என் மலர்

  நீங்கள் தேடியது "dispute பிளஸ்-2 மாணவர் குத்திக்கொலை"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குரோம்பேட்டையை அருகே வாகனத்துக்கு வழிவிடும் தகராறில் பிளஸ்-2 மாணவரை குத்திக்கொலை செய்த பா.ஜனதா பிரமுகர்-மகன் கைது செய்யப்பட்டனர்.

  தாம்பரம்:

  குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் (வயது16) தாம்பரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 சேர்ந்து உள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான கல்லூரி மாணவர் நந்தாவுடன்(19) மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள மற்றொரு நண்பரை சந்திக்க சென்றார்.

  குரோம்பட்டை சி.எல்.சி. லைன் ரோட்டில் சென்ற போது முன்னாள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா பிரமுகர் மதன் மற்றும் அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர்.

  அப்போது மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவது தொடர்பாக விக்னேஷ், நந்தா ஆகியோருக்கும் மதன், அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் விக்னேசும், நந்தாவும் அங்கிருந்து சென்று விட்டனர்.

  இதனால் ஆத்திரம் அடைந்த மதனும், அவரது மகன் நித்தியானந்தாவும் அங்கேயே காத்திருந்தனர்.

  சிறிது நேரத்துக்கு பின்னர் விக்னேசும், நந்தாவும் மீண்டும் அதே வழியில் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை வழிமறித்து மதனும், நித்தியானந்தமும் சரமாரியாக குத்தினர்.

  இதில் விக்னேசும், நந்தாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

  இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே மதனையும், அவரது மகன் நித்தியானந்தத்தையும் கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.

  இப்போது விக்னேஷ் இறந்ததால் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  ×