search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durga devi"

    • பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
    • அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.

    பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

    அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.

    அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.

    பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    • நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
    • அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.

    நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.

    அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.

    இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு,

    அடுத்த 3 நாட்கள் மஞ்சள்

    நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.

    வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:

    முதல் நாள் பச்சை,

    இரண்டாம் நாள் மஞ்சள்,

    மூன்றாம் நாள் நீலம்,

    நான்காம் நாள் கருநீலம்,

    ஐந்தாம் நாள் சிவப்பு,

    ஆறாம் நாள் கிளிப்பச்சை,

    ஏழாம் நாள் இளஞ்சிவப்பு,

    எட்டாம் நாள் பச்சை/அரக்கு பார்டர்,

    ஒன்பதாம் நாள் வெந்தய கலர்.

    • இங்கு, ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.
    • இதை நினைவு கூறும் விதத்தில் “ராமலீலா” என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்ளில் ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.

    ராமபிரான் இலங்கைக்கு போருக்கு சென்றபோது பேராற்றலும், பலமும் வேண்டி அம்பிக்கையை பூஜித்தார்.

    இதை நினைவு கூறும் விதத்தில் "ராமலீலா" என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    விஜயதசமி அன்று ராவணனின் உருவத்தை பத்து தலைகளுடன் செய்து அதை நெருப்பிட்டு எரிக்கிறார்கள்.

    அந்த பொம்மைக்குள் பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை நிரப்பி மைதானங்களில் வைத்து கொளுத்தி விடுவார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு "ராவண தகனம்" என்று பெயர்.

    மனதில் உள்ள தீய எண்ணங்களை நீங்கி நல்லருள் பெற வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    • மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.
    • வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.

    மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமி தினத்தன்று வழிபடுவதோடு, அதன் இலைகளையும் பறிப்பர்.

    அங்கு வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.

    இளைஞர்கள் இந்நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசியைப் பெறுவார்கள்.

    பெரியவர்களும் ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெற வேண்டும் என்ற அடிப்படையில்

    அந்த இலைகளை கொடுத்து "இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்" என சொல்லி ஆசீர்வதிப்பர்.

    மகாராஷ்டிரா மாநில கோவில்களில் வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.

    • மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • “தஸ்ராத்” என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அரசு சார்பில் இங்கு மிகப் பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்படும்.

    ஒரு காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் மைசூர் சாமுண்டீசுவரியை ஒன்பது நாட்கள் இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம்.

    10வது நாளான விஜயதசமி நாளில் போருக்கு புறப்பட்டு செல்வர்.

    இதன் மூலம் தேவி அருளால் வெற்றி வாகை சூடி மகிழ்வர்.

    இன்றும் மைசூரில் தசரா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    "தஸ்ராத்" என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    இச்சொல்லே திரிந்து "தசரா" என்று வழங்கப்படுகிறது.

     முதல் ஒன்பது நாளும் நவராத்திரியாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடுகிறார்கள்.

    நவராத்திரியின் போது புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர்.

    • அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.
    • பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    பார்வதிதேவி சிவலோகத்தில் இருந்து தன் பிறந்த வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சியாக

    மேற்கு வங்கத்தில் காளிபூஜை கொண்டாடப்படுகிறது.

    இந்த சமயத்தில் மேற்கு வங்காள பெண்கள் எத்தனை வயது உடையவராக இருந்தாலும்,

    அவரவர் பிறந்த வீட்டுக்கு செல்வது வழக்கம்.

    அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.

    தன் வீட்டில் இருக்கும் ஆபரணங்களையும், இனிப்பு வகைகளையும் மகள் மீது அள்ளி எறிந்து மகிழ்கின்றனர்.

    தவிர்க்க முடியாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு வர முடியாமல் போனால்,

    பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    இதனால் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டிற்கும் நல்லுறவை உண்டாகும் பாலமாக இந்த விழா திகழ்கிறது.

    • பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.
    • வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    ராகு கிரகத்தின் அதிபதியான துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபட வேண்டும்.

    குறிப்பாக திருமணம் நடைபெறாமல் கால தாமதமாகி வரும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் 13 வாரங்கள் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக அந்த கன்னிக்கு மனம்போல் மணமகன் வாய்த்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

    பிள்ளை பேறு இல்லாமல் மன அமைதியற்ற ஆண்களும் அன்னை துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் பூஜித்து வந்தால் அன்னையின் அருட்காடசத்தினால் அவரது மனைவி கருத்தரிப்பாள்.

    இதனால் பிள்ளை பேறு உண்டாகி சந்தோஷமடைவாள்.

    பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.

    குழந்தை செல்வம் கிடைக்கும்.

    வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்.

    ஆண்கள் துர்க்கையை வழிப்பட்டு வந்தால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

    வியாபாரம் விருத்தியாகும்.

    செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும்.

    இளம் பெண்கள் துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய் கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.

    நல்ல கணவன் அமைவான்.

    வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    அதனால் குடும்பம் செல்வக் களஞ்சியமாகும்.

    பிறக்கும் குழந்தைகளும் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்.

    இதனால் வாழ்க்கையில் மேலும் மேலும் சந்தோஷம் உண்டாகும்.

    • ஞாயிற்றுக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்வதால் வறுமை நீங்கும்.
    • வெள்ளிக் கிழமைகளில் தேங்காய் சாதம் நைவேத்யம் செய்தால் மாங்கல்ய பலன் பெருகும்.

    ராகு கேது பெயர்ச்சியான ஜாதக ரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது.

    ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விவரம் தரப்பட்டுள்ளது.

    ஞாயிறு

    ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6.00 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும்.

    சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள்

    திங்கள்கிழமைகளில் காலை 7.30-9.00 க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

    இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    செவ்வாய்

    ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும்.

    இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    புதன்

    மதியம் 12.00 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும்.

    இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பதும், ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.

    வியாழன்

    வியாழக் கிழமைகளில் மதியம் 1.30-3.00 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும்.

    இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    வெள்ளி

    வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12.00 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம்.

    எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும்.

    இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சனி

    சனிக்கிழமைகளில் காலை 9.00-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

    இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.

    • சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர்.
    • துர்க்கை வழிபாடு என்பது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது.

    துர்க்கை வழிபாடு என்பது தற்பொழுது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது. ஆனால் கோனியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் ராகு காலத்தில் ஆதிகோனியம்மன் சன்னதிக்கு பக்கத்தில் உள்ள மேடையில் எலுமிச்சம் பழத்தில் விளக்கு வைத்து வழிபடுவர்.

    திருமண தடைகள், காரிய தடைகள், தொழிலில் நஷ்டம், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் நோய் தீர்க்க வேண்டியும் 48 வாரம், 18 வாரம், 9 வாரம் போன்ற கணக்குகள் வைத்து துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.

    அவர்கள் நினைத்த வாரம் வரை வந்து விட்டால் இறுதி யில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், திருமண தடைகளுக்காக வேண்டியவர் அம்மனுக்கு பொட்டு மாங்கல்யம் செய்து அம்மன் கழுத்தில் அணிவித்து அதை காணிக்கையாக செலுத்துவர்.

    உடல்நிலை சரியில்லாத வர்கள் வெள்ளியாலேயோ அல்லது அதுபோன்ற வேறு உலோகத்தாலேயோ செய்யப்பட்ட கண்ணடக்கம், கை, கால் போன்றவை வாங்கி பூஜை செய்துபின் அதை காணிக்கையாக செலுத்துவர்.

    சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர். காரியத்தடை ஏற்படுபவர்கள் பல தானங்களை செய்கின்றனர். இவ்வாறு செய்வதனால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த வேண்டுதல் உள்ளூர் மக்கள் மட்டும் வேண்டுவது இல்லை. வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பம்பாய், கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து வேண்டுதல் செய்கின்றனர். மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கோனியம்மனுக்கு தீவிர பக்தர்கள் உண்டு. அவர்கள் வேண்டுதலுக்கு காணிக்கைகளை அஞ்சலில் அனுப்புவதும் உண்டு.

    • ஆனி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும்.
    • எதிரிகள் தொல்லை விலகத் துர்க்கை அம்மன் ஆசி வழங்குவார்.

    தமிழ் மாதங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்குச் சிறப்புக்குரிய மாதங்களாகக் கருதப்படுகிறது. அதில் ஆனி மாதமும் மற்றும் ஆடி மாதமும் அம்மனுக்குரிய சிறப்பு மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என ஆன்மீகம் கூறுகிறது.

    ஆனி மாதம் பிறந்து விட்டாலே அது அம்மனுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. ஆனி மாதம் என்பது வைணவம் மற்றும் சைவம் பாகுபாடுகள் இல்லாமல் எல்லா பெண் தெய்வங்களையும் கொண்டாடக் கூடிய சிறப்பு மாதமாகும். இந்த மாதத்தில் பராசக்தியாக விளங்கக்கூடிய அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

    பராசக்தியை வழிபாடு செய்யும்பொழுது நம்மைச் சுற்றியுள்ள துர்தேவதைகள் விலகி விடுவார்கள் என ஆன்மீகம் கூறுகிறது. அதேபோல் நடராஜரை வணங்கக்கூடிய சிறப்பு மாதமாக இந்த ஆனி மாதம் கருதப்படுகிறது.

    இறைவனை வணங்குவதற்குத் தனிப்பட்ட ஸ்லோகங்கள் எதுவும் கிடையாது. மனதார நினைத்துக் கொண்டு மனதில் தோன்றக்கூடிய வேண்டுதல்களை வைத்து இறைவனை வழிபட்டாலே அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.

    ஆனி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும். சாந்தமான தெய்வங்கள் முதல் உக்கிரமான தெய்வங்கள் வரை அனைத்து தெய்வங்களையும் விரதம் இருந்து வழிபடுவதற்கு உரியத் தினமாக இந்த செவ்வாய்க்கிழமை விளங்குகிறது.

    அதேசமயம் துர்க்கை அம்மனை வேண்டி செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும். செவ்வாய்க்கிழமை என்று விரதம் இருந்து ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை மனதார நினைத்து எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்று வழிபட்டால் துஷ்ட சக்திகள் இருந்து விடுபடலாம் என கூறப்படுகிறது.

    எதிரிகள் தொல்லை விலகத் துர்க்கை அம்மன் ஆசி வழங்குவார் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆனி செவ்வாய் திருநாளில் பராசக்தியின் அவதாரமாக விளங்கக்கூடிய அனைத்து அம்மனையும் மனதார நினைத்து வழிபட்டு விரதம் இருந்தால் மங்கள காரியங்கள் உண்டாகும் எனும் கூறப்படுகிறது.

    அதேசமயம் கிராமத்தில் இருக்கக்கூடிய தெய்வங்களையும், எல்லையைக் காக்கக்கூடிய தெய்வங்களையும் வீட்டில் இருந்தபடியே வழிபட்டால் இன்னல்கள் விலகும் எனக் கூறப்படுகிறது.

    • துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்று பொருள்.
    • ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.

    உலகுக்கே சக்தியாகத் திகழ்பவள் ஸ்ரீபார்வதி தேவி. சக்தி தெய்வங்களுக்கெல்லாம் தலைவி என்று உமையவளைப் புகழ்கிறது புராணம். மற்ற எல்லாப் பெண் தெய்வங்களும் பார்வதி தேவியின் அம்சம், வடிவம், அவதாரம் என்றே புராணங்கள் விவரிக்கின்றன.

