search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "criminal act"

    களக்காடு அருகே குற்றங்களை தடுக்க அப்பகுதி கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ளது வடுகச்சிமதில் கிராமம். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவார்கள். ஊரை சுற்றிலும் வயல்வெளிகள் உள்ளன. சமீபகாலமாக வடுகச்சிமதில் கிராமத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அங்குள்ள இசக்கியம்மன் கோயிலில் 3 முறை உண்டியல் பணம் திருடப்பட்டது. வீடுகளிலும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இந்த சம்பவங்களை தடுப்பதற்காக கிராம மக்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் கிராமத்தை சுற்றிலும் தாங்களே கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்று முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து, ரூ 1 லட்சம் மதிப்பீட்டில் அங்குள்ள சுடலைமாடசாமி, இசக்கி அம்மன் கோயில்கள் உள்பட 5 இடங்களில் 8 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.

    கேமராவில் பதிவாகும் காட்சிகளை அங்குள்ள ஒரு அறையில் அமர்ந்து கண்காணிக்கலாம். இதனைதொடர்ந்து கிராமத்தில் அன்னியர் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அறிந்து கொள்ளலாம். மேலும் குற்ற நிகழ்வுகள் நடந்தால் உடனடியாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து அதில் ஈடுபடும் நபர்களை தெரிந்து கொள்ளலாம். இதனால் கிராமமே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    போலீசாருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த சி.சி.டி.வி கேமரா செயல்பாடு தொடக்க‌ விழா நேற்று மாலை நடந்தது. டாக்டர் கார்த்திக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அ.தி.மு.க இணை செயலாளர் பழனிவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். நாங்குநேரி ஏ.எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் சி.சி.டி.வி கேமராக்களை இயக்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தங்களது செலவிலேயே சிசிடிவி கேமரா அமைத்த பொதுமக்களை போலீசார் பாராட்டினர். #tamilnews
    ×