search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Company"

    • வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தினார்.
    • பல நாட்களாக மேற்கூறிய நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு கடன் தொகையும் வழங்கப்படவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தனிநபர் கடன் வாங்க முடிவு செய்தார். அந்த நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

    அதில் வெளியூரில் உள்ள எங்களது நிறுவனம் மூலம் குறைந்த வட்டிக்கு தனிநபர் கடன் தருகிறோம்.

    அதற்காக வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய அந்த அரசு ஊழியர் குறுந்தகவலில் உள்ள லிங்கை திறந்து அதில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தினார். ஆனால் தனி நபர் கடன் கிடைக்கவில்லை.

    மீண்டும் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதிலும் தனிநபர் கடன் தருவதாக கூறப்ப ட்டிருந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் மீண்டும் சில தவணைகளாக ரூ.3 லட்சத்து 39 ஆயிரம் செலுத்தினார்.

    ஆனால் பல நாட்களாக மேற்கூறிய நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு கடன் தொகையும் வழங்க ப்படவில்லை.

    அப்போது தான் ஏமாற்ற ப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்தார். மொத்தம் ரூ‌.5 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்‌‌.

    அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும்.
    • எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

       பல்லடம் : 

    பல்லடத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க.மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் பல்லடத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் நிறுவனம், நகராட்சி எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டம் துவங்கிய போது இது எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்த ஆதரவுக் கூட்டம். இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க, பா.ம.க., இந்து முன்னணி, கிளை நிர்வாகிகள் எழுந்து வெளி நடப்பு செய்தனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அழைத்துவிட்டு, எரிவாயு தகன மேடை ஆதரவுக் கூட்டம் என்று அறிவிப்பது முறையில்லாத செயல், அப்படி இருந்தால் முன்னரே எரிவாயு தகன மேடை ஆதரவு கூட்டம் என்று எங்களிடம் சொல்லி இருந்தால், நாங்கள் வந்திருக்க மாட்டோம், என அவர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பேசுகையில், பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும், மக்களின் ஒத்துழைப்போடு அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் எதிர்க்கிறார்கள் என அவர்களிடம் விளக்கம் கேட்டு,எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    • தீப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி பெரியகுளம் காலனியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் நாகனா புரம் புதூர் ரோட்டில் தீப்பெட்டி கம்பெனி நடத்தி வந்தார்.

    சம்பவத்தன்று இவரது கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் நந்தகுமார் மற்றும் கட்டிட உரிமையாளர் கணேஷ் ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் தொடங்கியது.
    • செல்போன் கோபுரம் பணியை தொடங்கக்கூடாது என வலியுறுத்தியும், எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவ ட்டம் பேராவூரணிபேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டாணிக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை அந்த தனியார் நிறுவனம் தொடங்கியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று (சனிக்கிழமை) தனியார் நிறுவனத்தினர் செல்போன் அமைக்கும் பணியை தொடங்கினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (வயது37) என்பவர் செல்போன் (டவர்) கோபுரம் பணியை தொடங்கக்கூடாது என வலியுறுத்தியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவீந்திரன் கையில் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த னர். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    சேலம்:

    சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் தனியார் கட்டுமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்தினரிடம் ஊழியர்கள் சம்பளம் கேட்டு வந்துள்ளனர். பல முறை கேட்டும் சம்பளம் வழங்கப்படாதால் நடவடிக்கை எடுக்க வேண்டி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கட்டுமான நிறுவனத்தினரிடம் விசாரணை நடத்தி ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படாததால் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்டோர் கட்டுமான அலுவலகத்திற்கு வந்து நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டுமான நிறுவனத்தினரிடமும் பாதிக்கப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • முகாமில் கும்பகோணம், தஞ்சாவூரை சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தோ்வு செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிறியமலா் மேல்நி லைப் பள்ளியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    கும்பகோணம் வட்டத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் கும்பகோணம், தஞ்சாவூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டதாரி வரையிலான மாற்றுத் திறனாளி மனுதாரா்கள் கலந்து கொ ள்ளலாம்.

    மேலும், மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கு வேலைய ளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்யலாம்.

