search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EPS attends"

    • மதுரை பழங்காநத்தம் பகுதியில் வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 29-ந் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகிற 29-ந் தேதி மதுரை வருகிறார். அவருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    தி.மு.க. தற்போது மக்கள் மனதில் நம்பிக்கை இழந்து விட்டது. அ.தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    விலைவாசி உயர்வால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். அவரால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை.

    வருகிற 29-ந் தேதி மாலை மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதில் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, பொன். ராஜேந்திரன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், என்.எஸ்.பாலமுருகன், எம். ஆர். குமார், பாலா, எம்.ஜி. பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×