என் மலர்

  நீங்கள் தேடியது "employee were arrested"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ெமாபட் மற்றும் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
  • போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  கோவை,

  துடியலூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையில் வெள்ளக்கிணறு ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

  அப்போது அந்த வழியாக வந்த ெமாபட் மற்றும் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 கிேலா கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிய வந்தது.

  இதனையடுத்து போலீசார் கஞ்சாவை கடத்தி வந்த தேனியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஜசாந்த் (வயது 23), கோவையை சேர்ந்த கவின் ராஜ் (21), சிங்காநல்லூரை சேர்ந்த முகேஷ் கண்ணன் (22) ஆகியோரை கைது செய்தனர்.

  பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  மேலும் அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்த மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  

  ×