என் மலர்

  நீங்கள் தேடியது "doctor's house"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வசந்த கோகிலா. இவர் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
  • போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் ஆய்வுசெய்தபோது 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.

  நெல்லை:

  கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வசந்த கோகிலா. இவர் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.

  கடந்த மாதம் 6-ந் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 22 கிராம் தங்க நகை, ரூ.40 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

  இதுதொடர்பாக கோகிலா கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.

  அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கீழ வைராவிகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வசந்த கோபி (வயது 22), அடையகருங்குளம் உல்லாச நகரை சேர்ந்த கண்ணன் (46), இசக்கி பாண்டி (34), இளையராஜா (30) ஆகியோரை கைது செய்தனர்.

  அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனர்.

  ×