search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cut off mark"

    மாநில பாடத்திட்டத்தில் படித்து என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கட்-ஆப் மார்க் 2 வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதேசமயம் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கட்-ஆப் உயரும் என தெரிகிறது. #CBSE
    சென்னை:

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதன் முதலாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்த தேதியில் கலந்தாய்வு நடைபெறும்.

    இந்த வருடம் பொறியியல் கட்-ஆப் குறைகிறது. இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதால் கட்-ஆப் மார்க் 2 வரை குறைய வாய்ப்பு உள்ளது.

    கட்-ஆப் மதிப்பெண் குறைவதால் கடந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்களுக்கு இப்போது கிடைக்க வாய்ப்பு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு இழந்தவர்களுக்கும் கட்-ஆப் குறைவதால் வாய்ப்பு உருவாகும்.

    கடந்த ஆண்டு இடம் கிடைக்காமல் இருந்த மாணவர்களுக்கு இந்த வருடம் கலந்தாய்வில் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வைப் பொருத்தவரை, பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். அதனால் அவர்களுக்கு கட்-ஆப் மார்க் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பொதுவாக என்.ஐ.டி., எம்.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் சேரவே ஆர்வம் காட்டுவார்கள். பொறியியல் கல்லூரிகளில் மிக குறைந்த அளவில்தான் சேருவது வழக்கம்.

    பொதுவாக ஜே.இ.இ. தேர்வு எழுதி தேசிய அளவிலான தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு தான் விரும்புவார்கள். அதனால் பொறியியல் கட்-ஆப் மார்க் உயர்ந்தாலும் அதனால் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. #CBSE
    ×