search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "financial assistance"

    • பாதிக்கப்பட்ட 47 பேருக்கு ரூ5.83 லட்சம் நிதிஉதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • வருவாய் வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை திருமோகூரில் திருவிழாவின் போது நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை கலெக்டர் சங்கீதா நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி உடல்நலம் விசாரித்தார்.

    மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளுக்கு அதிகாரி களிடமிருந்து சேதமதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் 8 வீடுகள் சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.14,800/-மும், 34 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கரங்கள் (மொத்தம் 35 வாகனங்கள்) சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 200-ம், பாதிக்கப்பட்ட 4 நபர்களுக்கு நிதி உதவித் தொகையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும்– என மொத்தம் 47 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோஷ் பாத்திமா , ஆதிதிராவிடர் நல அலுவலர் கோட்டூர் சாமி, கிழக்கு வருவாய் வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
    • பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிதிஉதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஒன்றியம், இனையாளூர் ஊராட்சி வடகரை புதுத்தெருவை சேர்ந்த விவசாயி எபி. இவரது வீடு மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட எபி குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட தேசிய சட்ட உரிமை கழகம் சார்பில் நிதி உதவி, மளிகை பொருட்களை மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினார்.

    அப்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், துணை செயலாளர் வெங்கட்ராமன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சங்கீதா, மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி என்கிற பாரதிராஜா, நகர மன்ற செயலாளர் மணி கண்ட பிரபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் லியாத்அலி, செம்பை ஒன்றிய செயலாளர் ஜாபர்சாதிக் , ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் சிவலார்பட்டி கிராமத்திற்கு சென்று உயிரிழந்த சிறுவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • பின்னர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தில் கடந்த 12-ந் தேதி விளையாட சென்ற மகேஸ்வரன், அருண்குமார் மற்றும் சுதன் ஆகிய 3 பள்ளி சிறுவர்கள் கண்மாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ரூ. 2 லட்சம் நிதியுதவி

    இந்நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் இன்று சிவலார் பட்டி கிராமத்திற்கு சென்று உயிரிழந்த சிறுவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அவர்களது பெற்றோரிடம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட ரூ. 2 லட்சத்திற்கான காசோ லையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி அவர்க ளுக்கு ஆறுதல் கூறினார்.

    குடியிருப்பு கட்டிடம்

    முன்னதாக விளாத்தி குளம் மற்றும் புதூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் விளாத்தி குளம் ஒன்றிய செயலாளர் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, புதூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மும்மூர்த்தி, ராதா கிருஷ்ணன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, புதூர் நகர செயலாளர் மருதுபாண்டி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமை ப்பாளர் இம்மானுவேல், முன்னாள் ராணுவவீரர் மாரிமுத்து, தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோலை ராஜ் கடந்த 9-ந் தேதி காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இச்சம்பவம் அறிந்து அமைச்சர் கீதாஜீவன் முதல்-அமைச்சர் பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த 9-ந் தேதி காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் அறிந்து அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளி ட்டோர் முதல்-அமைச்சர் பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்தி ற்கான காசோ லையை வழங்கி பாதிக்க ப்பட்ட குடும்பத்தி ற்கு ஆறுதல் தெரிவித்தனர்.விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் ஒன்றிய செய லாளர்கள் செல்வ ராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பாளையங்கோட்டை தாலுகா கான்சாபுரம் தோனித்துறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 21). பனை ஏறும் தொழிலாளி.
    • இவர் கடந்த மாதம் நுங்கு வெட்ட பனை ஏறும்போது மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளையங்கோட்டை தாலுகா கான்சாபுரம் தோனித்துறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் நாடார் மகன் சுரேஷ் (வயது 21). பனை ஏறும் தொழிலாளி. இவர் கடந்த மாதம் நுங்கு வெட்ட பனை ஏறும்போது மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது.

    பின்னர் அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது வருமானமின்றி வீட்டில் கஷ்டப்படுவதாகவும், எனவே சங்கத்தில் இருந்து உதவி கேட்டும் மனு கொடுத்திருந்தார்.

    அவரது மனுவை நிர்வாக சபை கூட்டத்தில் பரிசீலித்த நிர்வாகிகள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அவருக்கு நலிந்தோர் நலநிதியில் இருந்து ரூ.20 ஆயிரம் வழங்க முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைமை அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமையில், செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலையில் சுரேசின் தந்தை பெருமாள் நாடாரிடம் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் நிர்வாக சபை உறுப்பினர் ஏ.நயினார் நாடார் கலந்துகொண்டார்.

    • நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • நமக்குநாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன்உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர்:

    நமக்குநாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன்உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வீரபாண்டிப்பிரிவு விருக்ஷா சர்வதேசப் பள்ளியின் 70 மாணவ, மாணவிகள்ஒன்றிணைந்து, அவர்களின் சேமிப்பு தொகை மற்றும் சிறுபொருட்கள் விற்பனை மூலம் பங்களிப்பு தொகையாக ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம்,விருக்ஷா சர்வதேசப் பள்ளியின் தாளாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆ.ராசா எம்.பி. மக்களை சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

    தொடர்ந்து அள்ளூா்வயல் பகுதிக்குச் சென்ற அவா், யானைக் தாக்கி உயிரிழந்த பழங்குடியின முதியவா் கருமனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் சொந்த நிதியை வழங்கினாா்.

    செம்பாலா, நந்தட்டி, சளிவயல் மற்றும் ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    அவருடன் மாவட்டச் செயலாளா் முபாரக், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாநில பொறியாளா் அணி துணை செயலாளா் பரமேஸ்குமாா், நகரச் செயலாளா் இளஞ்செழியன், தொ.மு.ச மண்டல பொதுச் செயலாளா் நெடுஞ்செழியன் ஆகியோரும் உடன் சென்றனர்.

    • கிறித்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல்- புனரமைத்தல் பணிகளுக்கு அரசு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தி யும் வழங்க அரசு ஆணை யிட்டுள்ளது.

    சிவகங்கை,

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தி யும் வழங்க அரசு ஆணை யிட்டுள்ளது.

    அதில் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும் மற்றும் 20 வருடங்களுக்கு மேலி ருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், உரிய ஆவணங்களுடன் பெறப்படும் விண்ணப்ப ங்களை, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழவின் மூலம் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களில் உரிய ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரைக்கப் படும். அதன் பின்னர், நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.18.40 லட்சத்திற்க்கான காசோலையை 2வது வார்டு கவுன்சிலர் மாலதி கேபிள் ராஜ், மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சியில் 2வது வார்டு மண்டல தலைவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் மண்டலம் எண்-2, வார்டு எண்-2, பாண்டியன்நகர் ராஜீவ் காந்தி வீதி, நல்லப்பா நகர் 3வது வீதியில் மழைநீர் வடிகால்மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டுதொகை ரூ.55.40 லட்சத்தில், பொதுமக்களின் பங்களிப்புத்தொகையாக ரூ.18.40 லட்சத்திற்க்கான காசோலையை 2வது வார்டு கவுன்சிலர் மாலதி கேபிள் ராஜ், மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் 2வது வார்டு மண்டல தலைவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார். 

    • சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமையில், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்றனர்.
    • பலியான தங்கவேல் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் ஆவுடையாள்புரம் கிராமத்தில் சூறாவளிக் காற்றால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியான தங்கவேல் குடும்பத்தினர் மற்றும் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட பெருமாள், வள்ளிமுத்து ஆகியோர் வீட்டிற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமையில், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்றனர். பலியான தங்கவேல் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10ஆயிரம் நிதியும், சூறாவளி காற்றால் வீடு இழந்த பெருமாள் மற்றும் வள்ளிமுத்து ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மருதன்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் தங்கதுரை, ஆவுடையாள்புரம் கிளை செயலாளர் முத்தரசு, வன்னியம்பட்டி சுவாமிதாஸ், மாதவன், ரமேஷ், சுகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நியாய விலை கடை விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
    • இணைப்பதிவாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் சாத்தூரில் உள்ள நியாய விலை கடையின் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த ரத்தினம் மாலா என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்திற்கான காசோலையை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், விருதுநகர் மண்டல கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில் குமார்,பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் முருகவேல், பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் விநாயகரசன், இணைப்பதிவாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவாலய கட்டிடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதுக்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர்வசதிகள் உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கு கூடுதலாக பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவாலய கட்டிடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக மானி–யம் உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 வருடம் வரை இருந்தால் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கலெக்டர் தலைமையிலான குழு, பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொண்டு கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணையாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

    ×