search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "donate"

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #HIVBlood #PregnantWoman

    சாத்தூர்:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பாதிக்கப்பட்டார். அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இன்று சாத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #HIVBlood #PregnantWoman

    தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalaniswami #Blackday
    சென்னை:

    கொடிநாள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நம் தாய் திருநாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் சேவையையும் தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 7-ம் நாள் நாடு முழுவதும் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.



    இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் நமது பாரத நாட்டின் எல்லைப் பகுதிகளை இரவு பகல் பாராது காவல் காப்பதோடு, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் நாட்டு மக்களை காக்கும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

    தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் தியாக சீலர்களான நமது முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்தம் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல நலத் திட்டங்களை வகுத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

    போரில் உயிரிழந்த படை வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பட்ட படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்க்கு மருத்துவ நிவாரண நிதியுதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் வழியாக முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அம்மாவின் அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

    கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடர்ந்திடவும், தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டுமென நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #EdappadiPalaniswami #Blackday
    பொதுவாக மாமியாருக்கும், மருமகளுக்கும் சுமூகமான உறவு இருக்காது. இருவரும் கருத்து வேறுபாடுகளுடன்தான் இருப்பார்கள். இத்தகைய கால கட்டத்தில் மருமகளுக்கு மாமியார் சிறுநீரகம் கொடுத்து உயிர் அளித்த சம்பவம் நடந்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் சோனிகா (32). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன. எனவே, சிறுநீரக மாற்று ஆபரேசன் அல்லது டயாலிசிஸ் செய்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

    நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாது. சிறுநீரக மாற்று ஆபரேசன் தான் ஒரே வழி என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே சோனிகாவின் தாயாரை தொடர்புகொண்டு சிறுநீரகம் தானம் வழங்கும்படி கேட்டனர்.

    அதற்கு தாயார் மறுத்து விட்டார். பின்னர் அவரது தந்தை மற்றும் சகோதரர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களும் சிறுநீரகம் தர மறுத்துவிட்டனர்.

    ஆனால் சோனிகாவின் மாமியார் கனிதேவி (60) தனது மருமகளுக்கு சிறுநீரக தானம் வழங்கமுன்வந்தார். சோனிகாவை தனது மகளாக பார்க்கிறேன் என்றார். பல பரிசோதனைகளுக்கு பிறகு கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    தற்போது சோனிகா உடல் நலத்துடன் இருக்கிறார். தனக்கு சிறுநீரகம் கொடுத்து உயிர்காத்த மாமியாரை தாயாக பார்க்கிறேன்’’ என்றார்.
    தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர். #Modi #Amritanandamayi #SwacchBharat
    புதுடெல்லி:

    சர்வதேச தூய்மை மாநாடு புதுடெல்லி கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.

    அவர் வழங்கிய ரூ.100 கோடி மூலமாக கங்கைக்கரையில் வசிக்கக் கூடிய ஏழை, எளிய மக்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் ஆசிரமத்தின் தூய்மைத் திட்டங்கள் குறித்த காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மாநாட்டில் மத்திய மந்திரிகள் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ், மனோஜ் சின்கா, ஹர்தீப்சிங்பூரி மற்றும் 50 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  #Modi #Amritanandamayi #SwacchBharat 
    பிறந்தநாள் பரிசாக மகளுக்கு தந்தை அளித்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள ‘தங்க கேக்’ கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது. துபாய் மாணவி இந்த உதவியை செய்துள்ளார். #KeralaFloods #GoldBirthdayCake
    துபாய்:

    பிறந்தநாள் பரிசாக மகளுக்கு தந்தை அளித்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள ‘தங்க கேக்’ கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது. துபாய் மாணவி இந்த உதவியை செய்துள்ளார்.

    துபாயில் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் விவேக் கல்லிதில். கேரளாவை சேர்ந்த இவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த வர்னிகா, தியூதி, பிரணதி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு வயது 12.



    3 பேரும் துபாயில் உள்ள டெல்லி தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். விவேக் தனது 3 மகள்களின் பிறந்த நாளுக்கு ½ கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட ‘கேக்’ பரிசளித்துள்ளார்.

