search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Earthquake"

    • கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • லடாக்கில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.

    லடாக்:

    காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று அதிகாலை 5.39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • 12,426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    சீனா மற்றும் கிர்கிஸ்தான் எல்லை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். நிலநடுக்கம் காரணமாக 12 ஆயிரத்து 426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    முன்னதாக கசகஸ்தான் சுகாதார துறை வெளியிட்ட தகவல்களில் பலத்த காயமுற்ற 44 பேர் உதவி கோரியதாக தெரிவித்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்களில் மக்கள் அச்சத்தில் அலறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    நிலநடுக்கம் காரணமாக சீனாவில் 47 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 78 கட்டடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.
    • சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

    சீனா:

    சீனாவின் ஜின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் நேற்றிரவு 11.39 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 11.45 முதல் 12 மணிக்குள் மக்கள் கடும் அதிர்வை உணர்ந்துள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக டெல்லியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய பெருங்கடலின் தென்மேற்கில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 6.4 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    இந்திய பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதேபோல், பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 592 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    • இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.3 புள்ளியில் நிலநடுக்கம் உண்டானது
    • ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டன. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் அதிர்ந்தன.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.3 புள்ளியில் நிலநடுக்கம் உண்டானது. இது 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

    • ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு.
    • பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது.

    பாகிஸ்தான் நாட்டின் லாகூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா ஆகிய நகரங்களில் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியேறினர்.

    அதேபோல் இந்தியாவில் வட மாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வால் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

    கடுமையான நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 மாதத்திற்குள் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
    • நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேசமோ ஏற்படவில்லை என தகவல்

    அந்தமான் நிகோபார் தீவில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அந்தமான் நிகோபார் தீவில் புதன்கிழமை காலை 7.53 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கடல் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் மையம்கொண்டு, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான், இந்தோனேசியாவை தொடர்ந்து இப்போது அந்தமான் நிக்கோபார் தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    • நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
    • சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    ஜப்பானின் ஹாங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.

    இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    • உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இந்தோனேசியா தீவுகளில் நிலநடுக்கம் என்பது வழக்கமான ஒன்றதாகிவிட்டது. அடிக்கடி அங்குள்ள தீவுகள் அதிர்ந்த வண்ணமே உள்ளன.

    • ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
    • ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்

    தஜிகிஸ்தான் நாட்டில் சனிக்கிழமை காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின் படி, தஜிகிஸ்தானில் காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ஆழம் 80 கிலோ மீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. இருப்பினும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    • நிலநடுக்கத்தால் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
    • 240 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என தகவல்.

    புத்தாண்டின் முதல் நாளிலேயே ஜப்பானை சுனாமி தாக்கியது. ஜப்பானின் இஷிகவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானது.

    இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 240 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தற்காப்புப் படைகளின் எண்ணிக்கையை 4,600 ஆக அதிகாரிகள் இரட்டிப்பாக்கியுள்ளனர். 

    இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மற்றும் அதன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜப்பான் பிரதமர் ஃபுசியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜனவரி 1-ம் தேதி அன்று ஜப்பானில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் குறித்து அறிந்து மிகுந்த வேதனையும், கவலையும் அடைகிறேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரழிவால் பாதிக்கப்பட்ட ஜப்பானுடனும் அதன் மக்களுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×