search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Community baby shower"

    • 200 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

    தாராபுரம் :

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் தாராபுரம் புறவழி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 200 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊரக வளர்ச்சி முகமையின் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் தலைமை தாங்கினார்.ஆர்.டி.ஓ. குமரேசன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், தாசில்தார் ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ராமர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கே.கே.ஜீவானந்தம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வனஜா, தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.முகனியரசி முன்னிலையில் நடைபெற்றது.
    • வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.முகனியரசி முன்னிலையில் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் உப்புபாளையம் ரோட்டில் உள்ள ராசி மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு விழா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி தலைமையில், வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.முகனியரசி முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் கு.மரகதம் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் 5 வகையான உணவு, ரொக்கம் ரூ. ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலம் முன் பின் பராமரிப்பு ,குழந்தைக்கு உணவு ஊட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்ற பல தகவல்களை குறித்து எடுத்துக்கூறினார்.

    இதில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஏ.லட்சுமணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி, வெள்ளகோவில் தி.மு.க.நகர செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், முத்தூர் பேரூர் கழக செயலாளர் செண்பகம் பாலு, முன்னாள் நகர செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர்கள் ஜெயக்குமார், எத்திராஜ், வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன் குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் நளினி கார்த்திகேயன், ஏ.என்.சேகர், செல்வராஜ் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி பிரமுகர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×