search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake bond issue"

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வேலி அமைத்தனர்.
    • இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அதன்பின்னர் தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ஆகாசிடம் மனு அளித்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஏ.பி.நாடானூரில் அந்த பகுதியை சேர்ந்த 9 பேருக்கு கடந்த 1984-ம் ஆண்டு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படடது.

    உள்ளிருப்பு போராட்டம்

    அதில் 2 பேரின் நிலங்கள் தவிர மற்ற இடங்களை வருவாய் துறையினர் உதவியுடன் சிலர் போலி பத்திரம் போட்டு கிரையம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வேலி அமைத்தனர்.

    இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவிலும் கோவிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர்.

    கலெக்டரிடம் மனு

    தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அவர்கள் கோவிலில் சமையல் செய்தும், பெண்கள் பீடி சுற்றியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அதன்பின்னர் தென்காசி கலெக்டர் அலு வலகத்திற்கு சென்றனர்.

    அங்கு கலெக்டர் ஆகாசிடம் மனு அளித்தனர். தொடர்ந்து ரேசன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    ×