search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyber Crime"

    பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என தொடர்ப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Aadhaar #SocialMedia #MadrasHC
    சென்னை:

    பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் கணக்கு தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணையின் போது, சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாளுவது குறித்து வரும் 20-ம் தேதி நேரில் விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது கருத்து தெரிவித்த நீதிபதி, ‘இது மிகவும் ஆபத்தான கோரிக்கை. இதனால், தனிநபரின் அந்தரங்க உரிமை பாதிக்கும் என்றார். எனினும், இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு வரும் 20-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
    ×