search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eggs"

    • தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    அகில இந்திய அளவில் முட்டைக்கோழி வளர்ப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில், 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் தமிழக சத்துணவு திட்டத்துக்கும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறைந்த அளவிலான முட்டை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    என் முட்டை, என் விலை என்ற அடிப்படையில், முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 நாட்கள் நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நிர்ணயிக்கப்படும் விலையை அனுசரித்தே, தமிழகத்திலும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

    கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக என்இசிசி நிர்ணயம் செய்து அறிவித்தது. தொடர்ந்து 9-ம் தேதி ரூ.5.20, 11-ம் தேதி ரூ.4.90, 14-ம் தேதி ரூ. 4.60, 16-ம் தேதி ரூ. 4.40, 25-ம் தேதி ரூ. 4.20, நேற்று (1-ம் தேதி) ரூ.4 என முட்டை விலையில் தொடர் சரிவு ஏற்பட்டு ஒரே மாதத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.50 குறைந்துள்ளது.

    மேலும் நெஸ்பேக் என்ற முட்டை மற்றும் பண்ணையாளர்கள் கூட்டமைப்பு, முட்டை கொள்முதல் செய்யும் மொத்த வியாரிகளுக்கு ஒரு முட்டைக்கு 40 பைசா குறைத்து வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.60 மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் என்இசிசி அறிவிக்கும் விலைக்கும், பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் விலைக்கும் பெரிய இடைவெளி உருவாகிறது.

    ஆனால் வியாபாரிகள் விலையைக் குறைத்து வாங்கி சில்லரையில் விற்பனை செய்யும் போது, என்இசிசி விலைக்கும் கூடுதலாக லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் முட்டை வாங்கும் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

    இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள், முட்டை கொள்முதல் விலை தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்–பட்டுள்ளனர். கோழிப்பண்ணைத் தொழிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.
    • கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணை யாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    மற்ற மண்டலங்களில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், ஆடிப் பண்டிகை காலமாக இருப்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு வெகுவாக குறைந்துள்ளதாலும், தேக்கத்தை கட்டுப்படுத்தவும் முட்டை விலையைக் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

    கறிக்கோழி

    பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 81-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 90-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

    • முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
    • ஆடி மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அதிகரித்து வருவதாலும் விலையில் மாற்றம் செய்யலாம்.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.

    இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ஆடி மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அதிகரித்து வருவதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

    அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.20-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

    அேதபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 71-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

    • நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை குறைந்துள்ளது.
    • இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    வட மாநிலங்களில் பண்டிகைக் காலமாக இருப்பதால் முட்டை விற்பனை சரிந்துள்ளது, இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. ஆடி மாதம் பிறக்க உள்ளதால், மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்துள்ளது. இதனால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏற்கனவே கடந்த வாரம் 60 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 30 காசுகள் குறைத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60-ஆக நிா்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 100-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது

    முட்டை முற்றிலும் சத்து வாய்ந்த உணவு என்பது மருத்துவரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும் உண்மை. வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
    இன்று(அக்டோபர் 12-ந்தேதி)உலக முட்டை தினம்.

    காலங்காலமாக உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் உணவில் முட்டைக்கு தனி இடம் உண்டு. முட்டை முற்றிலும் சத்து வாய்ந்த உணவு என்பது மருத்துவரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும் உண்மை. ஞாபக சக்தி மேம்படவும், மூளை மற்றும் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், பார்வை திறனுக்கும் முட்டை பல விதங்களில் உதவுகிறது. முட்டையின் நன்மைகளைப் பரவலாகத் தெரியப்படுத்துவதற்காகவும் மனிதர்களின் வாழ்க்கையில் முட்டையின் சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

    உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும், குறிப்பாக வைட்டமின்கள் ஏ, பி12, பி2, பி5 முதலியவை உள்ளன. மேலும் கோலின் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன. முட்டை சத்துகளின் தொகுப்பாகும். வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    வைட்டமின் ‘டி’யைத் தரும் உணவுகளில் இதன் மஞ்சள் கருவும் ஒன்று. கொழுப்புச் சத்துகளின் இருப்பிடமாக மஞ்சள் கரு இருப்பதால் அதை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முட்டை சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாத நோய் வருவதில்லை. இருப்பினும் இதய நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் முட்டையை தவிர்ப்பது நல்லது. அவர்கள் ஒரு நாளைக்கு 2, 3 முட்டைகளின் வெள்ளைக் கருவை எடுத்துச் சாப்பிடலாம்.

    முட்டையில் உள்ள புரதம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் மாவு சத்து உள்ள உணவுகள், நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுவதால் உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது. கோழி முட்டை நம்மிடையே பிரபலமாக உள்ளது. சராசரியாக ஒரு கோழி வருடத்துக்கு 150 முதல் 200 முட்டைகள் இடும். ஒரு கோழி 21 வார வயதாக இருக்கும் போது முட்டையிடும்.



    இயற்கையாகவே முட்டைகளுக்கு பாதுகாப்பு கவசமுள்ளது. எனினும் அது எளிதில் உடையக்கூடியது. முட்டைகளை வாங்கும் போது நல்ல முட்டைகளாக ரத்தக்கறை இல்லாத முட்டைகளாக பார்த்து வாங்க வேண்டும். ஓடு உடைந்த முட்டைகளை வாங்க கூடாது. ஓடு உடைந்த முட்டை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் கெட்டுவிடும். நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் போலி முட்டையின் ஓடு பார்ப்பதற்கு பள பள வென்று இருக்கும். தொட்டு பார்த்தால் சிறிது சொர, சொரப்பாக இருக்கும். உண்மையான முட்டை இறைச்சி வாசனைத்தரும். போலி முட்டையில் எந்தவித வாசனையும் இருக்காது. போலி முட்டையை உடைத்த உடனேயே மஞ்சள் கருவும், வெள்ளைக்கருவும் ஒன்றாக கலந்து விடும்.

    முட்டைகளை குளிர் சாதனப் பெட்டியின் உள்அறையில் தான் வைக்க வேண்டும். இதன் மூலம் நிலையான மற்றும் குளிர் வெப்ப நிலையை பராமரிக்க முடியும். குளிர் சாதனப் பெட்டியின் கதவில் வைக்கும்போது வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக முட்டையின் தரம் கெட்டு போக வாய்ப்புள்ளது. அதை உபயோகிக்கும் போது உடலில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. முட்டைகளை மண் பானையில் வைப்பது சிறந்தது.

    குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முட்டைகளை பச்சையாக குடிக்கக்கூடாது. அது பாக்டீரியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் வேக வைத்த முட்டையை சாப்பிடலாம். நாட்டுக்கோழி முட்டைக்கும், பிராய்லர் கோழி முட்டைக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டுக்கும் சத்து ஒன்று தான். நடை முறையில் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த ஒரு முழு உணவாக முட்டை திகழ்கிறது.

    முட்டைகளை நன்றாக அவித்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் அது குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது போன்ற விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருப்பது அவசியம்.உலக அளவில் முட்டைக்கான சந்தையில் கோழிமுட்டை மட்டுமின்றி வாத்து, காடை, கவுதாரி போன்றவற்றின் முட்டைகளும் பிரபலமானவை. இந்தியா முட்டை உற்பத்தியில் 3-வது இடத்தில் உள்ளது.

    ரம்யா ராமச்சந்திரன்,

    ஊட்டச்சத்தியல் நிபுணர்
    ×