search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "discussion"

    • போலீஸ் சூப்பிரண்டு மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
    • படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார்.

    கடலூர்:

    விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.

    நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறேன். நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும், பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் சுகுணா ,சிந்தனை செல்வி, சமையலர் பார்வதி ஆகியோர் உடன் இருந்தனர். 

    • கலந்துரையாடல் கல்வி, கலாச்சார பரிமாற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர்
    • தமிழக போலீசாரின் செயல்பாட்டிற்கு பாராட்டு

    திருச்சி, 

    சுவீடன் நாட்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கலாச்சார பரிமாற்ற குழு பயணமாக இந்தியா வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர்கள் இந்தியாவின் கல்வி முறை மற்றும் கலாச்சாரங்கள் குறித்து பலதரப்பினருடன் கலந்து ரையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுவீடன் மாணவ குழுவினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவை சந்தித்தனர். சுவீடன் நாட்டை சேர்ந்த 3 ஆசிரியர்கள், அந்நாட்டில் 12ம் வகுப்பு பயிலும், 11 மாணவ, மாணவியர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, இந்திய கல்வி, கலாச்சாரம், தமிழக காவல்துறையின செயல்பாடுகள், செஸ் ஒலிம்பியா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாநகர கமிஷனர் பதிலளித்தார். மேலும் சுவீடன் மாணவர்களுடன், தனது பணி அனுவப வத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.இது குறித்து சுவீடன் பள்ளி மாணவர்கள் கூறும்போது, போலீஸ் கமிஷனருடன் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவரின் பேச்சில் இருந்து ஏராளமான குறிப்புகள் நாங்கள் எடுத்து உள்ளோம். தமிழக காவல்துறை மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளதையும், பெருமை கொள்ளும் விதமாக செயல்படுவதையும் வியந்து கேட்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.

    • மாமன்ற உறுப்பினர் நிதியை உயர்த்தக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள், மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் துணைமேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. மாமன்ற குழு தலைவர் ஜெயராமன் பேசும்போது, எங்களுக்கு உரிய இருக்கை வசதி செய்துதர வேண்டும் என்றார்.

    அவரை தொடர்ந்து மாமன்ற குழு துணைத் தலைவர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் இருக்கை கேட்டு பிரச்சினை செய்தனர். 92-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கருப்புசாமி பேசும்போது, இது உள்கட்சி பிரச்சினை. இங்கு மக்கள் பிரச்சினையை மட்டும் தான் பேச வேண்டும் என்றார். இதனால் தி.மு.க. மாவட்ட உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் விவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, மக்கள் பிரச்சினையை மாமன்ற கூட்டத்தில் பேசுங்கள். வேறு பிரச்சி னையை தனியாக மேயரிடம் சென்று கூறுங்கள் என தெரிவித்தார். உடனே அவரை எதிர்த்து ஒரு தி.மு.க. கவுன்சிலர், "நீங்கள் மட்டும் மாமன்ற கூட்டத்திற்குள் ராகுல்காந்தி படத்தை கொண்டு வந்து பேசியது எந்த வகையில் நியாயம்? என ஒருமையில் பேசியதால் சலசலப்பு அதிகமானது.

    இரு தரப்பையும் சமாதானம் செய்ய மேயர் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் அருகில் வந்து வாக்குவாதம் செய்தனர்.

    முடிவில் மேயர் பேசும்போது, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் காவலர்களை வைத்து வெளியேற்ற செய்ய வேண்டியது இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.

    பின்னர் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடந்தது.

    67-வது வார்டு உறுப்பினர் நாகநாதன் பேசும்போது, விராட்டிபத்து பகுதியில் சாலை வசதி சரியில்லை. அந்த பகுதியில் பாலம் கட்டும் பணியை செய்த தனியார் நிறுவனம் சாலைகளை சேதப்படுத்தி விட்டது. மேலும் எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் பாதாள சக்கரை வசதி போன்றவை செய்து தர வேண்டும்.

