search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extermination of liquor"

    • போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை
    • மனம் திருந்தி வரும் நபர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என தகவல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சாராயம் காய்ச்சுவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட லிட்டர் அளவிலான சாராய ஊரல்கள் அழிப்பு திருப்பத்தூர் மாவட்டம் மலைப் பகுதிகளான புதூர் நாடு கிராமம் மற்றும் சேம்பரை, கோரிபள்ளம், தேவராஜ்புரம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12300 லிட்டர் சாராய ஊரல்களும் அழிக்கப்பட்டது.

    அதேபோல் 758 லிட்டர் சாராயமும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்றவர்களிடம் இருந்து 292 லிட்டர் மதுகளும் அதேபோல் கர்நாடக 33 லிட்டர் மதுக்களையும் மதுக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா விஸ்டா கார் ஒன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேலும் இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 சாராய குற்றவாளிகள் மீது குண்டச்சட்டம் பாய்ந்துள்ளது.

    மேலும் சாராயம் விற்பது காய்ச்சுவது மற்றும் கடத்தும் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலை அதே போல் புதூர் நாடு மற்றும் சேம்பரை கிராமத்தில் இன்று 2800 சாராய ஊரல்களும் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மேலும் இக்குற்றத்தில் ஈடுபட்டு தற்சமயம் மனம் திருந்தி வரும் நபர்களுக்கு மறு வாழ்விற்காக அரசு அளிக்கும் உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாகப் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    ×