search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Express Rail"

    • சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் போக்குவரத்து இயக்கப்படவில்லை.
    • இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேரில் பாார் ஆய்வு செய்தார். அவரிடம் திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி, வேதாரண்யத்தில் இருந்து வர்த்தகர்களும், வியாபாரிகளும் தொழில் நிமித்தமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் சென்னைக்கு அதிகமாக செல்ல வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வேதாரண்யம் மற்றும் திருத்து றைப்பூண்டி- அகஸ்தி யம்பள்ளியில் இருந்து சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் ரெயில் போக்குவரத்து இயக்கப்படவில்லை.

    எனவே, அப்பகுதி மக்களும், வணிகர்களும் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் சென்னைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கவில்லை என்பது பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக வேதாரண்யம் - சென்னைக்கு திருத்து றைப்பூண்டி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாபநாசம் ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.
    • கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அப்பொழுது திடீரென பசு மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது.

    இதில் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.

    இதில் பசு மாடு ரயில் என்ஜினில் சிக்கி சிறிது தூரம் இழுத்து சென்றது.

    இதனால் ரெயில் என்ஜின் கோளாறு ஆனது.

    பின்னர் கும்பகோணத்திலிருந்து மாற்று ரயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது .

    இது சம்பவத்தால் தஞ்சாவூர் கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்ர மணியம், ஏட்டு ஆறுமுகம் ஆழ்கியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்காக நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்கள் நாளை மறுநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
    • தூத்துக்குடி, விருதுநகர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் யார்டு பகுதியில் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ரெயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வருகிற 13-ந் தேதி ஈரோடு - நெல்லை செல்லும் விரைவு ரெயில் (வ.எண்.16845) திண்டுக்கல்- நெல்லை இடையேயும், நெல்லை - ஈரோடு விரைவு ரெயில் (வ.எண்.16846) நெல்லை,திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    கோவை-நாகர்கோவில் சந்திப்பு விரைவு ரெயில் (வ.எண்.16322) திண்டுக்கல் நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில் சந்திப்பு- கோவை விரைவு ரெயில் (வ.எண்.16321) நாகர்கோவில் - திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    பாலக்காடு சந்திப்பு- திருச்செந்தூர் விரைவு ரெயில் (வ.எண்.16731) திண்டுக்கல்-திருச்செந்தூர் இடையேயும், திருச்செந்தூர்- பாலக்காடு சந்திப்பு விரைவு ரெயில்

    (வ.எண்.16732) திருச்செந்தூர், திண்டுக்கல் இடையேயும், பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    திருச்சி- திருவனந்தபுரம் விரைவு ரெயில் (வ.எண்.22627) திருவனந்தபுரம் இடையேயும், திருவனந்த புரம்-திருச்சி விரைவு ரெயில் (வ.எண்.22628) திருவனந்தபுரம், விருதுநகர் பகுதியாக ரத்து இடையேயும் செய்யப்படும்.

    மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் விருதுநகர், தூத்துக்குடி இடையேயும், தூத்துக்குடி - மைசூர் செல்லக் கூடிய விரைவு ரெயில், (வ.எண்.16235) தூத்துக்குடி, விருதுநகர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    தாம்பரம்-நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20691) திருச்சி-நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில்-தாம்பரம் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20692) நாகர்கோவில், திருச்சி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    குருவாயூர்-சென்னை எழும்பூர் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.16128) நாளை (12-ந் தேதி) நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக சென்னை எழும்பூர் சென்றடையும்.

    நாகர்கோவில் சந்திப்பு- மும்பை சி.எஸ்.எம்.டி. செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண் 16340) நாளை மறுநாள் 13-ந் தேதி நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக மும்பையை சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்ேகாவில் டவுன் வழியாக இயக்கப்படுகிறது.
    • போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட செங்கனூர்-மாவேலிக்கரை, கருங்காப்பள்ளி-சாஸ்தன்கோட்டை, கடக்காவூர்-வர்கலா மற்றும் நாகர்கோவில் பராமரிப்பு பணிமனை ஆகிய இடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி புனலூர்-–மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16730) வருகிற 21, 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் ஜங்சன் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும். அதாவது, இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16729) வருகிற 21, 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு பதிலாக நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 4.35 மணிக்கு சென்றடையும்.

