search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "criminal charges"

    குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிறுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்தியாவில் குற்றப்பின்னணி உள்ளவர்களே அதிகம் தேர்தலில் நிறுத்தப்படுவதாகவும், அவர்களையே மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் நிலை இருப்பதாக, குற்றப்பின்னணி இருக்கும் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்யாமல், அரசியல் கட்சிகள் அடிப்படை நாகரீகத்தை பேண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், அரசியலில் முறைகேடும், ஊழலும் அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்றும், அந்த இடத்தில் உச்சநீதிமன்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

    அதேபோல், நாடாளுமன்றம் மட்டுமே சட்டதிருத்தம் மூலம் இதற்கான தீர்வை கொண்டு வர முடியும் எனவும் வழிவகையினை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. #SupremeCourt
    ×