search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corona vaccines"

    • மாவட்டம் முழுவதும் கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
    • ஜெயில் கைதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. குறிப்பாக குருந்தன்கோடு, மேல்புறம் ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி, தக்கலை, தோவாளை ஒன்றிய பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு 100 ஐ நெருங்கியதையடுத்து சோதனையை தீவிரபடுத்த கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.

    அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 613 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள் ஆவார். 2 குழந்தைகளுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் ஜெயிலில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயில் மூலமாக திமிங்கலத்தின் உமிழ் நீரை கடத்த முயன்றதாக வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 6 பேரை கைது செய்தனர். இதில் ஆசாரிபள்ளம் கீழ பெருவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் (வயது 42) என்பவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவரை நாகர்கோவில் ஜெயிலில் இருந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயில் கைதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

    • உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் குறைந்த பின்பு 2-வது மற்றும் 3-வது கொரோனா அலை பரவியது.
    • மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ் என்று குறிப்பிட்டனர்.

    புதுடெல்லி:

    உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் குறைந்த பின்பு 2-வது மற்றும் 3-வது கொரோனா அலை பரவியது.

    இதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ் என்று குறிப்பிட்டனர். இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர்.

    இதில் பெங்களூருவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஜூலை 30-ந் தேதி வரை நகரின் கழிவு நீர் ஓடைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஒமிக்ரான் வகை வைரஸ் கழிவு நீர் மூலம் பரவுவது தெரியவந்துள்ளது. இதில் அதிக வீரியம் கொண்ட பி ஏ 2-10 வகை வைரஸ் கழிவு நீரில் 14.83 சதவீதம் அளவுக்கு இருப்பது தெரியவந்தது.

    இதுபோல பிஏ 2 வகை வைரஸ் 10.49 சதவீதமும், பி.1-1529 வகை வைரஸ் 5.1 சதவீதம் அளவுக்கும் இருப்பது கண்டறியப்பட்டது.

    பெங்களூருவில் 878 கழிவு நீர் மாதிரிகளை சேகரித்து எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்ததாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர். இது பற்றி அவர்கள் மேலும் கூறும்போது, கடந்த மே மாதம் பிஏ 2-வகை வைரசின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

    இதுவே ஜனவரி மாதம் பிஏ 2-12 வகை வைரசின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இக்காலகட்டத்தில் 7 வகையான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது, என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    • வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் செல்கின்றனர்.
    • 2052 பேருக்கு இலவசமாக முக கவசங்கள் வழங்கப்பட்டது

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட த்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் செல்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் ராஜ லட்சுமி தலைமையில் சுகாதார அலுவலர் கோவிந்த ராஜ், சுகாதார ஆய்வாளர் சுதர்சன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்குட்பட்ட ரெயில் நிலையம் முதல் டோல்கேட் வரை கடைகளில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கினார். மேலும் இலவசமாக முக கவசங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

    இந்த விழிப்புணர்வின் போது 2052 பேருக்கு இலவசமாக முக கவசங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.
    • சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது.

    பெய்ஜிங்:

    கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு பல நாடுகளுக்கும் தொற்று பரவிய நிலையில் பல நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. தற்போது தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.

    எனினும் உருமாறிய கொரோனா வைரசால் தற்போது சில நாடுகளில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    அந்தவகையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்தநாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உருமாறிய பிஏ.5 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதனால் அங்கு கடந்த சில நாட்களாக பாதிப்பு 400-ஐ தாண்டி பதிவாகி வரும் நிலையில், தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள மக்காவ் பிராந்தியத்திலும் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    இந்த பிராந்தியத்தில் தான் உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் தொற்று பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன.

    இதற்கிடையே பெய்ஜிங் நகரிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் அமலாக்கப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் கொரோனாவின் தீவிர பரவல் குறித்த முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
    • கொரோனாத் தொற்று வேகமெடுத்து பரவுவது துரதிர்ஷ்டவசமானது.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கும் பரவிய கொரோனா தொற்று கடந்த 2019 டிசம்பரில், தமிழகத்தில் பரவத் தொடங்கிய நிலையில், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் வாயிலாக கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்த சூழலில் தற்போது மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளொன்றுக்கு 1000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தொற்று பரவல் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

    நோய்ப்பரவல் கட்டுக்குள் இருந்த சமயம், மக்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பி பொருளாதாரத்தை மீட்டிட தீவிரமாக பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் கொரோனாத் தொற்று வேகமெடுத்து பரவுவது துரதிர்ஷ்டவசமானது என்றாலும் கூட, தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்தல், சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு வெளியிட்டு வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோய்த் தொற்று பரவலில் இருந்து தங்களையும், தங்கள் சுற்றத்தாரையும் பாதுகாத்து கொள்ள முடியும். எனவே, பொதுமக்கள் கொரோனாவின் தீவிர பரவல் குறித்த முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×