search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "failure"

    • ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.
    • நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தாக்கம் கடந்த 2 வாரமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் பொது இடங்களில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவ- மாணவிகள், மற்றும் என்.சி.சி.மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி ஈரோடு ஜி.எச்.ரவுண்டானாவில் தொடங்கியது. மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம், டவுன் டி.என். பி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணி மீனாட்சி சுந்தரனார் சாலை, பன்னீர்செல்வம் பார்க், கச்சேரி வீதி வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது

    இதைத்தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடி மேற்கொண்ட சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி அடைந்து இருப்பதாக சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. #Modi #ShivSena
    மும்பை:

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் காஷ்மீர் நிலவரம் குறித்து கடந்த 14-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

    ஆனால் ஐ.நா.வின் அறிக்கை உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டிய மத்திய அரசு இதனை புறக்கணித்தது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இது குறித்து கூறியிருப்பதாவது:-



    இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு நகைப்புக்குள்ளாகி இருக்கிறது. ரம்ஜான் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அரசை தான் குற்றம்சாட்ட வேண்டும். கடந்த 4 மாதங்களில் மட்டும் காஷ்மீரில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பெரும்பாலானோர் நமது ராணுவ வீரர்கள்.

    நாட்டின் ராணுவ மந்திரி உட்கட்சி விவகாரங்களில் பரபரப்பாக இருக்கும் நிலையில் பிரதமர் மோடியோ வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமரின் கடந்த 4 ஆண்டுகால வெளிநாட்டு பயணங்களால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படும் கருத்து காஷ்மீர் குறித்த தற்போதைய ஐ.நா. அறிக்கையை தொடர்ந்து தவிடுபொடியாகி விட்டது.

    பிரதமர் மோடி எண்ணற்ற வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், காஷ்மீர் விவகாரத்தில் யாரும் இந்தியாவின் பக்கம் நிற்க தயாராக இல்லை. இவை பிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி அடைந்து இருப்பதையே காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.   #Modi #ShivSena  #tamilnews
    கர்நாடகா சட்டசபை தேர்தலில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. போட்டியிட்ட 3 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. #KarnatakaElection2018 #ADMK
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 3 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு வேட்பாளர்களை நிறுத்தியது.

    ஹானூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணு குமார், பெங்களூர் காந்திநகர் தொகுதியில் யுவராஜ், கோலார் தங்கவயல் தொகுதியில் எம்.அன்பு ஆகியோர் காங்கிரஸ்,பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டனர்.

    கர்நாடகத்தில் இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவிலை. இதனால் இரட்டை மின் கம்பம் சின்னத்தில் போட்டியிட்டனர்.

    இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் இந்த 3 தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். #KarnatakaElection2018 #ADMK

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பிரச்சினை தொடர்பாக நெல்லை தொழிலாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் மீண்டும் 18-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
    நெல்லை:

    விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு கேட்டும், ரூ.300 விடுமுறை கால சம்பளம் கேட்டும் சங்கரன்கோவிலில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பான 2-வது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பாளையங்கோட்டை திருமால்நகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் துறை உதவி ஆணையர் அப்துல் காதர் சுபைர் தலைமை தாங்கினார். தொழிற்சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், புளியங்குடி விசைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் வேலு, விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் சங்க தலைவர் ஆர்.ஆர்.சுப்பிரமணியன், செயலாளர் பி.எஸ்.ஏ. சுப்பிரமணியன், பொருளாளர் முத்துசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் சார்பில் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் 2014-15 ஆண்டுக்கான அடிப்படை கூலிதான் தரமுடியும் என்றும், அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்க முடியாது என்று விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல், தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து இது தொடர்பான 3-வது கட்ட பேச்சுவார்த்தையை வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். 
    ×