search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dies"

    • பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார்.
    • கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி மும்பைக்கு பயங்ரதீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியானார்கள்.தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். இந்த தாக்குதலை பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது. அந்த அமைப்பின் பயங்ரவாதிகளை இந்தியா தேடி வருகிறது.

    இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும் லஷ்கர் இ தொய்பா நிறுவனர்களில் ஒருவருமான ஹபீஸ் அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானில் மரணம் அடைந்துவிட்டதாக ஐ. நா. சபை தெரிவித்துள்ளது.

    77 வயதான அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் காவலில் இருந்தபோது மாரடைப்பால் இறந்ததாக ஐநா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

    அப்துல் சலாம் பட்டாவியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்ட சமயத்தில் அப்பொறுப்பை அப்துல் சலாம் பட்டாவி ஏற்றார் என்பது குறிப்பிடதக்கது.

    • சம்பவத்தன்று இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • சிறிது நேரத்தில் சந்தியா உடலில் நிறம் மாற்றம் ஏற்பட்டது.

    கறம்பக்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மலையூர் மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரின் மகள் சந்தியா(வயது 15). அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அலறி துடித்துள்ளார். பெற்றோர்கள் கேட்ட போது, ஏதோ கடித்து விட்டதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சந்தியா உடலில் நிறம் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்தியாவை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்ட போது, சந்தியாவை பாம்பு தீண்டியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சந்தியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்கள் இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்
    • ். முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்

    குளித்தலை

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளை கோடங்கி பட்டியைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (வயது 50), பழனிச்சாமி (55).

    இவர்கள் இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பாப்பக்கா பட்டி செல்லும் வழியில் குளித்தலை முதல் தோகை மலை செல்லும் நெடுஞ்சா லையில் குப்பா ச்சிப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பகுதியில் இரு சக்கர வாகனம் மோதி யது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். படுகாயமடைந்த பழனிச்சா மி குளித்தலை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    இறந்த முருகேசனுக்கு ஒரு மகன் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பிரபாகரன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
    • பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்

    டால்மியாபுரம்

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தயாளன் மகன் அகஸ்டின்பிரபாகரன் (வயது 38). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அகஸ்டின்பிரபாகரன் வடுகர்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ராஜா டாக்கீஸ் பேருந்து நிலைய பாலம் அருகே சென்ற போது, அவர் பின்னால் வந்த காரின் டயர் வெடித்து, இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அகஸ்டின்பிரபாகரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.
    • காய்கறி லோடு ஏற்றி வந்த மினி சரக்கு லாரி இவர் மீது மோதியது.

    ராம்ஜிநகர்

    திருச்சி மாவட்டம் மணி கண்டம் அருகே நாகமங்க லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சங்கர். இவரது மகன் சிவா. இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு ெசன்றார். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து நாகமங்கலம் பகு திக்கு காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வந்த மினி சரக்கு லாரி இவர் மீது மோதியது.

    இதில் சரக்கு லாரியில் சிக்கிய ேமாட்டார் சைக்கிள் சுமார் 50மீட்டர் தூரம் இழுத்து சென்று, சாலை யோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் சிவா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச் சம்பவம் அறிந்து மணிகண்டம் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறை உதவியுடன் மினி சரக்கு லாரியில் சிக்கி இருந்த சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மதுரையில் இருந்து திருச்சி, திருச்சியில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அம்பேத்கர் நகர் அருகே உள்ள கட் ரோட்டில் திரும்பி செல்கிறது. இதனால் அதிகளவு இங்கு விபத்து ஏற்படுகிறது. விபத்தை தவிர்க்க போக்குவரத்தை கண்காணிக்க 24 மணி நேரமும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.

    • இவர் பால்பண்ணை பகுதியில் உள்ள உயர்தர உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
    • கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது

    திருச்சி, காட்டூர் பாரதிதாசன் நகர் 10 வது தெருவைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது45). இவர் பால்பண்ணை பகுதியில் உள்ள உயர்தர உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாப்பாக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் போலீசார் வைத்துள்ள இரும்பு தடுப்பை (பேரிகார்டு) கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பேரன் பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்
    • திடீரென படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த செல்வராஜ் பலத்த காயமடைந்தார்

    திருச்சி

    திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் தையல்காரர் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பேரன் பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பஸ்சில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த செல்வராஜ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் ரோடு பகுதியில் தினேஷ் மயங்கி கிடந்தார்
    • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருச்சி,

    சென்னை செங்கல்பட்டு மதுராந்தகம் பெரும்பாக்கம் ரெட்டியார் தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 44). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .

    இந்த நிலையில் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கரூர் ரோடு பகுதியில் தினேஷ் மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோதரர் கிஷோர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்
    • அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது
    • சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்


    கரூர்


    கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் விஜயன் (வயது 32) இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயன் பணி முடிந்து திருச்சியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் குளித்தலை வழியாக பழைய ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி -கரூர் புறவழிச்சாலை நாபாளையம் அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட விஜயன் சம்பவ இடத் திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை நடத்தி வருகின்றனர்.




    துறையூர் அருகே சரக்கு வாகனம் மோதி விவசாயி பரிதாப சாவு

    துறையூர் 

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை நாகலாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையை கடக்க முயன்றார்.

    அப்பொழுது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் ஓரியூர் கிராமத்தை சேர்ந்த வினோத் (35) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக சக்திவேலின் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக சக்திவேலின் மகள் மகாலட்சுமி (32) என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், டிரைவர் வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர் அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் ராஜாராம் திருபுவனை பெரிய காலனியில் மாமியார் வீட்டுக்கு சென்று வருவார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே பள்ளிநேலியனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது45). கூலி ெதாழிலாளி. இவருக்கும் திருபுவனை பெரிய காலனியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ஆனந்த வள்ளி இறந்து போனார். மனைவி இறந்ததால் சோகத்துக்குள்ளான ராஜாராம் மது பழக்கத்துக்கு ஆளானார். தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் ராஜாராம் திருபுவனை பெரிய காலனியில் மாமியார் வீட்டுக்கு சென்று வருவார்.

    அதுபோல் நேற்று ராஜாராம் மது குடித்து விட்டு மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது குடிபோதையில் அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் அவர் தவறி விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் ராஜாராம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் பாலமோகன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை

    • ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்து தாய்,மகன் சாவு
    • தந்தை உயிருக்கு போராட்டம்

    திருச்சி  

    திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசலை சேர்ந்தவர் மோகன் (வயது 70). இவருக்கு சிவகாமி (60) என்ற மனைவியும் செந்தில், தினேஷ் (வயது36) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    மூத்த மகன் செந்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இருந்த போதிலும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட இயலவில்லை. இதையடுத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகன் தனது மனைவி, மகன் ஆகியோர் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷமருந்தி மயங்கி கிடந்தனர்.

    நேற்று அதிகாலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இது பற்றி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகன்தினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் சிவகாமி பரிதாபமாக இறந்தார்.ஆபத்தான நிலையில் மோகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஸ்ரீரங்கத்தில் தாய்,மகன் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது.

    ×