search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FAKE SEED"

    • வேளாண் அலுவலகத்தில் போலி விதை நெல் வழங்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது
    • கலெக்டரிடம் நேரிடையாக முறையிட்டார்

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், இனங்கூர் மேலக்காம்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் நெற்பயிரை ெகாண்டு வந்து அதனை கலெக்டர் பிரபு சங்கரிடம் காட்டினார். பின்னர் அவர் கூறியபோது, நங்கவரம் வேளாண் அலுவலகத்தில் பொன்மணி விரை நெல் வாங்கி 5 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தேன். ஆனால் அங்கு பொன்மணி விரைநெல்லுடன் மேலும் 2 ரகங்கள் கலந்த விதை நெல்லை அளித்துவிட்டனர். இதனால், தற்போது வளர்ந்துள்ள பயிர்களில் ஒரு ரகம் 15 நாட்களுக்கு முன்பு பூப்பூத்துள்ளது. மற்றொரு ரகம் கதிர் பிடித்துள்ள நிலையில் மற்றவை கருகியும், சாய்ந்தும் கிடக்கின்றன எனக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார். அவர் கொண்டு வந்த நெற்பயிரை கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.


    ×