    துபாய் அல் பர்சாவில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டயமண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ‘தங்க கேக்’ 22 காரட் ஆபரணத்தங்கத்தில் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ‘கேக்’கின் மேற்புறத்தில் உள்ள மலர் வடிவம் துருக்கியில் இருந்து வரவழைக்கப்பட்டதாகும். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இந்த ‘கேக்’, ரூ.19 லட்சம் மதிப்புடையது.

    கேரளாவில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி சேகரிக்கப்பட்டு வருவதை விவேக் கல்லிதில் மகள்களில் ஒருவரான பிரணதி அறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் மற்ற சகோதரிகளுடன் பேசி, பிறந்த நாள் பரிசாக தந்தை கொடுத்த ‘தங்க கேக்’கை நிவாரண பொருளாக வழங்க முடிவு செய்து தந்தையிடம் தெரிவித்தார்.

    மேலும் ஆடைகள் மற்றும் காலணிகளை நிவாரண பொருட்களாக வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார். மகளின் உதவும் நோக்கத்தை பார்த்து வியந்த விவேக் கல்லிதில் உடனடியாக அந்த ‘தங்க கேக்’கை பணமாக மாற்றி கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார்.

    இதுகுறித்து மாணவி பிரணதி கூறியதாவது:-

    எனது தந்தையின் அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களின் குடும்பத்தினர் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீட்டின் கூரைகளில் தங்கியிருந்ததாக கூறினர். இதனை கேட்ட பிறகுதான் அங்கு துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

    எனவே நான் இந்த ‘கேக்’கை நன்கொடையாக அளித்தேன். எனது வீட்டின் அலமாரியில் வெறுமனே அலங்கார பொருளாக ‘தங்க கேக்’ இருப்பதை விட பல ஆயிரம் பேர்களின் கண்ணீரை துடைத்தால் அதுதான் மதிப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி பிரணதியின் இந்த மனிதாபிமான உதவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. #KeralaFloods #GoldBirthdayCake 
    தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார். #KeralaFlood #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கேரள வெள்ள சேதம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், மூத்த அதிகாரிகள், வெங்கையா நாயுடுவின் செயலாளர்களும் பங்கேற்றனர். அப்போது தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.



    அவருடைய ஒரு மாத சம்பளம் ரூ.4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க முடிவு செய்துள்ளனர். #KeralaFlood #VenkaiahNaidu
    வெள்ளச் சேதத்தால் தள்ளாட்டம் போடும் கேரளா அரசின் துயர் துடைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் 20 கோடி ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளனர். #Keralaflood #Keralafloodrelief
    ஐதராபாத்:

    வரலாறு காணாத பேரழிவில் சிக்கியுள்ள கேரள மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஆந்திர அரசில் பணியாற்றும் என்.ஜி.ஓ.க்கள் ( Non-Gazetted Officers) சார்பில் கேரளா அரசின் துயர் துடைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் 20 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்படும் என அம்மாநில என்.ஜி.ஓ.க்கள் சங்கத் தலைவர் அசோக் பாபு இன்று தெரிவித்துள்ளார்.

    அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு இந்த தொகை அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிக்க ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கமும் முன்வந்துள்ளது. #Keralaflood #Keralafloodrelief
    எப்படிப்பட்ட ஜாதக அமைப்புக் கொண்டவர்கள் தங்கு தடையின்றித் தாராளமாக தான, தர்மம் செய்வார்கள் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒரு சிலருக்கு தானம் செய்யும் மனம் இருக்கும்; ஆனால் பணம் இருக்காது. ஒரு சிலரிடம் நிறைய பணம் இருக்கும்; ஆனால் தானம் செய்வதற்கு மனம் இருக்காது. மனமும், பணமும் இணைந்து யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் தான, தர்மங்களை தடையின்றிச் செய்ய இயலும். தானம் செய்து புகழ்பெற்றவன் கர்ணன்.

    அப்படி கலியுலக கர்ணனாக ஒருவர் விளங்க வேண்டுமானால் ஒன்பதாம் இடத்தில் சுப கிரகம் இருக்க வேண்டும். ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி உச்சம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி, குருவுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். லக்னாதிபதியை, ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்புக் கொண்டவர்கள் தங்கு தடையின்றித் தாராளமாக தான, தர்மம் செய்வார்கள். 
    ×