search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commits"

    • குடும்ப பிரச்சினை காரணமாக செந்தில் குமார் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
    • விஷம் குடித்த அவரை உறவினர்கள் மீட்டு அம்பை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள கீழ கொட்டாரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார்(வயது 49). தொழிலாளி.

    குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி ராஜம்மாள்(45) இவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட செந்தில்குமார் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு அம்பை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுதொடர்பாக வி.கே.புரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூர் சர்க்கரைபாளையம் பழனி தெருவை சேர்ந்தவர் ஜோதி (70).

    இவர் கடந்த 2 வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு ஜோதி தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தோடு அருகே வயிற்று வலி குணமாகவில்லை என கூறி வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் டீயில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சக்தி மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சோபனா (37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சோபனாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சோபனா தற்கொலை செய்ய முடிவு எடுத்து சம்பவத்தன்று டீயில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

    இதையடுத்து சோபனாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதய பிரச்சனை காரணமாக முதியவர் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலம் செல்லாம்பாளையம் மேலூரை சேர்ந்தவர் கந்தசாமி(80). இவருக்கு இதய பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கந்தசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

    சம்பவதன்று வீட்டில் இருந்து வெளியேறி வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அங்கு அவரது லுங்கியால் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பர்கூர் போலீசார் விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை அருகே கடந்த 15 வருடமாக வள்ளியத்தாளுக்கு மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இருப்பினும் மூட்டு வலி குணமாக வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அரச்சலூர் ரோடு, எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் வள்ளியாத்தாள் (85). தனது மகன் குமாருடன் வசித்து வருகிறார். கடந்த 15 வருடமாக வள்ளியத்தாளுக்கு மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இருப்பினும் மூட்டு வலி குணமாக வில்லை என கூறப்படுகிறது.

    எனவே கடந்த சில மாதங்களாக வள்ளியாத்தாள் நடக்க முடியாமல் கடும் அவதி அடைந்து மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வள்ளியாத்தாள் வீட்டின் கழிப்பறைக்கு சென்று மண் எண்ணை தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகன், மருமகள், பக்கத்து வீட்டு சேர்ந்தவர்கள் ஓடிவந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி வள்ளியாத்தாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனி 6-வது வீதியை சேர்ந்தவர் பொன்னரசு (60). இவா் கடந்த 10 ஆண்டுகளாக மன சோர்வு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பொன்னரசு சம்பவத்தன்று சல்பாஸ் மாத்திரையை (விஷ மாத்திரையை) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பொன்னரசை மீட்டு சிகிச்சைக்காக கருங்கல்பா–ளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை–யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்த மிஷின் ஆப்பரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (38). தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நிர்மலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நிர்மலின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு காட்டுப்புதூர் திருமண விழாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது நிர்மல் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் நிர்மல் வரும் வழியிலேயே இறந்து–விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை திருப்பி செலுத்த முடியாததால் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
    • இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி பொன்னி நகர், முதல் வீதியை சேர்ந்தவர் அசோக் (30). ஆக்டிக் டிரைவர். இவரது மனைவி லலிதா (27). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சொந்த வீடு கட்டுவதற்காக அசோக் வங்கி ஒன்றில் கடன் பெற்றிருந்தார்.

    அதற்கு முறையாக லோன் கட்டி வந்து இருந்த போது கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் அவரால் வங்கியில் லோனை குறிப்பிட்ட நேரத்திற்கு கட்ட முடியவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஊருக்கு சென்றிருந்த லலிதா தனது அம்மாவுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள் அறையில் அசோக் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அசோக்கை மீட்டு சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அசோக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன விரக்தியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×