என் மலர்

  நீங்கள் தேடியது "Conservative"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிட்டன் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #BorisJohnson #Conservative
  லண்டன் :

  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நடைமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக விலகி விடும் என்பதால் வர்த்தகம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய யூனியனுடன் நடத்தப்பட்டு வருகிறது.

  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

  டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. 

  பிரிட்டனில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் அக்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கமான ஒன்று, அவ்வாறு கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். 

  ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாதந்தோறும் அக்கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டியில் இருப்பவர்கள் யார் என்பது பற்றி சர்வே நடத்தப்படுவது வழக்கம், அதில் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்று ஆன்லைன் மூலம் தாங்கள் விரும்பும் தலைவர்களுக்கு வாக்களிப்பார்கள். 

  இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட சர்வே முடிவில் 8 சதவிகிதம் வாக்குகளுடன் 5-ம் இடத்தில் இருந்த முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன், கடந்த மாதம் நடத்தப்பட்ட சர்வே முடிவில் 29 சதவிகிதக வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் அவரது செல்வாக்கு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. 

  இவரைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி சஜித் ஜாவித் 19 சதவிகித வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ஜகோப் ரீஸ்-மோக் 13 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

  பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் தெரசா மே முடிவிற்கு மறுப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்ததாலேயே கட்சியினரிடம் போரிஸ் ஜான்சன் செல்வாக்கு குறுகிய காலத்தில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  ×