search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Development Work"

    • ராஜபாளையத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி தென்றல் நகரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.5.57 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நாற்றாங்கால் நர்சரி பண்ணையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விதம், விநியோகிக்கப்படும் முறைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

    தென்றல் நகரில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கிடைமட்ட உறிஞ்சி குழியி னையும், திருவள்ளுவர் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மிதிவண்டி நிறுத்த கூடத்தையும், மருதுநகரில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், ஒப்படைக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாய் திட்டத்தின் கீழ், ரூ.3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • செம்புலிங்க புரத்தில் ரூ.11.10 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்குஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட செம்புலிங்க புரத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11.10 லட்சம் மதிப்பில் யூனியன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    ஆதியாக்குறிச்சி ஊராட்சி தீதத்தாபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.19.91 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகக் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.

    இப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி தொடக்க விழா நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிதலைவர் பால சரஸ்வதி, ஆதியா குறிச்சி ஊராட்சிதலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.இதில் மாநில தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பால முருகன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் ராமஜெயம்,

    அருணாசலம், மகா விஷ்ணு, மாவட்டப் பிரதிநிதிகள் ரவிராஜா, மதன்ராஜ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டக் காங்கிரஸ், பொருளாளர் நடராஜன், ஆதியாகுறிச்சி ஊராட்சி துணைத் தலைவர் பவுல், ஊராட்சி, செயலர் (பொறுப்பு) ரசூல் திமுகவைச் சேர்ந்த மணல் கணேசன். பாய்ஸ், அஜய் உடன்குடி பேரூராட்சியின் கவுன்சிலர்கள் முன்னாள் கவுன்சிலர்கள், பேரூ ராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    கோத்தகிரி,

    கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் 15-வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன்படி பூங்காவில் சுற்றுச்சுவர் அமைத்தல், பூங்கா நுழைவுவாயிலில் டிக்கெட் கவுண்ட்டர், கடைகள் அமைத்தல், அழகிய நீரூற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பின்னர் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன. தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி, டிக்கெட் கவுண்ட்டர் கட்டும் பணி மற்றும் பழுதடைந்த நடைபாதைகளை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பூங்காவில் மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிவடையும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.

    • துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
    • 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    மடத்துக்குளம் வட்டாரம் துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2021- 2022-ம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட துங்காவி கிராமத்தில் வேளா ண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் செயல்படு த்தப்பட்ட திட்டங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    துங்காவியில் 200 பண்ணைக் குடும்பங்களுக்கு தலா 3 தென் னங்கன்றுகள், 5 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்கள், 22 சிறு,குறு விவசாயிகளுக்கு பண்ணைக்கருவிகள், 33 எண்ணிக் கையில் தார்ப்பாய்கள், 5 தெளிப்பான்கள், மின்கலத்தெளிப்பான் கள் ஆகியவை வழங்கப்ப ட்டுள்ளது. மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் வரப்புப் பயிரில் உளுந்து சாகுபடி செய்வதற்கும், பசுமைப்போர்வை திட்டத்தின் கீழ் 8ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கும், தென்னையில் கருந்தலைப்புழு மற்றும் வெள்ளை ஈயைக்கட்டு ப்பாட்டுக்கு ஏற்ற ஒட்டுண்ணிகள், கரும்பு ஒட்டுண்ணி, உயிர் உரங்கள், உளுந்து மற்றும் பிற விதைகள் வினியோகம் என மொத்தம் 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வினீத் பயனாளிகள் விவர ங்களைக்கே ட்டறிந்தார். அத்துடன் விவசாயிகளின் திட்டங்கள், எந்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், மாவட்ட கலெக்டரின் (வேளாண்துறை) நேரடி உதவியாளர் மகாதேவன், மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
    • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார்.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.காங்கயம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

    கூட்டத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், நகராட்சி நிர்வாகத்துறை செயற்பொறியாளர் பாலச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சார்லஸ் கென்னடி, காங்கயம் நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையாளர் வெங்கடேஷ்வரன், காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தி.மு.க. கவுன்சிலர் மணிவண்ண்ன் , தி.மு.க. நகர துணை செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • கொடைக்கானல் ஏரி மாசுபடுவதாக கூறி கொடைக்கானலைச் சேர்ந்த ஒருவர் பொதுநல மனு ஒன்றை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
    • மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பினால் ஏரியை ச்சுற்றி நடைபெற இருக்கும் பணிகள் விரைவில் தொட ங்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    கொடைக்கால்:

    கொடைக்கானல் ஏரிச்சாலையைச்சுற்றிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் மகிழ்விக்கும் வகையிலும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதற்கு நகராட்சி சார்பில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியது.

    இந்தப் பணிகளால் கொடைக்கானல் ஏரி மாசுபடுவதாக கூறி கொடைக்கானலைச் சேர்ந்த ஆறுமுக வேலன் என்பவர் பொதுநல மனு ஒன்றை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கொடைக்கானல் ஏரியைச்சுற்றிலும் தடைசெய்யப்பட்ட பகுதி யில் உரிய அனுமதி இன்றி நகராட்சி நிர்வாகம் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஏரியை ஒட்டி கழிப்பறையும் அமைக்கப்படுகிறது.

    விதி மீறிய இந்த நிகழ்வால் ஏரி மாசுபடும் ஏரியை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் ஏரிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.எனவே இவ்வாறான விதி மீறிய கட்டுமானத்திற்கு தடை விதித்து கட்டுமான பொரு ட்களை உடனே அகற்றிட உத்தரவிடவேண்டும் என நீதிபதியிடம் முறை யிட்டிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா அமர்வு விசா ரித்தது. இதற்கான பதில் மனுவை கொடை க்கானல் நகராட்சியும் தாக்கல் செய்திருந்தது.அந்த மனுவில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் பிளாஸ்டிக் பாட்டி ல்கள் மற்றும் கழிவுகளை ஏரியில் வீசிச் செல்கின்றனர்.

