search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering Exam"

    • நெல்லை மாவட்டத்தில் நாளை போட்டி தேர்வை 4,831 பேர் எழுதுகின்றனர்.
    • இந்த தேர்வானது மாவட்டத்தில் உள்ள பாளை, நெல்லை வட்டத்திலுள்ள 17 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத்தேர்வு நாளை

    (சனிக்கிழமை) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது.

    இந்த தேர்வானது மாவட்டத்தில் உள்ள பாளை, நெல்லை வட்டத்திலுள்ள 17 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    போட்டித் தேர்வினை 4,831 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்விற்காக தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 5 சுற்றுக்குழு அலுவலர்களும், தேர்வு மைய நடவடிக்கைகளை பதிவு செய்ய 18 வீடியோ கிராபர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பஸ்களை தேர்வு மையத்திற்கு கூடுதலாக இயக்கிடவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையத்திற்கு போதிய அளவில் போலீஸ் பாதுகாப்பும், 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மருத்துவகுழுவும் தயார் நிலையில் வைத்தடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வர இருப்பதால் தேர்வு மையங்களில் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்திடவும், தேர்வர்கள் முக கவசம் அணிந்து வருவதுடன் கொரோனா தொற்று தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றவும், தேர்வு மையத்தினை கண்டறிந்து முன்கூட்டியே தேர்வு எழுத வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது, தேர்வர்கள் தவிர வேறு நபர்களுக்கு தேர்வு மைய வளாகத்திற்குள் வர அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×