search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "different punishment"

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செல்போன் பேசியவாறு, பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது. #Cellphone #BusDriver
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை இயங்கும் முள்ளுப்பாடியை சேர்ந்த முருகானந்தம் (வயது 28) என்பவர் பஸ் ஓட்டும்போது அடிக்கடி செல்போன் பேசுவதாக பயணிகள் புகார் கூறினர்.

    இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு இந்த பஸ் சென்றபோதும் அவர் செல்போன் பேசியவாறு பஸ்சை ஓட்டினார். இதை வீடியோவாக பதிவு செய்த சில பயணிகள் ஆதாரத்துடன் பொள்ளாச்சி டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    புகாரையடுத்து, நூதன தண்டனை வழங்க முடிவு செய்த டி.எஸ்.பி. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோரை அழைத்து, பஸ் டிரைவர் முருகானந்தத்தை நேற்று (வியாழக்கிழமை) ஒருநாள் முழுவதும் பொள்ளாச்சி காந்திசிலை சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டார்.

    இதையடுத்து, நேற்று காலையில் இருந்து மாலை வரை முருகானந்தம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த நூதன தண்டனையால், போக்குவரத்து விதிகளை டிரைவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். #Cellphone #BusDriver
    ×