search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crematorium"

    • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
    • தகன மேடை பணியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில், நவீன எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து சமாதானக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:-பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபனை கடிதங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட பணியின் சிறப்பு அம்சங்களை பொதுமக்களிடம் விளக்கிக் கூறி சுமூக தீர்வு காண ஏதுவாக, பல்லடம் நகர்மன்றத் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் முன்னிலையில், இன்று மாலை 3 மணி அளவில், பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள பி.எம்.ஆர். சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் அமைதி குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் நகராட்சி பகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    லாலாப்பேட்டை சுடுகாட்டில் மயங்கி விழுந்த முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாலாப்பேட்டை:

    திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாலாப்பேட்டையில் சுடுகாடு உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இங்கு எதற்காக வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×