search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eroder ByElection"

    • உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் விளையாட்டாக பேசியிருப்பார்.
    • நடுசென்டர் என்று கூறினால் அதில் நடு என்பதும் ஒன்றுதான், சென்டர் என்பதும் ஒன்றுதான். எனவே தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் ஒன்று தான்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா போட்டியிட்டது. தற்போது இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் பேசி முடிவு செய்யும். அங்கு ஏற்கனவே 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் வரும்போது இணைந்து செயல்படுவோம். காங்கிரஸ் கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில் ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. எனவே இதை அரசியல் ஆக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதற்கு ஆளுநர் பொறுப்பாக மாட்டார்.

    உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் விளையாட்டாக பேசியிருப்பார்.

    நடுசென்டர் என்று கூறினால் அதில் நடு என்பதும் ஒன்றுதான், சென்டர் என்பதும் ஒன்றுதான். எனவே தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் ஒன்று தான்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பா.ஜ.க. தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை யார் எப்படி பேசினாலும் அவர்கள் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் தான் அ.தி.மு.க.வுக்கு பலம். கருத்து வேறுபாட்டோடு தேர்தலில் போட்டியிட்டால் பலவீனம் தான் ஏற்படும்.

    அ.தி.மு.க.வை பா.ஜ.க. பலவீனப்படுத்தவில்லை. அப்படி இருந்தால் ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது கட்சி தலைமை அறிவிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம், எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கியது பா.ஜ.க. தானா? என்று கேள்வி எழுப்பிய போது, பா.ஜ.க. ஆதரவோடுதான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

    ×