என் மலர்

  நீங்கள் தேடியது "Confiscation of cash"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
  • 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

  கோவை:

  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பரவ்சூரி (வயது 24). இவர் அன்னூர் அருகே உள்ள பொன்னாத்து பாளையத்தில் தங்கி இருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ெதாழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

  சம்பவத்தன்று இவர் தனது நண்பரான திக்காரம் (23) என்பவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி விட்டு அறைக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் தென்னம பாளையம் - அன்னூர் ரோட்டில் நடந்து சென்ற போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பரவ்சூரியை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தினர். பின்னர் பரவ்சூரியிடம இருந்த ரூ.1,300 ரொக்க பணம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர்.

  கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

  இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வட மாநில ெதாழிலாளியை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

  ×