search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "explosives"

    • நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது.
    • அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மர்மபொருளை கைப்பற்றினர். அது நாட்டு வெடிகுண்டா? அல்லது திருவிழாவின் போது போடப்பட்ட வெடி பொருளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிதம்பரத்தில் வெடி மருந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • வெடிபொருள் தயார் செய்துவிற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுள்ளார்.

    கடலூர்:

    சிதம்பரம் இளமையாக்கினார் கோயில்தெருவை சேர்ந்தசெந்தில் என்பவர்சிதம்பரம் புறவழிச்சாலையில் வெடிபொருள் தயார் செய்துவிற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுள்ளார். கடந்த 2021ம்ஆண்டு தேர்தல் நேரத்தில் பறக்கும் படை அதிகாரி கள் இந்த குடோனில் திடீர் சோதனை செய்தபோது அனுமதித்த அளவுக்கு அதிகமாக வெடி பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அதிகாரிகளின் தொடர் விசாரணையில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியரால் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவிநேற்று மாலை இந்த வெடிமருந்து குடோனில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டதில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வெடிபொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 582 வானவெடிகள், 35 நாட்டு சணல் வெடிகுண்டு,7 கிலோ கரி, 250 கிராம் சல்பர், 300 கிராம் பொட்டாசியம், வெடி மருந்து 1800 கிராம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவிஅந்த வெடிமருந்து குடோனுக்கு சீல் வைத்தார். பின்னர் வெடி மருந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதுகுறித்து கோட்டாட்சியர் ரவி, கடலூர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார்.

    • கடலூர் அருகே இன்று பயங்கரம் பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து 3 பேர் பலியானர்.
    • தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே எம்.புதூரில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் குடோன் உள்ளது. இன்று காலைஊழியர்கள் பணியில் இருந்தனர். இங்கு இன்று மதியம் திடீர் என குடோனில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தம் 2 கி.மீ. தூரத்துக்கு கேட்டது. அதோடு அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது போல் வீடுகள் குலுங்கியது. அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சத்தம் வந்த திசை நோக்கி சென்றனர். அப்போது நாட்டு வெடிகள் வைத்திருந்த குடோன் இடிந்து தரைமட்டமாகி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில்காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.

    விசாரணையில் இந்த குடோனில் 7பேர் வேலை பார்க்க வந்தனர். 2 பேர் மதிய உணவுக்கான சென்று விட்டனர். மீதமுள்ள 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனே தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 3 பேர் பலியாகி இருந்தனர். மற்ற 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்த ஒருவரின் உடல் சிதறி கிடந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    வயநாடு கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாவோயிஸ்டுகள் வெடி பொருளை வைத்து சென்ற சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களை பிடிக்க கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வயநாடு அருகே உள்ள பூக்காடுனங்கு பகுதியில் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர்.

    அவர்கள் பல்கலைக் கழகத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் புகுந்தனர். அங்கிருந்த காவலாளியை மிரட்டி நுழைவு வாயில் அருகே சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பிளக்ஸ் போர்டுகளையும் கட்டினர்.

    சுவரொட்டியில் சி.பி.ஐ. மாவோயிஸ்டுகளின் 14-ம் ஆண்டு பிறந்த நாள் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கொண்டாடப்படும் என எழுதப்பட்டு உள்ளது. பின்னர் வெளியே செல்ல காவலாளியிடம் வழிகேட்டனர். காலையில் அந்த வழியாக 3 மாணவர்கள் வந்தனர். அவர்களிடம் வழி கேட்டு விட்டு மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் புகுந்துவிட்டனர்.

    மாவோயிஸ்டுகள் அங்கிருந்து செல்லும் போது கல்லூரி வளாகத்தில் வெடி பொருளை வைத்து விட்டு சென்றுவிட்டனர். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வயநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். மாவோயிஸ்டுகள் வைத்து சென்ற வெடி பொருளை வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவை வெடி பொருட்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. வயநாடு பகுதியில் அடிக்கடி மாவோயிஸ்டுகள் நடமாட்டம அதிகரித்து வருகிறது. அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    ×