    பணி வேண்டுவோா் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
    • 3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகளிர் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா மற்றும் சிறந்த மகளிர் குழுக்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடுமண்டல ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட 25 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ 1.50 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கி பேசும்போது கடந்த 10 ஆண்டுகளாக கவ்டெசி தொண்டு நிறுவன வழிகாட்டுதலோடு செயல்பட்டு வரும் மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    தவணை தொகையும் முறையாக செலுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அனிஷ்குமார், தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உதவி பேராசியர் மற்றும் தலைவர் ஜெகதீசன், ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள் சீனிவாசன், சாமிநாதன், எழில் இளங்கோ, லோகேஷ்குமார், கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் மற்றும் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கருணாமூர்த்தி கலந்து கொண்டனர்.

    முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்றார்.

    இவ்விழாவில் சிறப்பாக செயல்பட்ட 3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும், 25-க்கும் மேற்பட்ட கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கவ்டெசி தொண்டு நிறுவன அலுவலகப் பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினர்.

    • 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
    • 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் நகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தேசிய பண்டிகையான சுதந்திர தினத்தன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்றுவிடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும். நேற்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 51 முரண்பாடுகளும் என மொத்தம் 48 நிறுவனங்களில் 75 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    • ஆர்.பி அரசு என்ற நிறுவனம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றனர்.
    • இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக ரூ.1 லட்சம், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.1 லட்சம் என்று, 2 லட்சத்திற்கான வரையோலையை ஆர்பி அரசு நிறுவனர் ஆர்.விஜயராகவன் வழங்கினார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் உள்ள ஆர்.பி அரசு என்ற நிறுவனம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆர்.பி அரசு நிறுவனத்தின் உரக்கடை 16-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணனிடம் இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக ரூ.1 லட்சம், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.1 லட்சம் என்று, 2 லட்சத்திற்கான வரையோலையை ஆர்பி அரசு நிறுவனர் ஆர்.விஜயராகவன் வழங்கினார்.

    • ஹிட்டாச்சி, ஜிடெக், எல்காம்போ எலெக்ட்ரானிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களை சேர்ந்த வேலை வாய்ப்பு அலுவலர்கள் நேர்முகத் தேர்வு நடத்தினர்.
    • கல்லூரியுடன் ஹிட்டாச்சி நிறுவனம் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பாரதி கலையரங்கில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் தனியார் நிறுவன வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு, தஞ்சாவூர் மாவட்ட லயன்ஸ் சங்கம் முத்துக்குமரன், கண்ணன், வாசு, ஹிட்டாச்சி நிறுவன வேலை வாய்ப்பு நியமன அலுவலர் சரவணன் தலைமையில் ஹிட்டாச்சி, ஜிடெக், எல்காம்போ எலெக்ட்ரானிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களை சேர்ந்த வேலை வாய்ப்பு அலுவலர்கள் நேர்முகத் தேர்வு நடத்தினர்.

    முகாமில் 57 பேர் கலந்து கொண்டனர். இதில் 15 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், ஆண்டு தோறும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கல்லூரியுடன் ஹிட்டாச்சி நிறுவனம் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். விழாவில் பேராசிரியர்கள் முனைவர் ராணி, பழனிவேல், ஞானசேகரன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசுகளில் மானியக்குழு நிதி, மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

    பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.இருப்பினும், சில ஊராட்சிகளில், முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சி அனுமதி பெறாமல், அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் செயல்படத்துவங்கினால், பணியாளர்களின் நலன் கருதி, அதனை தடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சொத்து வரி செலுத்தாமல் இருப்பது, தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமல் இருத்தல் என வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது. இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களைக்கண்டறிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த மாதம் வந்த தேர்வு முடிவில் 3 பாடத்தில் சஞ்சய் தோல்வி அடைந்தார்.
    • சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டி பாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (45). இவரது மனைவி சுமதி. அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். சுமதி பவானி அருகே உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு சஞ்சய் (15), சந்துரு (13) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த மாதம் வந்த தேர்வு முடிவில் 3 பாடத்தில் சஞ்சய் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்தார். ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து அப்புசாமி குடித்து விட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×