குளிக்க சென்றனர்
    • அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தனர்

    தூத்துக்குடி:

    சிவகளை அருகே உள்ள நயினார்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுடலைவடிவு என்ற தேவராஜ் (வயது 56). இவரது மனைவி சண்முகத்தாய் (52) கடந்த அக்டோபர் 30-ந் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இவரது மறைவை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி தேவராஜ் வீட்டில் சண்முகத்தாயின் இறப்பு விஷேச நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள் பலர் வந்து கலந்து கொண்டனர். விஷேச நிகழ்ச்சி முடிந்த மறுநாள் தேவராஜ் மகள் சுடலைகனி மற்றும் கோகிலா என்ற சிறுமியும், உறவினர்களும் சிவகளை குளத்தில் குளிக்க சென்றனர். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுடலைகனி மற்றும் கோகிலா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    நேற்று மதியம் சிவகளை வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நயினார்புரத்தில் உள்ள தேவராஜ் வீட்டிற்கு சென்று அங்கு சுடலைகனி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் சுடலைகனி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதிபா மதிவாணன், கவுன்சிலர் பிச்சையா, விவசாய சங்கம் தலைவர் மதிவாணன், தி.மு.க. பெருங்குளம் நகர செயலாளர் நவநீதமுத்துக்குமார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, ஸ்ரீவை. வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்து பிரதாபன், மாநில ஊடக பிரிவு தலைவர் முத்துமணி, ஸ்ரீவைகுண்டம் ஊடக பிரிவு மரியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
    • புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    விளாத்திகுளம்:

    புதூர் வேளாண்மை உதவி இயக்குநர் சின்னகண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தங்கள் வங்கி கணக்கில் பெற்று வரும் விவசாயிகள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம். தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும்.

    புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண், ஏற்கெனவே பதிவு செய்த செல்போன் எண் எடுத்துச் சென்று அங்கிகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் இ.கே.ஒய்.சி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    விவசாயிகளுக்கு 13-வது தவணை டிசம்பர் மாதம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதால் டிசம்பர் முதல் வாரத்திற்குள் விவசாயிகள் தங்களது பதிவினை புதுப்பித்தல் அவசியம்.மேலும் விவரங்களுக்கு புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிதி உதவி அளிப்பதாக தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கண்காணிப்பு குழு கூ ட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 21,739 நபர்கள் புதிதாக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். 15,629 பேரின் பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வூதியம் 455 நபர்களுக்கும், கல்வி உதவித்தொகை 27,253 நபர்களுக்கும், இயற்கை மரண நிதி உதவி 579 நபர்களுக்கும் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் சேர்த்து மொத்தம் 31,890 நபர்களுக்கு ரூ.16 கோடியே 40 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளயர்களுக்கு தாமாக சொந்தமாக வீடு கட்ட அல்லது அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

    6 கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்க சென்னை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தால் இறுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் முதன்மையாக நடைபெறும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள இ.எஸ்.ஐ. மற்றும் சேமநலநிதி பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு தமிழக அரசால் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை உத்தரவின் பேரில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்தார்.

    • நெல்லை மாவட்டத்தில் செல்லத்துரை என்ற காவலர் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்
    • 2009 -ம் ஆண்டு அவருடன் பணியில் சேர்ந்த சக போலீஸ் நண்பர்கள் ஒருங்கிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய திட்டமிட்டனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் செல்லத்துரை என்ற காவலர் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் 2009 -ம் ஆண்டு அவருடன் பணியில் சேர்ந்த சக போலீஸ் நண்பர்கள் ஒருங்கிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய திட்டமிட்டனர்.

    அதன்படி ரூ.24,85,450 வசூல் செய்து செல்லத்துரையின் மனைவி பெயரில் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.12,21,600-ஐ டெபாசிட் செய்துள்ளனர். அதேபோல் அவரது மகள்கள் பெயரிலும் 10 ஆண்டுகளுக்கு டெபொசிட் செய்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், மறைந்த செல்லத்துரையின் இழப்பு ஈடுசெய்ய இயலாது என்ற போதிலும் அவரது குடும்பத்தை 2009- பேட்ஜ் போலீஸ் சொந்தங்கள் அனைவரும் இணைந்து வறுமையில் இருந்து மீட்பதற்காக எங்களால் முடிந்த உதவியை செய்துள்ளோம் என்றனர்.

    ×