search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooperative Infrastructure Development Scheme"

    • வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.
    • நடப்பு ஆண்டில் 750 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    திருப்பூர் :

    அடுத்துவரும் 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.தமிழகத்துக்கு மட்டும் 5,990 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் நடப்பு ஆண்டில் (2022 - 23) 750 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான முதல்கட்ட ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை பதிவாளர்கள் மணி, முருகேசன் முன்னிலை வகித்தனர். சார்-பதிவாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து இணை பதிவாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    விவசாயிகளின் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, பிரதமரின் கூட்டுறவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் விளை பொருட்களை இருப்பு வைக்கும் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், வேளாண் விற்பனைக்கான வசதிகள், விற்பனை மற்றும் வணிக மேம்பாட்டு கட்டமைப்பு என, தேவையான கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

    முதல்கட்டமாக கூட்டுறவு சங்கங்கள் வாரியாக, தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்படும். அடுத்ததாக முறையான திட்ட அறிக்கையுடன், ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசு பதிவுகளை சரிபார்த்து ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×