    இதை தடுக்க ஏரியைச் சுற்றிலும் வேலி அமைக்க ப்படுகிறது.பாதசாரிகள் நடமாட நடை பாதை, சைக்கிள் ஓடுதளம், மிதவை ப்படகு க்குழாம்,ரசாயனக் கழிவுகளை அகற்றி தண்ணீ ரின் தரத்தை மேம்படுத்தும் வகையில் நவீன தொழி ல்நுட்ப வசதி அமைக்கப்ப டும்.ஏற்கனவே இருந்த பழைய கழிப்பறையை அகற்றி அதே இடத்தில் புதிதாகவும், கூடுதலாக ஒரு கழிப்பறையும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அமைக்கப்படும்,

    இந்தத் திட்டங்களுக்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அனுமதி பெற ப்பட்டு டெண்டர் நடத்தி பணிகள் மேற்கொள்ள ப்படுகிறது. சிலரது தூண்டுதலின் பேரில் உள்நோக்கத்தில் மனுதாரர் மனு செய்துள்ளார் என தெரிவித்திருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் ஏரியைச் சுற்றி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுற்றுலா பயணிகளின் நலன் கருதிமேற்கொள்ள ப்பட்டு வரும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி ஆறுமுக வேலனின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் எனத் தீர்ப்பளித்தனர்.இந்தத் தீர்ப்பினால் ஏரியை ச்சுற்றி நடைபெற இருக்கும் பணிகள் விரைவில் தொட ங்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    • நகராட்சி பகுதிகளில் ரூ.858 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • அடிக்கல் நாட்டு விழா நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.858 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் ஒரு பணியாக ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் படி நீர் நிலைகளை புறனமைப்பு செய்யும் வளர்ச்சிப் பணி கடையநல்லூர் 25-வது வார்டு அட்டக்குளம்தெரு பெண்கள்தொழுகைபள்ளி அருகில் உள்ள ஊருணியை தூர்வாரிபராமரிக்கும்பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் குளத்தைசுற்றி நடைபயிற்ச்சிக்காக நடைபாதைவசதி அமைக்கும் பணியினை ரூ.61 லட்சம் செலவில் மேற்கொள்ள அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் கூட்டுறவு சங்க தலைவருமான செல்லத்துரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இளநிலை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, தி.மு.க. வார்டு செயலாளர் காஜா முகையதீன், கிளை பிரதிநிதி அகமது அலி, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மூவண்ண மசூது, கவுன்சிலர்கள் முகைதீன் கனி, முருகன், திவான் மைதீன், அமைப்புச் செயலாளர் கருப்பன், மாணவரணி மணிகண்டன், மாவட்டதொண்டர்அணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், மற்றும் காவா அறக்கட்டளை நிர்வாகிகள் ஹெவன்ஸ்டார், உடன்பிறப்புகள் தி.மு.க. மற்றும் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், வேலுச்சாமி, பாப்பா, அரசு ஒப்பந்ததாரர் அருணாசலம் செட்டியார், செல்வம், வார்டு பெரியவர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார்.
    • சிமெண்ட் சாலை சீரமைக்க மொத்தம் ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பாகூர் சரஸ்வதி நகரில் தார் சாலை அமைத்தல், குருவிநத்தம் பெரியார் நகரில் சிமெண்ட் சாலை செப்பனிடுதல், இருளஞ்சந்தை பேட் பாலம் அமைத்து சிமெண்ட் சாலை சீரமைக்க மொத்தம் ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர் பிரதீப்குமார் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
    • சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பணித்தளத்தில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.பின்னர் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இதில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,திருப்பூர் தெற்கு தாசில்தார்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

    இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி,மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் ரோடு பணி நடைபெற்று வருகிறது.
    • ரோடு போடும் பணியை துரிதப்படுத்தி பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் அணைப்பாளையம் முதல் மணிய காரபாளையம் வரை ரோடு பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று காலை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அதிகாரிகளிடம் ரோடு போடும் பணியை துரிதப்படுத்தவும், தனியார் சொந்தமான இடத்தை உரிய இழப்பீடு கொடுத்து அதனை சரி செய்து பணியை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதேபோல் திருப்பூர் மாநகராட்சி மாட்டு கொட்டகையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தூய்மைப் பணி வாகனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டார்

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் காந்தி குமார், உதவி கமிஷனர் வாசுகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உட்பட பலர் கலந் து கொண்டனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பழையக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வரதராஜ் உள்ளனர். 

    • சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.
    • பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியம்கோட்டமங்கலத்தில் கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    குடியிருப்பு கட்டும் போதே வடக்கு பகுதியில் மழை நீர் உள்ளே வராமல் தடுக்க சுற்றுசுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தொடர்ந்து, இக்குடியிருப்பில் பிற மேம்பாட்டு பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதே போல், முன்பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவும் பொலிவிழந்து விட்டது. பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.பிற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. குடியிருப்புக்கான பஸ் ஸ்டாப் நிழற்கூரையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.

    இந்நிலையில் சமீபத்தில் சமத்துவபுர குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்தை அரசு செயல்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்தது.உடுமலை ஒன்றியம், பாலப்பம்பட்டி உள்ளிட்ட சமத்துவபுரங்கள் இத்திட்டத்தில், சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோட்டமங்கலம் குடியிருப்பு கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இந்தாண்டு இக்குடியிருப்பு மேம்பாட்டுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ×