search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress MLA Slaps"

    மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் ஒருவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ பொது இடத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #MadhyaPradesh #BJP #Congress
    மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் ஒருவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் தண்டா பகுதியில் மின்சாரம் தாக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்காக பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சென்றனர். அப்போது இரு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அதில், உள்ளூர் பா.ஜ.க. தலைவர் பிரதீப் காடியா என்பவரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார் கன்னத்தில் அறைந்தார். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதில், பாராட்டை பெற வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிரச்சனை வெடித்துள்ளது.

    உடனடியாக அங்கிருந்த போலீஸார் இருதரப்பையும் தடுத்து பிரித்துவிட்டனர். இதுகுறித்து பிரதீப் காடியா கொடுத்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பா.ஜ.க. தலைவரை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #MadhyaPradesh #BJP #Congress

    ×