    அவரை தொடர்ந்து பேசிய 64-வது வார்டு உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சோலை ராஜா பேசும்போது, மதுைரயைவிட குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை குறைவாக உள்ளதால் அதனை தலா ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார். 

    • வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் நேற்று ஆய்வு செய்தனர்.
    • பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வாழப்பாடி:

    தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

    பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்ககிரி டி.எஸ்.பி ஆரோக்யராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சங்ககிரியில் பணியாற்றும் பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு உதவிகள் செய்யப்பட்டு உள்ளது. அதனால் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பணி செய்யலாம் என்றார்.

    இதில், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ சுதாகரன், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவன சேர்மன் அன்பழகன், நிர்வாக இயக்குனர் ராஜராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    • வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
    • திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் வட்டார குழு அமைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குனருமான சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், கால்நடை மருத்துவர் மகேந்திரன், உதவி தோட்டக்கலை அலுவலர் புலவேந்திரன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்தும், அட்மா திட்டங்கள் குறித்தும், கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    மேலும், உள்மாநிலம், வெளிமாநிலம், உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சிகள், கண்டுனர் சுற்றுலா, செயல் விளக்கங்கள், பண்ணை பள்ளி, திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போன்ற இனங்களை கொண்டு விவசாயக்குழு உறுப்பினர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.

    மேலூர்

    மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களிடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உதவிட வேண்டும்/

    தி.மு.க. ஆட்சியின் சாதனையை எடுத்துக் கூறியும் இன்றில் இருந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

    இதில் மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவமான முகமது யாசின், மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்களான குமரன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், ராஜராஜன், ராஜேந்திர பிரபு, பழனி, கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், துரை புகழேந்தி, பூதமங்கலம் அப்பாஸ், பொருளாளர் ரவி, முருகானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • அரசின் நலத்திட்டங்கள் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
    • ஓய்வூதியம் முறையாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற நிர்வாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அண்மையில் மறைந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலைப்புலி கோவிந்தராஜ், ஹேமலதா குமார், நெல்லை கணேசமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும், அரசு நலத்திட்டங்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெற்றுத் தருவது பற்றியும் ஓய்வூதியம் போன்றவற்றை முறையாகப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில், சங்கத்தின் நிறுவனர் வளப்பக்குடி வீர.சங்கர் மாநிலத் தலைவராகவும் இந்து சமய அறநிலையத் துறை ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி கோவிந்தராஜூ கௌரவத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கருங்குயில் கணேஷ் மாநில பொதுச் செயலாளராகவும் திருப்பத்தூரான் சேவியர் மற்றும் ஜெயக்குமார் துணைப் பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    பொருளாளராக ஆலம்பாடி பாஸ்கரும், துணைத் தலைவராக திருக்காட்டுப்பள்ளி சுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டனர்.

    மகளிரணி பொறுப்பாளர்களாக செம்மொழி மற்றும் வல்லம் செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பழமார்நேரி கலையரசன் மாநில ஊடகத்துறை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழக நாட்டுப் புற கலைஞர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வரும் டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் சங்கத்தின் மாநில மாநாட்டை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    முடிவில் ஆரூர் அம்பிகா நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி நடந்தது.
    • மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உயிர்த்தொழில்நுட்பவியல் ஆகிய துறைகள் இணைந்து ''காளீஸ் எக்ஸ்போ'' என்ற தலைப்பில் 3 நாள் கண்காட்சியை நடத்துகிறது.

    கல்லூரி கலையரங்கில் நடைெபறும் இந்த கண்காட்சி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர்

    அ.பா. செல்வராசன் தலைமை தாங்கினார்.

    முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி உதவி கலெக்டர் பிருதிவிராஜ், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஆகியோர் பேசினர். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடக்கவுரையாற்றினார்.

    அவர் பேசுகையில், கல்வி சார்ந்த கண்காட்சி மூலம் மாணவர்கள் அடையும் பலன்கள் மற்றும் இது போன்ற கண்காட்சிகள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான அடிகல்லாக அமையும் என்றார். மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.

