search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "die"

    • லாரியின் முன் பகுதியில் தாா்ப்பாய் தொங்கி கொண்டிருந்துள்ளது.
    • இரவு 7 மணிக்கு சங்ககிரிக்கு திரும்புவதற்காக லாரியை ஸ்டாா்ட் செய்துள்ளாா்.

    காங்கயம் :

    மதுரை மாவட்டம், இரவாடநல்லூரைச் சோ்ந்தவா் கண்ணன் (வயது 38). இவா், சங்ககிரியில் உள்ள தனியாா் டிரான்ஸ்போா்ட் கம்பெனியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் காங்கயத்தில் உள்ள அரிசி ஆலைக்கு நெல் லோடு இறக்குவதற்காக புதன்கிழமை வந்துள்ளாா். நெல் லோடு இறக்கிய பின் இரவு 7 மணிக்கு சங்ககிரிக்கு திரும்புவதற்காக லாரியை ஸ்டாா்ட் செய்துள்ளாா்.

    அப்போது லாரியின் முன் பகுதியில் தாா்ப்பாய் தொங்கி கொண்டிருந்துள்ளது. பின்னா், லாரியில் இருந்து இறங்கி தாா்ப்பாயை சரி செய்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக முன்னோக்கி நகா்ந்த லாரி எதிரே இருந்த சுவரின் மீது மோதியது. இதில், ஓட்டுநா் கண்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக காங்கயம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    • மங்களமேடு அருகே புள்ளிமான் இறந்தது
    • மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள ஒகலூர் கிழக்கு கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்தில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

    • நேற்று ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளனர்.
    • அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் ஆபத்தான பகுதியில் குளித்ததாக கூறப்படுகிறது.

    டி.என்.பாளையம், 

    திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40), தறிபட்டறை தொழில் செய்து வந்துள்ளார்.

    இவருக்கு திருமணமாகி சில வருடங்களாக மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா ராமநாதபுரம் ஊராட்சி தொட்டகலாம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (36), தறிபட்டறை தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளனர்.

    அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் வலது புறத்தில் ஆழமாக உள்ளதால் பொதுப்பணித்துறை சார்பில் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அந்த எச்சரிக்கை பலகையை மீறியும் போலீசாரின் அறிவுறுத்தலை மீறியும் ரமேஷ் மற்றும் ராமசாமி அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் ஆபத்தான பகுதியில் குளித்ததாக கூறப்படுகிறது.

    அந்த பகுதியில் ஆழம் அதிகம் என்பதால் எதிர்பாராத விதமாக ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் நீரில் மூழ்கினர்.

    உடனே அங்கிருந்தோர் சத்தியமங்கலம் தீயணைப்பு துறை மற்றும் பங்களாப்புதூர் போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணை ப்புத்துறை வீரர்கள் ரமேஷ் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்க ப்பட்டது. அதனையடுத்து கொடிவேரி அணைப்பகு தியில் ரமேஷை மீட்ட அதே பகுதியில் சிறிது நேரத்திற்கு பிறகு ராமசாமியை பிணமாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், கொடிவேரி அணையின் பவானி ஆற்றுக்கு குளிக்க வந்த நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார், அங்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி கடந்த 27-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விசாரணையில், அவரது பெயர் ஜெயமணி என்பது தெரியவந்தது. ஆனால் ஊர் முகவரி, அவரது உறவினர்கள் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர்? விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால், உடனடியாக போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் அடுத்த வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஹேமலதா (வயது 37). இவர் நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த ஹேமலதாவை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வலசையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமலதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புள்ளி மான் இறந்தது.
    • மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி சாலையோர புதரில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை கள அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மானை மீட்டு சிங்கம்புணரி கால்நடை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

    அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் எஸ்.வி. மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் மான்கள் தெரு நாய்களாலும், வாகனங்களில் அடிபட்டும் இறந்து வருவது அந்த பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    • சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிரா மணியில் இருந்து சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்துபோன முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எங்கிருந்து இந்த பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
    • தகவல் அறிந்தத ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அருகே வடகார வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40).

    கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலைக்குச் சென்றபோது மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவ்வழியாக வந்த ரெயில் எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷ்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடிஅரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55). இவர் மின் மோட்டார்களை சரி செய்யும் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    இவர் இன்று காலை வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது.
    • அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் வெள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த வர் பாலசுப்பிரமணியம் (வயது 29). கட்டிட தொழி லாளி. இவரது மனைவி சித்ரா (25).

    இவர்களுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த குழந்தைக்கு நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது. இதையடுத்து உடன டியாக குழந்தையை சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தை யை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • இன்று காலை சுமார் 70 வயது மதிக்கப்பட்ட பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அதில் அவர் தூத்துக்குடி அண்ணா நகர் மேற்கு, மகிழ்ச்சி புரத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி சாமியம்மாள் என்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி - மீளவிட்டான் ரெயில் நிலையங்கள் இடையே தனியார் பள்ளிக்கு பின்புறம் அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 70 வயது மதிக்கப்பட்ட பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது,

    இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் தூத்துக்குடி அண்ணா நகர் மேற்கு, மகிழ்ச்சி புரத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி சாமியம்மாள்(வயது 70) என்பது தெரியவந்தது. அவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் தனது வீட்டில் இருந்து தண்டவாளத்தை கடந்து சின்னகண்ணுபுரத்தில் அமைந்துள்ள டீக்கடைக்கு செல்ல தண்டவாளத்தினை கவனக்குறைவாக கடக்க முயற்சித்த போது தூத்துக்குடி நோக்கி வந்த ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 90). இவர் மேல்மாடியில் வசித்து வருகிறார். கீழ் மாடியில் மகன் மாதேஷ் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பேரன் பாட்டிக்கு காபி கொடுப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.

    இது குறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

    இதனால் மன உடைந்த அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தது தெரியவந்ததுள்ளது.

    ×