search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consultation meet"

    • தூத்துக்குடி மாவட்டம் மட்டும் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • தசரா குழுவினர் கோவிலுக்கு வரும் போது பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அமைதியாக அன்னை முத்தாரம்மன் நாமத்தை மட்டுமே சொல்லி வர வேண்டும்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி தசரா குழு நிர்வாகிகள், ஆலோசனை கூட்டம் கோவில் முன்பு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருச்செந்நூர் போலீஸ் கூடுதல் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    இதில் தசரா குழு நிர்வாகிகள் சார்பில் கோயிலில் கொடியேற்றம் துவங்கி நாள் முதல் 10 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் டாஸ்மார்க் கடைகளை பூட்ட வேண்டும்.

    10-ம் திருவிழா அன்று கோயில் முன்பு ஒவ்வொரு தசரா குழுக்களாக அனுப்ப வேண்டும் கடற்கரையில் பெண்கள் உடை மாற்ற தற்காலிக அறைகள் அமைக்க வேண்டும். போதுமான குடி நீர், கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். கோயில் நிகழ்ச்சிகள் அனைத்தும் யூடிப் சேனலில் ஒளிபரப்ப வேண்டும்.

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக சென்னை, கோவையில் இருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டும், ஏராளமான தசரா குழுக்கள் கோயிலில் முறையாக பதிவு செய்யப்பட்டு கோயில் நிர்வாகம் வழங்கும் ஆலோசனை படி குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

    ஆனால் சில தனிநபர்கள் தசரா ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை துவங்கி பணம் வசூலிப்பதாக தெரிகிறது. இவ்வாறு தனி நபர்கள் நடத்தும் குழுக்களுக்கு தடை விதிக்க வேண்டும், 11-ம் திருவிழா அன்று அதிக அளவு வாகனம் செல்வதால் அன்று தூத்துக்குடி மாவட்டம் மட்டும் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    பின்னர் அதிகாரிகள் கூறுகையில் தசரா குழுவினர் கோவிலுக்கு வரும் போது பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அமைதியாக அன்னை முத்தாரம்மன் நாமத்தை மட்டுமே சொல்லி வர வேண்டும், ஜாதி கோஷங்கள் எழுப்ப கூடாது. ஜாதி அடையாளத்துடன் பேனர்கள், கொடிகள், டீ சர்ட் அணிந்து வரக்கூடாது.

    போலீஸ் வேடம் அணியும் பக்தர்கள் கண்டிப்பாக முகத்தில் கலர் பவுடர் பூச வேண்டும், இரும்பினால் செய்யப்பட்ட ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கோவிலுக்கு கொண்டு வரக்கூடாது என தெரிவித்தனர். தசரா ஒருங்கினணப் குழுவிற்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் காணிக்கையை கோவில் சார்பில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    இது குறித்து தசரா குழு தலைவர்கள் கூறுகையில் தசரா குழுக்கள் நடத்தும் அனைவரும் காப்பு அணிந்து மிகுந்த பக்தியுடன் இருப்பார்கள். எனவே எங்கும் ஆபாச நிகழ்ச்சி நடைபெறாது.

    தசரா குழுக்கள் மூலம் ஏராளமான ஏழை கலைஞர்கள் பயன் பெறுவார்கள்.எனவே வழக்கம் போல ஆபாசம், இரட்டை அர்தவசனம் இல்லாமல் கலைநிகழ்ச்சி நடத்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

    பாரத திருச் சபை சமய பேச்சாளர் மோகன சுந்தரம் நன்றி கூறினார்.

    ×