    மேலும் அங்கு இந்த ரெயில்களுக்கு மேற்கண்ட நாட்களுக்கு மட்டும் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமேசு வரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை இயக்கப்படும் வாரம் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22621) வருகிற 24-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் ஆரல்வாய் மொழி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • சிக்னல் கோளாறு காரணமாக
    • 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன

    அரக்கோணம் :

    திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து ஜோலார் பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணம் மற்றும் திருத்தணி செல்லும் புறநகர் ரெயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

    அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன.

    இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    • பாண்டோகிராப் கருவி உடைந்ததால் கோளாறு
    • பயணிகள் 2 மணி நேரம் அவதி

    அரக்கோணம்:

    சென்னை சென்டிரலில் இருந்து கோவை வரை செல் லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30-க்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    ரெயில்திரு வள்ளூர் மாவட்டம் திருவா லங்காடு ரெயில் நிலையத்தை கடந்த போது என்ஜினின் மேல் பகுதியில் உயர் அழுத்த கம்பியில் உரசியவாறு வரும் மின்சாரத்தை சேகரிக்கும் 'பாண்டோகிராப்' என்ற கருவி உடைந்து சேதமானது. இதனால் ரெயில் இயங்கமுடியாமல் நடு வழியிலேயே நின்றது.

    இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து ரெயில்வே மின்துறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-பெங்களூரூலால் பார்க் எக்ஸ்பிரஸ், சென்னை ஹூப்ளி வாராந்திர எக்ஸ் பிரஸ் ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்களும் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன.

    2 மணி நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. அதன்பின் மற்றரெயில்களும் புறப்பட்டன. இந்த தாமதத் தால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    • பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை 50 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 சந்திப்பு ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் இந்தியாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரிக்கு மானாமதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பாதைகள் செல்கிறது.

    மதுரை-திருச்சி அகல ரெயில் பாதை அமைக்கபட்ட காலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்படாமல் தென்மாவட்டங்களுக்கு காரைக்குடி-மானா மதுரை சந்திப்பு வழியாகத் தான் ரெயில்கள் இயக்கப்பட்டன. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது மானாமதுரையில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வசதி இருந்தது.

    இதுதவிர கேரளா மாநிலம் கொல்லம், பாலக்காடுக்கும் ரெயில் வசதி இருந்தது. அகல ரெயில் பாதை வந்த பிறகு பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரை , காரைக்குடி வழியாக தினசரி பகல் நேரத்தில் சென்னைக்கு ரெயில் வசதி கிடையாது. தற்போது திருச்சி வரை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சில ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி வரை விடப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு செல்கிறது.

    காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து தற்போது ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு கன்னியாகுமரியில் இருந்து பாண்டிசேரி வரை மின் பாதை வழிதடத்தில் நேரடியாக ரெயில்கள் செல்கிறது.

    எனவே சென்னையில் இருந்து காரைக்குடி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே துறைக்கும் மதுரை, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர்களுக்கும் மானாமதுரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பாபநாசத்திற்கு காலை 7.25-க்கு வந்து சேரும், பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும்.
    • சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.

    பாபநாசம்:

    அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் வண்டி
    (வண்டி எண்: 09419/09420 வருகின்ற ஜனவரி மாதம் 29-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில்
    நின்று செல்லும்.

    இந்த ெரயில் வருகின்ற 25.12.22, 1.1.23, 8.1.23, 15.1.23, 22.1.23, 29.1.23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை

    7.25-க்கு வந்து சேரும், பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 23.12.22, 30.12.22, 6.1.23, 13.1.23, 20.1.23, 27.1.23 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45-க்கு பாபநாசம் வந்து சேரும்.

    இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.

    சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் இணைப்பு வண்டியாக இருக்கும். இத்தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

    • போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.
    • சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்: 

    கோவையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு ெரயில் (05304) இயக்கப்படுகிறது.திங்கட்கிழமை காலை 4:40மணிக்கு கோவையில் புறப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நின்று ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா வழியாக பயணித்து புதன்கிழமை காலை கோரக்பூர் செல்கிறது. இன்று முதல் இந்த ெரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுகிறது.

    ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் நவம்பர் 16-ந்தேதி வரை கோவை ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது. போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.

    தினமும் காலை 6மணிக்கு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) 3-வது நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்று சேரும். கோவைக்கு மதியம் 12:20க்கும், திருப்பூருக்கு மதியம் 1:10க்கும் வரும்.

    நவம்பர் இரண்டாவது வாரம் வரை போத்தனூர் - கோவை இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் தன்பாத் எக்ஸ்பிரஸ் ெரயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு மதியம், 12மணிக்கு போத்தனூரில் நிற்கும்.போத்தனூரில் இருந்து இருகூர் வழியாக திருப்பூருக்கு பயணிக்கும். கோவை ெரயில்வே சந்திப்புக்கு வராது.பொறியியல் மேம்பாட்டு பணியால், மதுரை - கோவை, ஷொர்Èர் - கோவை, கோவை - கண்Èர், கோவை - ஷொர்Èர் உள்ளிட்ட ெரயில்களின் இயக்கமும் இன்று முதல் மாற்றப்படுகிறது. சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

    • தண்டவாள பராமரிப்பு பணியால் நெல்லை - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் பிலாஸ்பூர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22619) ரத்து.

    சேலம்:

    தென் கிழக்கு மத்திய ரயில்வே, நாக்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில்வே தண்டவாளப் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று திருநெல்வேலியில் இருந்து கோவை, திருப்பூர் ,ஈரோடு, சேலம் வழியாக சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் செல்லும் திருநெல்வேலி- பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22620) ரத்து செய்யப்படுகிறது,

    இதேபோல் மறு மார்க்கத்தில் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 5-ந் தேதி புறப்பட்டு மறுநாள் சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் பிலாஸ்பூர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22619) ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் மின்சார ரெயில் இயக்கத்தை நிரந்தரமாக நிறுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. #SouthernRailway
    சென்னை:

    மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்த பயணிகள் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பக்கவாட்டு சுவர் மீது மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த ரெயில் விபத்து குறித்து தெற்கு ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு சட்டப்பூர்வ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    சென்னை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று தொடங்கிய விசாரணை இன்று 2-வது நாளாக நீடித்தது. பொதுமக்கள் ரெயில்வே ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அவர் விசாரணை நடத்தினார். பொதுமக்கள் 12 பேர் உள்பட 18 பேரிடம் நேற்று விசாரணை முடிந்து விட்டது. இன்று 2-வது நாளாக ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.

    விசாரணை ஒருபுறத் நடைபெற்று வரும் நிலையில் பரங்கிமலை சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ‘பாஸ்ட்’ என்ற பெயரில் பீக்அவர்சில் மின்சார ரெயில் இயக்கப்பட்ட போது தான் இந்த விபத்து நடந்தது.

    மேலும் பரங்கிமலை ரெயில் நிலையம் 4-வது பிளாட்பாரம் அருகே உள்ள தடுப்பு சுவரும் விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    ஆனால் பக்கவாட்டு சுவரை முற்றிலும் அகற்றினால் அதிகளவு விபத்து- உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் மெயின் பாதையை கடக்க நேரிடும் என்பதாலும் பக்க வாட்டு சுவரை அகற்றுவது பெரிய இடர்பாடும் என்று கருதப்படுகிறது. அதனால் பக்கவாட்டில் சுவர்களின் உயரம் குறைக்கப்படுகிறது.



    அதேபோல கூட்ட நெரிசலை குறைப்பதற்காக எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் மின்சார ரெயில் இயக்கத்தையும் நிரந்தரமாக நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை- செங்கல்பட்டு- திருமால்பூர் இடையே இயக்கப்படும் ரெயில்கள் அனைத்தும் இனி மின்சார ரெயில்கள் செல்லும் வழியிலேயே செல்லவும், இனிமேல் எக்ஸ்பிரஸ் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும், ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    தற்போது எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்ந்து நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #SouthernRailway
    ×