search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake cbi officer arrested"

    கோவையில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தது அம்பலமாகியுள்ளது.

    கோவை, டிச.7-

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருப்பலூரை சேர்ந்தவர் கிரிஷ்(வயது 32).

    இவர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு வேலைக்காக விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் சென்றார். அங்கு கணவரை பிரிந்து 3 குழந்தைகளுடன் தனி யாக வசித்து வந்த அன்ன லட்சுமி(வயது 26) என்ற பெண்ணுடன் கிரிசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    தான் சி.பி.ஐ. அதிகாரியாக வேலை பார்ப்பதாக கிரிஷ் கூறியதை நம்பிய அன்னலட்சுமி அவரது வலையில் விழுந்தார். நாள டைவில் இருவரும் குடும்பம் நடத்த தொடங்கினர்.

    கிரிஷ் கடந்த 2 மாதங் களுக்கு முன்பு அன்ன லட்சுமியை அழைத்து கொண்டு கோவைக்கு குடி பெயர்ந்தார். இருவரும் பி.கே. புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். சமீப காலமாக வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற கிரிஷ் சரியாக வீட்டுக்கு வருவது இல்லை. அவர் மீது அன்னலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் கிரிசின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தார்.

    அப்போது கிரிசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் தன்னை ஏமாற்றிய கிரிஷ் மீது அன்னலட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று கிரிஷ் வீட்டுக்கு வந்த போது அன்னலட்சுமி நீங்கள் உண்மையிலேயே சி.பி.ஐ.யில் தான் வேலை பார்க்கிறீர்களா? என கேட்டு தகராறு செய்தார். அப்போது கிரிஷ் தகாத வார்த்தைக ளால் அன்னலட்சுமியை திட்டினார்.

    இதுகுறித்து அன்னலட்சுமி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அப்போது கிரிஷ் சி.பி.ஐ. அதிகாரி என கூறி பலரிடமும் பணம் வசூலிக்கிறார். அவர் மீது சந்தேகம் உள்ளது என கூறி னார்.

    உஷாரான குனியமுத் தூர் போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று கிரிசை மடக்கிப் பிடித்து விசாரணை நடத் தினர். அப்போது அவர் சி.பி.ஐ. என அச்சிடப்பட்டிருந்த அடையாள அட்டை களை வைத்திருந்தார். அவற்றை சரி பார்த்த போது அவை போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கிரிஷ் என்ற தனது பெயரை ராஜகிரி என மாற்றி அடையாள அட்டை அச்சிட்டு பலரையும் ஏமாற் றியதை அவர் ஒப்புக் கொண் டார்.இதைத் தொடர்ந்து போலி அடையாள அட்டைகளை கைப்பற்றிய போலீசார் கிரிசை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 419(ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

    பின்னர் அவரை கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத் தனர். கிரிஷ் சி.பி.ஐ.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏரா ளமானவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்ததும், தன்னை சி.பி.ஐ. அதிகாரி எனக்கூறி பல பெண்களை ஏமாற்றி உல்லா சமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. எனினும் இது தொடர்பாக புகார்கள் இல்லை. எனவே கிரிசிடம் ஏமாந்தவர்கள் முறையாக புகார் அளிக்கலாம் என போலீசார் கூறினர். அவ்வாறு புகார்கள் வந்ததும் கிரிசை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீ சார் திட்டமிட்டுள்ளனர்.

    ×