search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Police"

    டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீருடையுடன் பெண் சாமியாரிடம் ஆசி வாங்கிய காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். #DelhiPolice
    புதுடெல்லி:

    டெல்லி ஜனக்புரி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் இந்திரபால் சிங். உத்தம் நகர் பகுதியில் பெண் சாமியார் நமிதா ஆச்சாரியா என்பவரிடம் இவர் ஆசி வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. போலீஸ் சீருடையுடன் அவர் தோன்றியதால் பல்வேறு எதிர் விமர்சனங்களும் எழுந்தன.

    இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் விஜய் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #DelhiPolice
    தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியது தொடர்பாக ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்த மொகித் கோயல் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #RingingBells #MohitGoel
    புதுடெல்லி:

    நொய்டாவை சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. 7 கோடிக்கும் அதிகமானோர் இதில் முன்பதிவு செய்தனர். இந்நிறுவனம் வருமான வரித்துறையினர் சோதனைக்கும் ஆளானது. இந்த கம்பெனியின் நிறுவனர் மொகித் கோயல் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் ஒரு பெண், 5 தொழில் அதிபர்கள் தன்னை கற்பழித்துவிட்டதாக கடந்த மார்ச் மாதம் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில் அந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கற்பழிப்பு வழக்கை தீர்த்துவைப்பதாக மொகித் கோயல் உள்பட 3 பேர் டெல்லியில் ஒரு தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டினர். இதுபற்றி அவர் நேதாஜி சுபாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மொகித் கோயல், கற்பழிப்பு புகார் கூறிய பெண் உள்பட 3 பேரும் ஓட்டலுக்கு வந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.  #RingingBells #MohitGoel
    டெல்லியில், முதல்வர் அரவிந்த் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமைச்செயலாளர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் நேற்று கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர்.
    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமைச்செயலாளர் அன்ஷூ பிரகாஷ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறி தவறாக நடந்து கொண்டதுடன், தாக்கினர் என புகார் எழுந்தது.

    இது தொடர்பாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமனத்துல்லா உள்ளிட்டவர்கள் மீது அன்ஷூ பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து டெல்லி (வடக்கு) கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஹரேந்திர சிங் தலைமையில் 6 பேரை கொண்டு குழுவினர், கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்று மாலை சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் தன்னிடம் நடத்துகிற விசாரணையை வீடியோவாக பதிவு செய்து, தனக்கும் ஒரு சி.டி. தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமாரும் கடந்த மாதம் டெல்லி போலீசாரால் விசாரிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.  #DelhiCM #Kejriwal
    சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக டெல்லி போலீசார் கூறுவதை எதிர்த்து நான் கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறினார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar
    திருவனந்தபுரம்:

    முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார்.

    2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள பிரபல ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக சசிதரூரிடம் விசாரணை நடத்தினார்.

    முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகள் 498(ஏ), 306 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது ஜாமீனில் வர முடியாத வழக்குகள் ஆகும். இதனை வருகிற 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார்.

    டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை குறித்து சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சுனந்தா புஷ்கர் மரணத்தில் டெல்லி போலீசார் என் மீது குற்றம் சாட்டி உள்ளது அபத்தமானது. இதற்கு தகுந்த பதிலை தெரிவிப்பேன். சுனந்தாவின் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

    சுனந்தா வழக்கில் எவரையும் சந்தேகிக்கும் வகையில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லையென்று டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

    6 மாதத்தில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனந்தாவை நான், தற்கொலைக்கு தூண்டியதாக அதே போலீஸ் துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை. இதனை எதிர்த்து நான், கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar
    ×