    மாணவர்கள் அறிவியல், கணிதம் மற்றும் கலை ஆகிய அனைத்து துறைகளையும் பொருத்தி கற்க வேண்டும். மாணவர்கள் தவறில் இருந்து கற்றல், கேள்வி ஞானம் மூலம் தம்மை செம்மைபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் கூறினார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

    • ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
    • யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

    விழாவில் துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்ப்பல்க லைக்கழகத்தின்இலக்கி யத்துறையில் முதுகலைப் பயின்று வரும் திருநங்கையருக்கு கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டண ங்களை யும் பல்கலைக்கழகமே ஏற்கும்.

    அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு புலத்தில் இருந்தும் ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    வருகிற 12ந் தேதி வள்ளலார் பிறந்தநாளையொட்டி, அட்சயபாத்திர நாள் விழா கொண்டாடப்படும்.

    இதில், சன்மார்க்க மன்றத்துடன் இணைந்து விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரிய ர்களை பெருமைப்படுத்தும் விதமாக கவிதைகள், கட்டுரைகள், கருத்துரைகள், பாடல்கள் ஆகியவற்றை மாணவர்கள் படைத்தனர்.

    விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் தியாகராஜன், கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையர் கவிதா, துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சிவேந்தன், முனைவர்கள் சீமான், இளையராஜா, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், முதுகலை மாணவர்கள் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.

    • பனை தொழிலாளர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
    • மாநில துணை தலைவரும் தென் மாவட்ட பொறுப்பாளருமான அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நடைபெற்றது.

    தென்காசி:

    குற்றாலம் மேலகரத்தில் உள்ள இந்திய நாடார்கள் பேரமைப்பின் மண்டல அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் மாநில துணை தலைவரும் தென் மாவட்ட பொறுப்பாளருமான அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன் பேசும்போது, பனை தொழிலாளர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது இதனை தென்காசி மாவட்டத்தில் உள்ள பனை தொழிலாளர்கள் தென்காசி மாவட்டத்தில் புதுப்பித்து கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கணேசன், மத்திய மாவட்ட செயலாளர் ஜான் டேவிட், தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் பழனியப்பன், மேல நீலிதநல்லூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகிருஷ்ணன், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மானிய விலையில் விதை நெல், மண் பரிசோதனை போன்றவைகள் பற்றி விவசாயிகளுடன் விவாதிக்கப்பட்டது.
    • இயற்கை முறையில் உர உற்பத்தி மற்றும் உழவர் நலன் தொடர்புடைய 13 துறைகளின் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

    திருதுறைபூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் முதல் அமைச்சரின் ஆணைப்படி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும், துணை வேளாண்மை அலுவலர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளா ண்மை வளர்ச்சித்திட்டப்ப ணிகள், மானிய விலையில் விதை நெல், விவசாய எந்திரங்கள், மண் பரிசோ தனை, நுண்ணூட்ட உரங்கள் போன்றவைகள் பற்றி விவசாயிகளுடன் விவாதிக்கப்பட்டது, மேலும் இத்திட்டத்தின் மூலம் இவ் ஊராட்சியில் உழவர் நலத்துறை, தோட்டக்க லைத்துறை, வருவாய் பேரிடர், வேளாண்மை பொறியியல் துறை, இயற்கை முறையில் உர உற்பத்தி, மற்றும் உழவர் நலன் தொடர்புடைய 13 துறைகளின் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

    கூட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர் வித்யேந்தர், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர் மற்றும் கல்விப் புரவலர் ரவிச்சந்திரன், சிறுகுறு விவசாயிகள் சங்கத் தலைவர், செயலர் மற்றும் பொறுப்பாளர்கள் அலீம், பஹ்ருதீன், தண்டபானி, , மற்றும் விவசாயிகள், வேளாண்மைத் துறை அலுவ லாகள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×