என் மலர்
நீங்கள் தேடியது "college student missing"
ஈரோடு, நியூ டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். ஜவுளி வியாபாரி. இவரது மகள் நந்தினி(வயது21). ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார்.
நந்தினி காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வருவது வழக்கம். இதே போன்று நந்தினி கடந்த 18-ந் தேதி(திங்கட்கிழமை) காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் நந்தினியை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து நந்தினியின் தந்தை தங்கராஜ் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேனி அருகே சின்னமனூர் சீலையம்பட்டி கந்தசாமி செட்டியார் தெருவை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மகள் சந்தியா (வயது17). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று சந்தியா தம்பியுடன் கம்ப்யூட்டர் பழுது பார்க்க செல்வதாக வீட்டில் கூறி உள்ளார். வெகுநேரமாகியும் சந்தியா வீடு திரும்பாததால் அவரது தந்தை மணிமுத்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் மணிமுத்து சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி சந்தியாவை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனூர் வி.மணவெளி கணபதிநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். 2 வீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார்.
இவரது மகள் சண்முக பிரியா (வயது 20). இவர் சென்னை தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் குடியரசு தின விடுமுறையில் வீட்டுக்கு வந்த சண்முக பிரியா நேற்று முன்தினம் மாலை தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறி உள்ளார். இதனால் அவரது தாய் மாத்திரை வாங்க மருந்து கடைக்கு சென்றார்.
மாத்திரை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது, சண்முகபிரியாவை காணவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களில் தேடியும் எங்கும் சண்முகபிரியாவை காணவில்லை.
இதுகுறித்து சங்கர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஏட்டு கிருபாகரன் வழக்கு பதிவு செய்து சண்முகபிரியாவை தேடி வருகிறார்.
விருதுநகர்:
விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்தவர் மாரிக்கனி. இவரது மகள் பெத்து மணி (வயது 20).
இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணன். இவருடன் பெத்துமாரி அடிக்கடி பேசியுள்ளார்.
இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கண்ணன் குடும்பத்தினர் மதுரைக்கு மாறி விட்டனர். அதன் பின்னர் பெத்துமாரி செல்போன் மூலம் கண்ணனிடம் பேசி வந்தாராம்.
இந்த நிலையில் மாரிக்கனியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். அவரது மனைவி மீனாட்சியும் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அப்போது தனியாக வீட்டில் இருந்த பெத்துமாரி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து பாண்டியன் நகர் போலீசில் மீனாட்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெத்துமாரியை தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் திடீர் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் அவரது மகள் மஞ்சுளாதேவி (வயது 18). இவர் திண்டுக்கல் அம்பாதுறையில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று மதுரைக்கு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்ததில் அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகன் ஜெயபாண்டியனுடன் மஞ்சுளா தேவி மாயமாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து மஞ்சுளாதேவியின் தாயார் கோமதி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தேனி அருகே மேட்டு வலவு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 22). ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு சென்று தேர்வுக்கு பணம் கட்டி வருவதாக தனது தந்தையிடம் கூறிச் சென்றுள்ளார். இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர்.
எங்கு தேடியும் மாணவி பிரியதர்ஷினி கிடைக்காததால் அவரது தாய் மல்லிகா தனது மகளை யாரேனும் கடத்தி சென்றிருக்க கூடுமோ? என்ற சந்தேகத்தில் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.