    பார்வதிதேவியின் முக்கியமான வடிவங்களில் துர்காதேவியும் ஒருத்தி என்றும் பார்வதி தேவிக்கு இணையான சக்தியைக் கொண்டவள் என்றும் தேவி மகாத்மியம் விவரிக்கிறது. துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்றும் 'எவராலும் வெல்லமுடியாதவள்' என்றும் பல அர்த்தங்கள் உள்ளன.

    சக்தி மிக்க தேவியரில் துர்கா தேவியும் துர்காதேவி வழிபாடும் மிக மிக உன்னதமானவை. எல்லா நாளிலும் எந்த நேரத்திலும் துர்கையை வணங்கலாம். எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில் துர்கைக்கு சிலை வடிக்கப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம் என்றாலும் ராகுகால வேளையில் துர்கையை வழிபடுவது இன்னும் பலமும் பலனும் தரும்.

    துர்கை உக்கிர தெய்வம்தான். தீமைகளை அழிக்கவும் துர்குணங்களை நாசம் செய்யவும் துர்குணம் கொண்டவர்களை அழித்தொழிக்கவும் பிறப்பெடுத்தவள் துர்கை. அதனால்தான் ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.

    செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் துர்கை விரத வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த நாட்களில் அம்மன் விரத வழிபாடும் அம்பிகை விரத வழிபாடுமே முக்கியத்துவம் கொண்டவைதான் என்றபோதும் விரதம் இருந்து துர்கையை இந்தநாட்களில் அவசியம் வழிபட்டு வந்தால், கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதிகூட இணைந்துவிடுவார்கள் என்பது ஐதீகம்.

    செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை. அதேபோல, வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் என்பது காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. இந்த நேரங்களில், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று துர்காதேவிக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வழிபடலாம். எலுமிச்சையில் தீபமேற்றி நம் பிரார்த்தனைகளைத் தெரிவிக்கலாம். துர்கையின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, நம்முடைய கோரிக்கைகளை அவளிடம் சமர்ப்பிக்கலாம்.

    துர்கை காயத்ரி மந்திரம் :

    ஓம் காத்யாயனய வித்மஹே

    கன்யாகுமரி தீமஹி

    தந்நோ துர்கிப் ப்ரசோதயாத்

    எனும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வரலாம். அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவசியம் சொல்லி, துர்கையை தரிசிக்கலாம்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில், துர்கை சந்நிதிக்கு முன்னே அமர்ந்துகொண்டு, இந்த மந்திரத்தைச் சொல்லி, எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், நம் வாழ்வில் இதுவரை இருந்த துன்பங்கள் அனைத்தும் காணாமல் போகும். தடைகளையெல்லாம் தகர்த்தருளுவாள் தேவி. விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.

    • மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
    • தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    துர்க்கை அம்மன் வழிபாடு என்பது மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு தினமும் ஒரு குறிப்பிட்ட வேளையில், துர்க்கை அம்மனை வழிபடும்போது, நாம் வைக்கும் கோரிக்கைகளை அம்பாள் நிறைவேற்றித் தருவார் என்பது ஐதீகம். அதோடு திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், அதில் இருந்து வெகு விரைவாக விடுபடுவார்கள் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை. துர்க்கை அம்மனை எந்த தினங்களில் எப்படி வழிபடலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

    ஞாயிறு: ஆலயங்களில் காட்சி தரும் துர்க்கைக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகும். அதோடு எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள்: திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள், துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும். மேலும் வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.

    செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

    புதன்: மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து விளக்கேற்றி, புளியோதரை நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் ரத்த சம்பந்தமான நோய் ஏதாவது இருந்தால், அது நீங்கும்.

    வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம் பழம் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேலும் இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

    வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் துர்க்கையை வழிபட வேண்டும். இது மற்ற நாட்களை விட, மிகவும் ஏற்றம் தரும் காலம் ஆகும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்.

    சனி: சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.

    ×